Browsing: Transport

தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்துக்கு அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளின் அடுத்தகட்டமாக மாநிலம் முழுமைக்கும் பேருந்து போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 2 அன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பேருந்தில் செல்ல இயலாத நிலை இதனால் ஏற்பட்டிருந்தது. இன்றைய சூழலில் தமிழகத்தில் மாவட்டங்ளுக்கு இடையிலான போக்குவரத்து அவசியமாக இருக்கும்…

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது! – அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் பேருந்து கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனினும் குறைவான மக்களே பேருந்துகளில் பயணித்து வரும் நிலையில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் “தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்தியில்…