Browsing: train

புத்தகமே டிக்கெட்

நெதர்லாந்து அரசாங்கம் தேசிய புத்தகத்தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ரயிலில் பயணிகள் டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது புத்தகம் படிக்கிறவர்களுக்கு ரயில் பயணம் இலவசம்.1932 முதலே நெதர்லாந்து அரசாங்கம் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இலக்கிய நிகழ்வுகள், புத்தக வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நூல்களை அரசே அச்சிட்டு இலவசமாகவும் வழங்கி வருகிறது.டச்சு இலக்கியங்களை கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் புத்தக வாசிப்பு தினங்களாக…

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்

தீபாவளி, நாவராத்திரி பண்டிகைகளுக்காக இயக்கப்பட உள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தீபாவளி, ஆயுதபூஜை, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதாவது, கயாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்.15, நவ. 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் அதிவிரைவு சிறப்பு ரயிலும், எழும்பூரில் இருந்து கயாவிற்கு அக்.27, நவ.3, 10, 17, 24,…

2021 ஜனவரி மாதம் முதல் ‘தங்கரதம்’

கடந்த 2007-ம் ஆண்டில் “தங்கரதம்” எனப் பொருள் படும் “கோல்டன் சேரியாட்” எனும் புதிய சொகுசு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அரண்மனை போல் உள் கட்டமைப்புடைய இந்த ரயில் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், நிர்வாக காரணங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ரயில் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தங்கரதம் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டு. ஏற்கனவே பல ஆடம்பர வசதிகளை கொண்டிருந்த இந்த ரயிலை…

இன்று முதல் இயங்குகிறது மின்சார ரயில்சேவை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் ரயில் போக்குவரத்து உள்பட எந்த போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் ஓரளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஆகியவை இயங்க தொடங்கியது. இந்த நிலையில் மின்சார ரயில் அக்டோபர் 5 முதல் இயங்கும் என ஏற்கனவே தென்னிந்திய ரயில்வே தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை…

தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ்

தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 50 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மக்களிடையே பரவி வருகிறது. இந்தி எதிர்ப்பு குறித்து டீசர்ட் அணிந்து சமீபத்தில் திரையுலகினர் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் இந்தி தெரியாவிட்டால் லோன் கிடையாது என்று வங்கி மேனேஜர் ஒருவர் கூறியதாக எழுந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வரும்…

சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவையை 30 ரயில்களுடன் மே 12-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கும் என்று ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. கோவிட்-19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களுக்கு 20,000 ரயில்பெட்டிகளை ஒதுக்கிய பின்னர், கிடைக்கக்கூடிய ரயில்பெட்டிகளின் அடிப்படையில் புதிய வழித்தடங்களில் மேலும் சிறப்பு சேவைகளுடன் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும், தினசரி 300 ரயில்களை “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்களாக இயக்க ஏதுவாக போதுமான எண்ணிக்கையில் ரயில்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.…

சிறப்பு ரயில் மூலம் 1,136 பயணிகளை அனுப்பியது தமிழக அரசு

கொரோனா தொற்று பொது முடக்கநிலை காரணமாக சிக்கித் தவிக்கும் மக்களை அனுப்பி வைக்க அல்லது அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புறப்பட்ட இடத்தில் இருந்து சேருமிடத்துக்கு நேரடியாக சென்று சேருவதாக (இடையில் வேறு எங்கும் நிற்காமல்) இந்த ரயில் சேவைகள் இருக்கும். இதனையடுத்து பீகார், ஜார்கண்ட், மேற்க வங்காளம, உத்தர பிரேதேசம் போன்ற மாநிலங்கள் தங்களது தொழிலாளர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்களை தங்கள் மாநிலங்களுக்கு அழைத்து சிறப்பு ரெயில்கள்…