Browsing: water

தண்ணீரின் மகிமை

முன்னொரு காலத்தில் ஜப்பானில் முதியவர் ஒருவர் வாழ்ந்தார். முதியவர் என்றாலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார். அவரைப் பார்த்த பேராசிரியர் ஒருவருக்கு ஆச்சர்யம். அவரிடமே போய்க் கேட்டுவிட முடிவு செய்தார். “ஐயா, உங்களுக்கு எத்தனை வயது?” “95” “உங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே…” “அப்படியானால் தண்ணீருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” “தண்ணீருக்கா?” பேராசிரியருக்கு வியப்பு அதிகரித்தது. தண்ணீர் ரகசியத்தை அறிந்துகொள்ள ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை முதியவரும் புரிந்துகொண்டார். “நான் இளமையில் குடல் சுருங்கி படுத்த படுக்கையாக கிடந்தேன்.…

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீா் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுக்கை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கை வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்று கோவை-ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை “அ” மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் “அ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் “ஆ”,…

மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கா்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு சுமார் 60,000 கனஅடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா் வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணைக்கு வரத்தொடங்கியுள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால்,…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைவு!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,118 கனஅடியில் இருந்து 2,504 கனஅடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.58 அடியாகவும், நீர் இருப்பு 66.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இதனிடையே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.38 அடியாகவும், நீர் இருப்பு 66.64 டிஎம்சியாகவும் உள்ளது.

செயற்கை ஏரி

பூமியின் மிக அற்புதமான இடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் உலகின் 25 அதிசயங்களைப் பட்டியலிட்டது ‘நேஷனல் ஜியோகிராபிக்’. நீர், நிலம், வானம் என்று மூன்று வகைகளாக இந்த அதிசயங்களைப் பிரித்தது. கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரங்கள், எவரெஸ்ட் போன்றவை ‘வானம்’ பிரிவிலும்; ஹவாய் எரிமலைகள், சஹாரா பாலைவனம் போன்றவை ‘நிலம்’ பிரிவிலும் இடம்பிடித்தது பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஐஸ்லாந்தில் உள்ள நீல வண்ண ஏரி ‘நீர்’ பிரிவில் இடம்பிடித்ததுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. காரணம், எவரெஸ்ட்,…