Browsing: weather report

தமிழ்நாட்டில் ஜூலை 13 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்

பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருவது காலை பொழுதுகளை குளுமையாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் ஜூலை 13 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவில் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதே வேளையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம்…

மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த நிஷர்கா தீவிர புயலாக மாறியது; மும்பை அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிஷர்கா புயல் இன்று கரையை கடக்கும் என்பதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். “நிஷர்கா” புயலாக மாறி நேற்று முதல் மகாராஷ்ட்ரா மற்றம் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த நிசார்கா தீவிர புயலாக மாறியுள்ளது. மும்பை அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று…

அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது. நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகள்…

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோடை காலத்தின் கத்திரி வெயில் பொழுதில் வீட்டுக்குள் அமர்ந்திருப்பது ஒன்றும் அத்தனை அழகானதோ அல்ல அத்தனை ரம்மியமான விஷயமோ இல்லை. அதுவும், சமையல் கட்டில் வெந்து புலம்பும் அம்மாக்களுக்காகவே மழை பெய்யலாம் என்று தான் கேட்க வேண்டியதாக இருக்கிறது. கடந்த ஆண்டை போல் பொய்த்துப் போகாமல், கோடை மழை திருவாரூர் மாவட்டத்திலும் புதுவையிலும் கொட்டித் தீர்க்கிறது. திருவாரூரின் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கச்சனம், கடிமேடு, ஆதிரெங்கம் போன்ற பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில்…

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.