Browsing: uthayamugam weekly cover story

கேதார்நாத் பாண்டே முதல் ராகுல சாங்கிருத்தியாயன் வரை… – ஆதனூர் சோழன்

அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தான். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறான். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினான் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டான். வாரணாசிக்கு சென்று, அங்கு ஏழை மாணவர்களுக்கான ஆசிரமத்தில் தங்கி சமஸ்கிருதம் கற்றான். ஒரு சந்தர்ப்பத்தில் பீகார் மாநிலத்தில்…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 25th issue layout single

பள்ளிகளில் சினிமா காட்டுங்க… ஆசிரியர்களின் சிரமத்தையும் பாருங்க… – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

பள்ளிக்கல்வித் துறையிலிருந்து வெளியான உருப்படியான அறிவிப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கான சினிமா திரையிடுவதுதான். இளம் மனங்களில் திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அனுபவப்பட்டவன் என்ற வகையில் இந்தத் திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். எனது பள்ளி வாழ்க்கையில் ‘வா ராஜா வாÕ, ‘திக்குத்தெரியாத காட்டில்’, ‘மாணவன்’ போன்ற படங்கள் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. தமிழில் பெற்றோர்களுடன் குழந்தைகளும் அமர்ந்து பார்க்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதற்கு காரணம் அத்தகைய படங்களுக்கு போதுமான ஊக்குவிப்பு இல்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கான…

உதயசூரியனின் உலக சாதனையும், சிக்கி சீரழியும் இரட்டை இலையும்..! – உதயமுகம் இதழ் கவர் ஸ்டோரி

அதிமுக என்னவோ நாகரிகத்தின் தொட்டில் போலவும், ஏதோ இந்தப் பொதுக்குழுவில்தான் அநாகரீகமான மோதல்கள் நிகழ்ந்தது போலவும் ஊடகங்கள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. அதிமுகவையே ஒரு அநாகரீகமான இயக்கமாகத்தான் எம்ஜியார் உருவாக்கினார். காங்கிர ஸுக்கும் திமுகவுக்கும் அரசியல் ரீதியாக மோதல்கள் இருக்கும். ஆனால், அன்றைக்கு காங்கிரஸ் முதல்வர்களுடனும், மற்ற அமைச்சர்களுடனும் நாகரீகமான அணுகுமுறையை கடைப்பிடித்தார் அண்ணா. ஆனால், திமுகவில் அப்பா இருந்தாலும், அப்பாவுடன் மகன் பேசுவதைக்கூட அனுமதிக் காதவர் எம்ஜியார். தனது கட்சித் தொண்டர்களும் அமைச்சர்களும் கட்சிச் சின்னத்தை…

அதிகாரிகளும் உளவுத்துறையும் எழுப்பிய சுவர் உடைபடுமா? – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

“இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும், கட்சிக்குள்ளும் நடக்கிற விஷயங்களை முதலமைச்சருக்கு உளவு சொல்லக்கூடிய அதிகாரிகளும் அந்த சுவரை எழுப்பியிருந்தார்கள். கட்சித் தொண்டர்கள்…

குடிகாரர்களிடம் கொள்ளையடிக்கும் டாஸ்மாக் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட் களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது, குவார்ட்டர் 100 ரூபாயாக இருந்தாலும், 500 ரூபாயாக இருந்தாலும் 5 ரூபாய் லஞ்சம் கொடுக்கனும். அரசு விற்கும்…

கோபேக் மோடி ட்ரெண்டிங்கும், வச்சி செய்த ஸ்டாலினும் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

எடப்பாடி பழனிச்சாமி அரசில்கூட மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்த தில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை தெறிக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்ததும் அடக்கி வாசிக்கிறது. திராவிட மாடல் அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் முதல்வர் ஸ்டாலின் பின்வாங்கி விட்டாரா? முன்னர் மோடியை எதிர்ப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டதா? என்றெல்லாம் கேள்விகளை கேட்டார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமலே இத்தகைய கேள்விகளை பரப்பினார்கள். விவாதித்தார்கள். மோடி வந்து…

ராகுல் நடைபயணமும், மோடியின் நடுக்கமும் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

இவரே கூட்டுவாராம்… கூட்டினதுல கொஞ்சூண்டு குறைப்பாராம்… அதை பெருமையா வேறு சொல்லிக்கிட்டிருப்பாராம்… சொந்த வீட்டுமீதே பெட்ரோல் குண்டு வீசிட்டு, தீவிரவாதிகள் வீசிட்டாங்கனு கத்துற பாஜக ஆட்களை பாத்திருக்கோம் இல்லையா? அதுமாதிரிதான் இதுவும். சொந்த ஜனங்களையே பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏத்தி கொடுமைப் படுத்துவதும், ஏற்றியதிலிருந்து கொஞ்சூண்டு குறைச்சுட்டு பெருமை பீத்திக்கிறதும் பாஜகவுக்கு புதுசில்ல. இன்னொரு கொடுமை என்னன்னா, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தமில்லைனு சொல்லுவாங்க. ஆனால்,தேர்தல் அறிவிச்சிட்டா, முடிவு வர்ற வரைக்கும்…

உதயமுகம் வார இதழின் 18 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 18 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 18 issue layout single

இந்திப் பிரச்சாரத்தை மூடிட்டு ஓடு – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

இந்தி ஒழிக, தமிழ் வாழ்க! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வழக்கமாக இந்த முழக்கங்களை தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே எழுப்புவார்கள். ஆனால், மொழித் திணிப்பால் தனது சுயத்தை இழந்து கரைந்துபோன மொழிகளுக்கு சொந்தக்காரர்களுக்கு காலம் சரியான பாடத்தை கற்பித்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமே இந்தியை எதிர்க்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் என்று தமிழை சொல்கிறீர்கள். ஆனால், கேரளாவோ, ஆந்திராவோ, கர்நாடகாவோ, தெலங்கானாவோ இந்தியை எதிர்க்கவில்லையே என்று ஒன்றிய ஆளும் கட்சியினர் கேட்பார்கள். வட இந்தியாவில் மராட்டியம், ராஜஸ்தான், ஒடிஸா,…