Browsing: WHO

கொரோனா பாதிப்பு உலக நிலவரம்

உலகம் முழுவதும் கொரானாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.63 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரானா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரானா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,63,056 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரானாவால் 21,341,885 பேர் பாதிக்கப்பட்டுள்ள…

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை மிஞ்சி இந்தியா 7வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,90,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 223 பேர் உட்பட மொத்தம் 5,408 பேர் கொரோனாவுக்கு உயிரை பறிகொடுத்துள்ளனர். அதே நேரத்தில் 91,852 பேர் சிகிச்சைக்கு பின், முழுமையாக உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில்…

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்” – முதன் முறையாக உண்மையை ஒப்புக் கொண்ட WHO

கொரோனா வைரஸின் தன்மை குறித்து முதன்முறையாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். இதுவரை கொரோனா நோய் தொற்று குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல், செய்யப்படவேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே கூறிக் கொண்டிருந்தது WHO. இந்நிலையில் தற்போது முதன்முறையாக கொரோனாவின் தீவிர தன்மை குறித்து அறிவித்துள்ளது WHO. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் நிலை குறித்து ஜெனிவாவில் இருக்கும் உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில் இருந்து அவ்வமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ். நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 2009ம் ஆண்டு பரவிய…

அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…

கொரோனா பாதித்தவரை கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும் – WHO இயக்குநர் டெட்ராஸ்

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 170,435 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,481,236 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு கடும் அபராதம்: சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் காட்டம்

புதுடெல்லி: ‘கொரோனா வைரசை பரப்பி மனித குலத்திற்கு எதிராக பயங்கரமான குற்றம்புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும்,’ என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து லண்டனை மையமாக கொண்ட சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா தனது அறிக்கையில் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீன அரசின் செயலற்ற தன்மையால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதித்தும்,…

”வெண்டிலேட்டர் வேண்டாம்… இளையவர்களை காப்பாற்றுங்கள்” – தியாகம் செய்த மூதாட்டி மரணம்!

பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி சூசன் ஹொய்லாயெர்ட்ஸ் (Suzanne Hoylaerts ) என்பவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 20ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை. வெண்டிலேட்டர்களை இளைய மக்களுக்காக பயன்படுத்துங்கள். நான் ஏற்கனவே நன்றாக வாழ்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம்…

கொரோனாவால் ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் சாகலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடந்த சில மாதங்களில் உலக அளவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்இந்த நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா வைரசால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேப்ரிசியஸ் என்பவர் அச்சம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.…