Browsing: udhayanidhi stalin

அமைச்சர்களில் இவர்தான் டாப் என்றால் மற்றவர்கள் டூப்பா? உதயநிதி பேச்சால் சலசலப்பு #udhayanidhistalin

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளில் ஒருவை நம்பர் ஒன் என்று உதயநிதி குறிப்பிட்டதால் மற்ற அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.. https://youtu.be/lAzXe5hLNjY

உதயநிதிக்கு பள்ளிக்கல்வித் துறையா? – கோட்டையில் கசிந்த தகவல்கள்!

கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித் துறையே நாசமாகிவிட்டதாகவும், இதற்கு காரணம் ஐஏஎஸ் அதிகாரிகளின் கூத்துதான் என்றும், உதயசந்திரனின் அதிகாரக் குவிப்பும்தான் என்று பரவலாக பேசப்படுகிறது. செங்கோட்டையனே பரவாயில்லை என்று பேசும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம்தேடி கல்வி திட்டத்திலேயே நிறைய பணம் கொள்ளைபோனதாக சொல்லும் நிலையில், அந்தத்திட்டத்தால் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற புள்ளிவிவரமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் நீடிப்பது தேவையற்றது என்று அனுபவமிக்க ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால்,…

எள்ளி நகையாடப்படும் பள்ளிக்கல்வித் துறை – LRJ

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கைகளில் ஜாதிக்கயிறு கட்டும் வழக்கம் எப்போது முதல் தொடங்கியது? யார் ஆட்சிக்காலத்தில் அது ஒரு இயக்கமாய் ஊக்குவிக்கப்பட்டது? யாரால்? எதற்காக? இதையும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பாரோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? பள்ளி மாணவர்களின் கைகளில் இருக்கும் ஜாதிக்கயிறுகளை நீக்கவேண்டியது யார்? பெற்றவர்களா? ஆசிரியர்களா? இதில் யார் முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும்? அமைச்சர் விளக்குவாரா? அல்லது வழிகாட்டுவாரா? பள்ளிகளில் அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் ஜாதி, மத, புற…

புதுச்சேரி மீது கவனம் செலுத்துவாரா மு.க.ஸ்டாலின்? – ஆரோக்கியராஜ் செல்வராஜ்

தமிழ்நாட்டை ஒருவழியாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இனி எல்லாம் சுபமாகவே நடக்கும் என்ற நம்பிக் கையை ஏற்படுத்தி இருக்கிறது அவருடைய இந்த 9 மாத ஆட்சி. மு.க.ஸ்டாலினை தங்களுடைய நெருங்கிய உறவாகவே மக்கள் கருதத்தொடங்கி விட்டார்கள் என்பது அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த மக்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளே தெரிவிக்கின்றன. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியா வுக்கே விடியலைத் தரப்போகிற தலைவர் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படிப்பட்ட தலைவருக்கு புதுச்சேரி மக்கள் சார்பில்…

உதயமுகம் வார இதழின் இரண்டாம் இதழ் 2 – உங்கள் பார்வைக்கு….

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 2 – உங்கள் பார்வைக்கு…. முழுமையாக வாசிக்க இணைப்பை சொடுக்கவும்… Uthayamugam 2nd issue

பாக்ஸ்கான் விவகாரத்தில் வதந்தியாளர்களை தூக்கில் கூட போடலாம்! – ARULRAJ

எதற்காக இவ்வளவு ஆவேசம் என்று கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள் அதற்கு உண்டான அர்த்தம் புரியும். பாக்ஸ்கான் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தில் உள்ள இந்த நிறுவனத்தில் சுமார் 15,000 பேர் பணிபுரிகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் தங்குவதற்கு மற்றும் உண்பதற்காக விடுதிகள் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இதில் நிறுவனத்திற்கே நேரடி தொடர்பு இல்லை என்கிறபோது அரசாங்கத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை என்கிற…

குடிமக்கள் பற்றி அரசு அறிய தனி செயலி – முதல்வர் பார்வைக்கு ஒரு யோசனை!

இன்றைய இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் எல்லாவிதமான தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு செயலி அரசின் சார்பாக உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழவேண்டும். தனித் தகவல்கள் அனைத்தும்… ஓட்டுநர் உரிமம்… வாகனங்களின் விவரங்கள்… ரேசன் அட்டையின் முழு விவரங்கள்… அரசால் விதிக்கப்படும் அபராதங்கள்… கடவுச்சீட்டு விவரங்கள்… விவசாயி என்பதற்கான முழு விவரங்கள்… அரசின் எந்தெந்த சலுகைகள் யார் யாருக்குப் பொருந்தும் என்ற முழு விவரங்கள்… ரேஷன் விநியோகம்… கட்ட வேண்டிய வரி விவரங்கள்… வருமான வரி தொடர்பான…

கலைஞர் நினைவு நாளுக்கு பெருவிழாக்கள் வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கலைஞரின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டும் என, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ‘ஆகஸ்ட் 7. ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற, வைர நெஞ்சம்…

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!

இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும். ஏனென்றால் கலைஞரைப்பற்றி திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அவைதான் இன்றைய இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியும். சரி, வரலாறைக் கவனமாக படியுங்கள். கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (முக்கியமான உண்மை அவர் முதன்…