Browsing: Vijay sethupathi

காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கானப் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 10) பூஜையுடன் துவங்கியது. ‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்தில் மற்றுமொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜையுடன் நடைபெற்ற படப்பிடிப்பின் துவக்க விழாவில் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியுமே கலந்துகொண்டனர். அவ்விழாவுக்கு…

விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்

2018 ஜனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை…

விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

கொரோனா காலத்தில் சில தளர்வுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரொனா அச்சம் காரணமான விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறியுள்ளார் ஸ்ருதிஹாசன். கடந்த 2015 ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படத்தை அடுத்து தற்போது இருவரது கூட்டண்யில் மீண்டும் ஒரு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு லாபம் என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, உத்தரன்,ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டி. இமான் இசைமயமைத்து வருகின்றனர்.…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு விஜய் சேதுபதி நிதி உதவி…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவருக்குரூ. 1 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படத்தில் நடித்தவர் தவசி. இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால்…

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்று தீபாவளி தினத்தில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு சுவைத்து கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் திரைத்துறையினரும் ஏராளமான அப்டேட் வெளியிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர். ஏற்கனவே சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீசர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் தீபாவளி ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளன. மேலும் பல படத்தின் அப்டேட்-களும் வெளியாகியுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் விஜய் போதைக்கு…

சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி – பார்த்திபன்

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனாக நடிக்கும் 800 படம் பற்றி தான் கோலிவுட் முழுக்க தற்போது பேச்சு. பலர் விஜய் சேதுபதி இந்தப் படத்தை கைவிடவேண்டும் என்கின்றனர். சிலர் நடிப்பிற்கு எல்லையில்லை, அதில் நடிப்பது அவரது சொந்த முடிவு அதில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கூறிவருகின்றனர். விஜய் சேதுபதியின் பதிலுக்காகத் தான் அனைவரும் காத்திருக்கின்றனர். பார்த்திபன் தற்போது இந்த விவகாரம் குறித்தும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அர்த்தம்…

முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆலோசனை

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி விஜய் சேதுபதி ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து வாழ்த்தை விட எதிர்ப்பே அதிகமாகவுள்ளது. முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கு அவர் துரோகம் புரிந்துள்ளார் என்றும் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார் என்றும் பல்வேறு…

விஜய்சேதுபதியின் ரணசிங்கம் அக்டோபர் 2 ல் வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தன்னுடைய படத்தை வெளியிட இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில்நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் அக்டோபர்…

விஜய் சேதுபதியுடன் இணையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான செய்தி அண்மையில் வெளியானது. அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,படத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் அனைவருமே தமிழ்த் திரையுலகை தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்துச் சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன்…

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் அப்டேட்

நடிகை கனிகா யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் டப்பிங் பேசியது ஸ்பெஷலான அனுபவம். ஏனெனில் இதில் இலங்கை தமிழ் பேசியுள்ளேன் என கனிகா பதிவிட்டுள்ளார். View this post on Instagram Dubbing is truly an art. An art close to my heart. Making Characters come back to life. This one is…

பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி

‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சசி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து படம் இயக்கி வருகிறார் சசி. இந்நிலையில், சசி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல்…

அவதூறு பரப்புவதா? விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்

நடிகர் விஜய் சேதுபதி ஒராண்டுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் கோயிலில் அபிஷேகம் செய்வதைப் பற்றி நகைச்சுவை ஒன்றை பகிர்ந்துகொண்ட வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை அவமதித்து அவதூறு தெரிவிக்கப்பட்ட கம்மெண்ட்களை நீக்குமாறு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி மே 13, 2019 அன்று ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் கோயிலில் சாமி சிலைகளுக்கு…