Browsing: thanthai periyar

சாதியை சொல்லி கேவலமாக திட்டிய காடுவெட்டி குரு – கலைஞரின் மௌனத்திற்கு காரணம் #kalaignar #கலைஞர் #anna

சாதியை சொல்லி கேவலமாக திட்டிய காடுவெட்டி குரு – கலைஞரின் மௌனத்திற்கு காரணம் #kalaignar #கலைஞர் #anna https://youtu.be/cmbNsX9GD0w

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், ஒன்றிய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகத்தின் பன்முகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது அவசியம் என்று கூறியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அளவில் அழுத்தம் கொடுத்து செயல்முறைக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் *ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை… ‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பது நீண்ட காலமாக அனைவரும் அறிந்த சொலவடையே! நமது நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்தின்…

கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்தார் திமுக எம்பி கனிமொழி. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் “எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார். அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை…

1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்

முதன் முதலில் அவர் ஒரு கணினியைக் கண்டபோது, அதன் செயல்பாடுகள் பலன்களை எல்லாம் கேட்டுவிட்டு அருகில் இருந்தவரிடம், “எல்லாம் செய்யும் என்று சொல்கிறாயே , இந்த கம்ப்யூட்டர் கவிதை எழுதுமாய்யா” என்று நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார். கம்ப்யூட்டர் இன்னும் கவிதை எழுதிவிடவில்லை. ஆனால், கணினித்துறையில் தமிழர்கள் பல வெற்றிச் சரித்திரங்களை எழுதியிருக்கிறார்கள். அந்த வெற்றிக்கதைகளில் எல்லாம் கலைஞர் இருக்கிறார். ஆம், இன்றைக்கு மென்பொருள் துறையில் அமெரிக்கா முதல் உலகெங்கும் பணிபுரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு தமிழர்களின் வெற்றிக்குப் பின்னாலும் கலைஞர் இருக்கிறார்.…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin

கலைஞருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரம். எப்போதும் போல அவர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. அலைபேசியில் பல நாட்களாக சேமித்துக் கிடந்த பல எண்களிலிருந்தும் அழைப்புகள். “இன்னைக்கு நைட்டு அறிவிச்சிடுவாங்களா?” ”அண்ணா சமாதி பக்கத்திலே இடம் ரெடியாகுதாமே” “ராஜாஜி ஹாலை க்ளீன் பண்ணி லைட்டு போடுறாங்களாமே?” -என ஆளாளுக்குத் தங்கள் ‘விருப்பங்களை’க் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் அரசியல் பண்பாட்டுடன் கோபாலபுரம்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin

அவர் எளியவர்களைக் குனிந்து பார்த்து அக்கறையுடன் கவனிக்கிறார். அவரைத் தமிழகம் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறது. முதல்வராகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் நிறைவடையவில்லை. தேர்தல் களத்தில் பெற்ற வெற்றியைக் கொண்டாடக்கூட முடியவில்லை. நோய்த்தொற்று எனும் பேரிடர் காலத்தைப் போர்க்களத்திற்கான வியூகத்துடன் கையாள்கிறார். ஆட்சியின் தொடக்க நிலையில், கட்சி கடந்து அவரது செயல்பாடுகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தக்க வைப்பதிலும் மேம்படுத்திக் கொள்வதிலும்தான் அவரது தொடர்ச்சியான வெற்றி உறுதி செய்யப்படும். தன்னை இந்த தமிழ்நாட்டு மக்களிடம் மெய்ப்பிப்பதற்கு அவருக்கு…

கலைஞர் ஏன் 2002க்கு பிறகான வாழ்க்கை வரலாறை எழுதவில்லை? – LR Jagadheesan

கலைஞரை வர்ணிக்கும்போது இந்தியாவின் நம் சமகால philosopher-king அவர் என்பார் நண்பர் A S Panneerselvan. (கலைஞர் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய பன்னீர்செல்வன்). நேரு, அண்ணா, கலைஞர் என்கிற வரிசை அது. அதாவது வலுவான சிந்தனையாளன்/கொள்கையாளனே ஆட்சியாளனாகவும் இருப்பதை குறிக்கும் சொல் philosopher-king. அதில் கவிஞனாகவும் இருந்தவர் கலைஞர். உண்மையான கவியுள்ளத்தின் தனித்துவம் என்பது வெறும் கவிதை எழுதுவது மட்டுமல்ல. அதன் அடிப்படை சிந்தனையே அதிகாரத்துக்கு எதிராகவே இருக்கும். இயங்கும். சமூகத்தை இயக்கும். குறைந்தபட்சம் இயக்க…

தலைவனை உருவாக்கிச் சென்ற தலைவன்! Athanur chozhan

தமிழக அரசியல் வரலாற்றில் 2016 தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கலைஞர் பொறுப்பேற்கவில்லை. முதன்முறையாக திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்தப் பிரச்சாரத்திற்கு முன்னதாக 2014 மக்களவைத் தேர்தலிலும் அவர்தான் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகராக இருந்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் திமுக சந்தித்தது. காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் சுமாராக 7 முதல் 10 தொகுதிகள் வரை திமுக கூட்டணி ஜெயித்திருக்கலாம் என்ற உண்மை புரிந்தது. இந்நிலையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தலில்…

கலைஞரை ஒழிக்க கட்சியை உடைத்த சம்பத், கண்ணதாசனின் கதி! – Athanur chozhan

1961 ஜனவரி 21, 22 தேதிகளில் வேலூரில் திமுகவின் பொதுக்குழுவும் செயற்குழுவும் தொடங்கியது. முதல்நாள் செயற்குழு கூடியது. கூட்டத்திற்கு சம்பத் தலைமை வகித்தார். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கு சரியான உதாரணமாக சம்பத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. செயற்குழுவில் பேச எழுந்த மதுரை முத்து, கட்சியின் சட்டதிட்டங்களில் திருத்தம் கொண்டுவர தீர்மானங்கள் கொண்டுவந்தவர்களைப் பற்றி பேசினார். உடனே, “சபையில் இல்லாதவர்களைப் பற்றி பேசக்கூடாது” என்று சம்பத் கூறினார். இதற்கு பதிலளித்த பேராசிரியர் அன்பழகன், “இது சட்டமன்றமோ நாடாளுமன்றமோ இல்லை.…

1961ல் கலைஞர் பொதுச்செயலாளர் ஆவதை தடுக்க ஈவெகி சம்பத் செய்த சதி! – Athanurchozhan

கலைஞர் தலைமையில் நியமிக்கப்பட்ட பொறுப்புக்குழுவின் பிரச்சாரத்தால் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியவுடன் கலைஞரின் செல்வாக்கு கட்சியினர் மத்தியில் உயரத் தொடங்கியது. அத்துடன் திமுகவில் கோஷ்டி மனப்பான்மையும் உருவாகத் தொடங்கியது. இந்நிலையில் மாயவரத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட முடியாது என்ற திருத்தத்தை இணைக்க ஈ.வே.கி.சம்பத் முன்மொழிந்தார். 1961ல் நடைபெறவுள்ள திமுகவின் மூன்றாவது மாநாட்டில், நெடுஞ்செழியனுக்கு பிறகு, கலைஞரை பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்ய பெரும்பான்மையான கட்சிக்காரர்கள்…

சில பார்ப்பன பொய்களின் பின்னணியில் உள்ள நிஜங்கள்!

சட்டசபையில் பலர் முன்னிலையில் தன் சேலையைக் கிழித்து, மானப்பங்கப்படுத்தினார் துரைமுருகன் என கண்ணீர் மல்க தலைவிரிக் கோலத்துடன் பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா! அதை அவர் புகாராகவும் கொடுக்கவில்லை, அந்த பேட்டிக்கெதிராக துரைமுருகன் அவதூறு வழக்கும் தொடுக்கவில்லை. எனில் ஜெயலலிதா சொன்னதுதான் உண்மையா? அப்படியிருந்திருந்தால் அதன் பின் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜெயாவால், துரைமுருகனை பழி தீர்த்திருக்க முடியாதா? அல்லது துரைமுருகனால்? பெண் என்பதால் அதை ஓர் ஆயுதமாக ஜெயலலிதா உபயோகித்துக் கொண்டார். அதைவைத்து எதிரியை வீழ்த்தியதும் அதை…

திமுக எனும் கலகக்குரலை அடக்க உருவாக்கப்பட்டதே அதிமுக – Amudhan Ramalingam Pushpam

ஜெயா காலில் ஆண்கள் விழுந்து வணங்கியது ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலா? அல்லது சூத்திரர்களின் மண்டியிடலா? அது பாலினப்போரா அல்லது சாதியப் போரா? நிறையப்பேர், குறிப்பாக படித்தவர்கள் ஜெயலலிதாவை ஆண்கள் உலகில் சாதனை புரிந்த வீரப்பெண்மணி என்று சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கலாம். அவர் வெறும் பெண் அல்ல, ஐயங்கார் பெண் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறியதையும் நாம் பார்க்கலாம். அதிமுக எனும் கட்சியே திமுக எனும் கலகக்குரலை நீர்த்துப்போக வைக்க உருவாக்கப்பட்ட மன்னிப்புக் கடிதம் தான். “நாங்கள் அவ்வளவு…

1 2 3