Browsing: Trichy

திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இரவோடு இரவாக வந்து காவி சாயம் பூசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே…

இரண்டாவது தலைநகரம் கோவையை அறிவிக்க புதிய கோரிக்கை

தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் விவாதத்தில் கொங்கு மண்டலமும் இணைந்துள்ளது. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. தென்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், வேலைவாய்ப்பு பெருகவும் மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு குரலெழுப்பினர். ஆனால், திருச்சியைத்தான் எம்.ஜி.ஆர் தலைநகராக்க விரும்பினார், அதனால் திருச்சியைத் தலைநகராக்க வேண்டுமென அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

தமிழக இரண்டாவது தலைநகர் திருச்சியை முன்மொழியும் திருநாவுக்கரசர்

தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அது பல காரணங்களால் தடைப்பட்டுவிட்டது. இதனிடையே மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் புதுக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனை வழிமொழிந்த அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.ஜி.ஆர் மதுரையை இரண்டாம் தலைநகராக்க…

கைதிகளால் 1 லட்சம் மாஸ்க் தயாரிப்பு – திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் தேவைப்படுவோர் 99655 56681, 88385 43180 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சியில் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு: பீலா ராஜேஷ்

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை முன் கூட்டியே தினகரன் நாளிதழில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார்.