Browsing: tha.pandian

8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்!: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..!!

இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுக்களை மேடைகளில் தோழர் தா.பாண்டியன் மொழிபெயர்த்துள்ளார். ஜனசக்தியில் 1962ல் எழுதத் தொடங்கிய தா.பாண்டியன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி’ என்ற புனைபெயரில் கட்டுரைகளை தா.பாண்டியன் எழுதி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மொத்தம் 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். தா.பாண்டியனின் மேடைப்பேச்சு, பொதுவுடமையரின் வருங்காலம் போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றவை.

தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!

ஜனசக்தியில் வேலை செய்த போது, தோழர் தா.பாண்டியன் அவர்களுடைய தலையங்கத்துக்காக காத்திருப்போம்… அவர் எழுதும்போது ஒரு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்… வேகமாக எழுதுவார்… பேசும்போது அழுத்தம் திருத்தமாக பேசுவார்… நமக்கு கருத்து மாறுபாடு இருந்தாலும் தனது நிலையை ஒருவர் எப்படி வௌிப்படுத்த வேண்டும் என்பதற்கு உதாரணமானவராக அவர் இருந்தார்… எனது எழுத்து பயணத்தில் முதல் கவிதை நூலுக்கு எழுத்தாளர் மாலனிடமும், முதல் அறிவியல் நூலுக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியிடமும், முதல் வரலாற்று நூலுக்கு (லத்தீன் அமெரிக்கா)…