Browsing: vishal

மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு குடும்பத்திற்கு உதவும் நடிகர் விஷால்

சமீபத்தில் கொரானா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு.அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மறைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து மற்றவர்களின் உடல் நலனுக்குக் காரணமாக இருந்த கே.பாலு மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் திடீர் துயரத்தை அறிந்த நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில்…

தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர் விஷால்

அடுத்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் விஷால் முடிவெடுத்துள்ளதாக அவரது நட்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இறந்தவுடன் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றபோது அத்தேர்தலில் விஷால் போட்டியிட்டார். ஆனால், விஷாலின் வேட்பு மனு பல்வேறு காரணங்களினால் தள்ளபடி செய்யப்பட்டது. அந்தத் தேர்தலின்போது விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

ஆக்ஷன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்… விஷால் 8 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட விஷால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு 8.29 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரவீந்திரன் தயாரித்திருந்தார். இப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சம் ரூபாயை திருப்பி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். அதே போல் ஆக்ஷன் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. ஆனால்…

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..

நடிகர் விஷால், இயக்குநர்கள் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன், அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர்’ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். “ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு ஒரு விளக்கம் கூறுவார்கள். ஆனால்…

காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கிய விஷால்

கொரோனா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கினார். தற்போது அண்ணாநகர் துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களிடத்தில் முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வழங்கி இருக்கிறார். துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களிடத்தில்…