Browsing: udhayanidhistalin

ஜாதிய பிரிவினைவாதத்தை திமுக அரசு ஒழிக்க முடியுமா?

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை திமுக அடைய போவது உறுதியாகிவிட்டது. அப்படி வென்ற பின்பு கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு,பொருளாதார சிக்கல்களை தீர்க்க திமுகவிடம் அறிவார்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்,அது பற்றிய கவலை இல்லை, ஆனால் நம் மனதை வாட்டும் கவலையில் முக்கியமான ஒன்று, தமிழ் சமூகம் ஒரு கடைந்தெடுத்த ஜாதிய சமூகம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்திருக்காது. இங்கு தான் நம் கவலைக்கான முக்கிய புள்ளி தொடங்குகிறது…. இன்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக சிலபல…

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வரும் ராகுல் காந்தி எம்.பி.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து வருகிறார் ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ராகுலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து கார்…

உழைப்போர் கையில் பொறுப்பு – திமுக தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!

கடந்த திமுக பொதுக்குழுவில் தலைவர் ஸ்டாலின் 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்,இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன் அடிப்படையில் ஒன்றியங்களையும் மாவட்டங்களையும் பிரிக்கும்போது பழையவருடன் வேகமாக செயல்படும் புதியவர் ஒருவருக்கும் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் 30 ஊராட்சிகள் இருந்தாலும் 40 ஊராட்சிகள் இருந்தாலும் ஒன்றியத்தை இரணடாகப் பிரிப்பதுடன், பழைய ஆட்களுக்கே பெரும்பாலும் பொறுப்புகளும் கொடுக்கப்படுவதாக குறை எழுந்துள்ளது. அதாவது, 10…

உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வந்த எஸ்.வி.சேகர்

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நிவர் புயல் காரணமாக தனது பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள், போஸ்டர்கள், கொண்டாட்டங்களைத் தவிர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமென உதயநிதி கேட்டுக்கொண்டார். இதனால், பல இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் திமுகவினர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற உதயநிதி, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்…

பாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்! – bjp vs dmk

கடலுக்கடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறையை ராமர் கட்டிய பாலம் என்று கூறி, தென் தமிழகத்தை வளம்கொழிக்கச் செய்யும் சேதுசமுத்திர திட்டத்தை முடக்கியவர்கள் பாஜக சங்கிகள். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு “ராமர் எந்த கல்லூரியில் படித்து இன்ஜினியர் ஆனார்?” என்று இடக்காக பதிலளித்தவர் தலைவர் கலைஞர். ஆனால், இப்போது பாஜகவினர் முருகனைக் கைப்பற்றி திமுகவை தோற்கடித்துவிடுவார்கள் என்று பயந்து, இவர்களே முருகனின் அருளோடு உதயநிதியின் பிரச்சார பயணத்தை வரவேற்று போஸ்டர் அடிக்கும் அளவுக்கு போய்விட்டார்கள். முருகன்…

கலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சண்முகம் சுப்பையாவிற்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார். மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர்கள் குழுவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக…

ஆறுமுகசாமி ஆணைத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடையவுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணைத்திற்கு 8-வது முறையாக கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும்,வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யக்கோரியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும்…