Browsing: Theatres

மிஷ்கினை அதிர வைத்த திரையரங்கு உரிமையாளர்

இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டாவது முறையாக என்னைப் படம் பார்க்கவைத்தார். அதுதான்…

தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இயக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. திரையரங்குகள் இல்லாததால் திரைத்துறையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. தற்போது மத்திய அரசு தளர்வுகள் அளித்துள்ளதை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் தியேட்டர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்து வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்குமாறு…

தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகள் வரும் அக். 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இதனால் தமிழகத்திலும் திரையரங்குகளை விரைவில் திறக்கவேண்டும் என்றும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை என்றும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ…

சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்

கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறந்தால் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் கொடுப்பார்களா என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து ஆகஸ்டு 9 அன்றுட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், “சிவாஜி, எம் ஜி ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கிக்…

செப்டம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்படுமா?

கொரானா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் தமிழக அரசு சொல்லும் விதிமுறைகளையும் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறி வருகின்றனர் இந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என உறுதி செய்யப்படாத அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு…

திரையரங்குகள் திறப்பு அறிவிப்பு பங்குசந்தையில் பண புழக்கம் நீடிக்குமா?

கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசம் தழுவிய ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 18ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்று திரையரங்குதரப்பில்எதிர்பார்த்திருக்கிறார்கள். என்னதான் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் வீட்டு TVயில் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்கும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை. இந்த நிலையில் மக்கள் மத்தியில்…

திரையரங்குகளுக்கு தளர்வுகள் இல்லைஅமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 120 நாட்களுக்கும் மேலாக அவை முடங்கிப் போயிருக்கும் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரையுலகினர் பலரும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்களில்…