Browsing: vaiko

மதுராந்தகத்தில் மல்லை சத்யா வெற்றி உறுதி!

மறுமலர்ச்சி திமுகவில் அதிகமாக முகம் தெரிந்த இரண்டாம் கட்ட தலைவர். துணை பொதுச்செயலாளராக அறியப்பட்டவரின் அறியாத முகம் ஒன்று உண்டு.. காஞ்சியில் பிறந்த போதிதர்மர் தற்காப்பு கலையை எவ்வாறு உலக அளவில் எடுத்து சென்றாரோ அந்த மண்ணில் பிறந்து தற்காப்பு கலையை உலகமெங்கும் கொண்டு செல்ல பல நாடுகளுக்கு சென்று பயிற்சி அளித்தவர். தமிழனின் தொன்மையையும் பெருமையையும், திறமையையும் வெளிகாட்டும் மாமல்லபுரத்தில் பேருராட்சி தலைவராக வெற்றிபெற்று அரசியல் களத்தில் அடி எடுத்துவைத்தவர். மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்றவர்களை…

பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதா?: வைகோ கண்டனம்

பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக வஞ்சகம் இழைத்து வருகிறது. அதன் ஒரு கூறாக பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை முற்றாக ஒழித்துக் கட்டும் வகையில் செயல்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்புக்குப்…

ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்ற உத்தரவு பற்றி அரசியல் கட்சி தலைவர்கள்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது, ஆலையை மூடி சீல் வைத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 18) தீர்ப்பு வழங்கியது. இயற்கையை அதிக அளவு மாசுபடுத்தும் ஆலையால் கிடைக்கும் பொருளாதார நிலையை விட சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே முக்கியம் என்று இந்த தீர்ப்பின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்புக்குத் தூத்துக்குடி பகுதி மக்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின்…

பெண்களுக்கு சம உரிமை சட்டத்துக்கு காரணம் கருணாநிதி – மு.க ஸ்டாலின்

பெண்களுக்கு எந்த நிலையிலும் சொத்துகளில் சம உரிமை வழங்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதற்கு வழிகாட்டியாக இருந்தது திமுக தலைவர் கலைஞர் 1989ஆம் ஆண்டு இயற்றிய சட்டம்தான் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகிறது…

இந்தியாவின் பன்முக தன்மைக்கு வேட்டுவைக்காதீர்கள்- மு.க.ஸ்டாலின், வைகோ

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணிதலைவருமானகனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், ‘நீங்கள் இந்தியரா” எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டிருந்தார் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனக்கும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதென கூறியுள்ளார். இந்த…

“தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிறது பாஜகவின் ஆட்சி” – வைகோ கண்டனம்

கொரோனா தொற்றினால் 50 நாட்கள் ஊரடங்கில் உள்ளது இந்தியா. தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் பலரும் வேலையின்றி வீட்டில் உள்ளனர். இந்திய பொருளாதாரமும் பெரும் அளவில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு சில திட்டங்களை தீட்டி வருவதாக அறிவிக்கிறது. அதன்படி தொழிலாளர்கள் அனைவரும் 12 மணி நேரம் வரைக்கும் உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதிமுக தலைவர் வைகோ, மத்திய…

விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும் பிரதமருக்கு வைகோ கோரிக்கை

பிரதமருக்கு வைகோ கோரிக்கை விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த உலக சமயங்களின் மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான் உலகம் முழுவதும் அவர் புகழ் பரவக் காரணமாக இருந்தது. “அமெரிக்க சகோதர…