Browsing: Twitter

அகமது முகமதில்…முகமது? கண்ணாடி ஒரு ரசாவாதி ! அலாவுதீன் அற்புத விளக்கு போல்…. பிம்பம் உரச உரச… ரசம் கூடும்

க்ரைம், திரில்லர் ஜானரில் இயக்குநர் எழில் இயக்கும் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இப்படத்தின் இடைவேளையில், மேக்கப் போடும்போது கண்ணாடியில் முகம் பார்த்த பார்த்திபனுக்கு, அப்போது தோன்றிய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அகமது முகமதில்…முகமது? கண்ணாடி ஒரு ரசாவாதி ! அலாவுதீன் அற்புத விளக்கு போல்…. பிம்பம் உரச உரச… ரசம் கூடும், ரசனையும்! தன் வசமுள்ள திறன் வளர்பிறை ஆகும். கண் மூடி வரும் கனவு, கண்மூடித்தனமானது. யாரும்…

கனிமொழிக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டது – ப.சிதம்பரம்

கனிமொழிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்ற மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி, நீங்கள் இந்தியரா எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியிடம் தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு தன்னை இந்தியரா எனக் கேட்டதாகவும் குறிப்பிட்ட கனிமொழி, இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை…

சோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி

ஊரடங்கால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், தற்போது மாடுகளுக்குப் பதில் மகள்களைப் பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு உதவி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.கொரனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஸ்வரராவ்.மகாரஜுபள்ளி பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட நாகேஸ்வரராவ், 17 ஆண்டுகளுக்கு முன்பு மதனபள்ளி நகருக்குப் பிழைப்புத் தேடி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இவருக்கு வெண்ணிலா (20),…

கந்தசஷ்டி கவசம் – காலங்கடந்து மௌனம் கலைத்த ரஜினிகாந்த்

கந்த சஷ்டி கவசத்தை பற்றி விமர்சித்து கறுப்பர்கூட்டம் யூடியூப் சேனலில் காணொலி வெளியானது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் இருந்த செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கிடையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல காணொலிகள் இருந்ததாகக்…

மோடி அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி கிண்டல்

கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை ஹிந்தி மொழியில் கேலித்தொனியில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சாதனைகளால் கொரோனா…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் தாம் பேசியதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். டிரம்ப் உடனான பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை பற்றி டிரம்ப்புடன் விவாதித்தேன். ஜி-7 மாநாடு, கொரோனா, உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் பற்றி விவாதித்தோம் எனவும் கூறினார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் இணையும் படத்துக்காக… வழி விடுமா காலம்…சேரன் டுவீட்

சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்..என தெரிவித்துள்ளார். சேரனின் பதிவிற்கு, அவரது ரசிகர் ஒருவர், காலம்..நேரம் விரைவில் கைகூடும் சார்…கிழக்குசீமையில் உதித்த பாசமலர் போன்ற படைப்பாக வரப்போகும் அவ்வுயர் படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்..

மக்களை கைதட்ட, டார்ச் அடிக்க சொல்வதாலோ பிரச்சனை தீராது….ராகுல் காந்தி ட்விட்

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து…

நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் – கமலஹாசன்

பிரதமர் நரேந்தி மோடி அவர்கள் நேற்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது வரும் 5-ஆம் தேதி நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு பால்கனிக்கு வந்து அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்றும் அல்லது மொபைல் டார்ச் அல்லது டார்ச் லைட்டை ஒளிவிட செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை நிரூபிக்கலாம் என்றும் அவர் கூறினார். பிரதமரின் இந்த யோசனையை ஒரு சில…