Browsing: war

எங்களை பகைச்சிக்கிட்டா அது உங்களுக்கும்தான் நஷ்டம்! – சீனா எச்சரிக்கை!

சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் இந்தியாவும் சம அளவில் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் சீன – இந்திய படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. மேலும் மேம்பாட்டு ஒப்பந்தங்களிலிருந்து சீன நிறுவனங்கள் நீக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள சீன தூதர் சன் வீடோங் “சீனாவுடனான உறவுகளை துண்டிப்பதனால் இந்தியாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருவொருக்கொருவர் இன்றி நம்மால் வாழ…

சீனாக்காரனுக்கு இந்திய பகுதியை விட்டுக்கொடுத்தோமா?

மோடி என்ன பண்ணாலும் அதெல்லாம் ஆக்டிங்னு பிரிச்சு மேஞ்சுர்றீங்க சரி. ஆனா, அவரு ஏன் அதைப்பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டேங்குறாரு தெரியுமா? தொடர்ந்து தனது செட்டிங்ஸ் மற்றும் படப்பிடிப்புகளை நடத்திக்கிட்டே இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? வடக்கே இருக்கிற, இந்திப் பாடத்துலகூட பெயிலாகிற பான்பராக் வாயனுகதான் மோடியோட இலக்கு. அவனுகளுக்கு பேஸ்புக், ட்விட்டர்னு சமூக வலைத்தளங்கள் எதுவுமே தெரியாது. அவ்வளவு ஏன், தொலைக்காட்சியே கிடையாது. ஒரு பிரதமரா இருக்கிற மோடி டிஜிடல் இந்தியானு பேசிக்கிட்டே, இன்னமும் ரேடியோவுல மான்…

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

போர் பதற்றத்தை தணிக்க தீவிர முயற்சி; இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ல் பேச்சுவார்த்தை.

இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தியா – சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இது குறித்த நிலைப்பாட்டை இந்தியாவுக்கான சீன தூதர்…

ரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்… இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை!

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது வெளிகளில் நடமாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நோயின் பரவலால் உலக அரங்கில் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பியா சாம்பியன் கால் பந்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல்…