Browsing: Uthayamugam weekly 15th issue

நீதிக்கட்சி முதல்வர்களையும் நினைத்துப் பார்ப்பாரா முதல்வர் ஸ்டாலின்? உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

கலைஞர் பிறந்த ஜூன் 3 ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும், அவருடைய கம்பீரமான சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபோது பலத்த ஆரவாரம் ஏற்பட்டது. செய்தியாளர் பகுதியில் இருந்து ஒருவர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜனை கவனித்துவிட்டு, “இப்போ, அவரு தனது தாத்தாவுக்கு எப்போ அரசு மரியாதை அறிவிக்கப்படும்னு நெனச்சிருப்பாரு’ என்றார். அவர் அப்படி நினைத்திருப்பாரா தெரியாது. ஆனால், முன்னாள் முதல்வர் என்று வந்துவிட்டால், நீதிக்கட்சி ஆட்சியில்…