Browsing: thanjavur

தஞ்சை சதய விழாவில் முதன்முறையாக தமிழில் மந்திரம்

ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதன்முறையாக தமிழில் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யப்பட்டது. பூஜையின்போது திருவாகசம், தேவாரம் பாடல்களை பாடினர். தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையினை ஏற்று இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டதின் பேரில் தமிழில் பாடி பூஜை செய்யப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா இன்று 26.10.2020 திங்கட் கிழமை நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை முடிவு செய்ததன்படி இன்று…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு. மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம்…

நடிகை ஜோதிகா குறிப்பிட்டுப் பேசிய மருத்துவமனையில் பிடிபட்ட பாம்புகள்…

நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை, முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பேசியது, தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, தன் மனைவி கூறிய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஆன்மீகப் பெரியோரின் எண்ணங்களைத் தான் ஜோதிகாவும் கூறினார், அவர் கூறிய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார். அதில் விவேகானந்தர், திருமூலர் போன்ற மகான்களின் கருத்துகளை மேற்கோள்காடியிருந்தார்.…

நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌ – சூர்யா

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் ஜோதிகா பேசியபோது, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக நெட்டிசன்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஜோதிகாவுக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் விளக்கமளித்தபோதும், இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்போது சூர்யா இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கற கருத்து ‘சமூக ஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌.…

பெரிய கோவிலில் தமிழ் வெல்லுமா?

தமிழனின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்தவேண்டும் என்பதற்கே தமிழர்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்த திட்டமிட்டபோது, அவனைச் சுற்றியிருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக சமஸ்கிருத மந்திரம் ஓதி குடமுழுக்கை நடத்திவிட்டார்கள். இது, ராஜராஜனின் குருவான கருவூரார் சித்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ராஜராஜனை சபித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு…