Browsing: visakapttina

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை: விஷவாயு கசிந்து 5 பேர் பலி

விசாகப்பட்டினம் அருகே கோபாலபட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாலர்கள் இன்று காலை ஆலையை திறக்க தயாராகிய நிலையில், அதிகாலை நேரத்தில் எரிவாயு கசியத் தொடங்கியது. மயக்கமடைந்த நூற்றுக்கணக்கான மக்களும் சுவாசிக்க கஷ்டப்படுபவர்களும், நகரில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கே.ஜி.ஹெச் மருத்துவமனையின் அதிகாரி, இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினார்.…