Browsing: yogi adithyanath

உ.பி போலீஸின் நடவடிக்கை பாஜக பிம்பத்தை குறைத்துள்ளது: உமா பாரதி கருத்து

ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பாலியல் கொலை சம்பவத்தில், உத்தரப் பிரதேச போலீசாரின் சந்தேகமான நடவடிக்கை பாஜகவின் பிம்பத்தை குறைத்துள்ளது என்று மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உமாபாரதி வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னை அவருடைய மூத்த சகோதரி என்று கூறிய உமா பாரதி, உ.பி முதல்வரை கரைபடியாத புகழுடைய நிர்வாகி என்று…

உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது பெண் மணிஷ்கா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரின் நாக்கை துண்டித்து மற்றும் தண்டுவடத்தில் பயங்கரமாக தாக்கப்பட்டதில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.கடந்த 14 ஆம் தேதி வயல் வெளிக்கு சென்ற இந்த பெண்ணை காணாமல் பிறகு மிகுந்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…

பிணந்தின்னும் ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகளோ?

நண்பர்கள் இருவரும் குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி தினசரிக் கூலிக்கு வேலை செய்துவந்தவர்கள். ஒருவர் நூல் தொழிற்சாலைத் தொழிலாளி, இன்னொருவர் விசைத்தறித் தொழிலாளி. ஊரடங்கால் வருமானம் இழந்த அவர்களின் கையிருப்புப் பணம் உணவுக்கே செலவாகிக்கொண்டிருந்தது. ஊரடங்கு இப்போதைக்கு முடியப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த அவர்கள், விவசாயத் தொழிலாளர்களாகப் பிழைத்துக்கொள்ளலாம் என்று உ.பி. மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு லாரி பிடித்துத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். லாரியில் வேறு சிலரும் இருந்தார்கள். ஒரு நண்பனுக்குத்…

எல்லைகளை அடைத்துவிட்டு விரட்டினால் எங்கே போவோம்?

ஒருபக்கம் முதலாளிகள் தங்கள் இடத்திலிருந்து விரட்டுகிறார்கள். மறுபக்கம் போக்குவரத்தை அரசு முடக்குகிறது. நடந்தே ஊருக்கு போகலாம் என்றால், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் பூட்டப்பட்டு, போலீஸாரின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். பிழைக்க வந்த மாநிலத்திலும் தங்கமுடியாமல், சொந்த மாநிலத்திற்குள்ளும் நுழைய முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேற திறந்து வைக்கப்பட்ட பஸ்நிலையங்களை மூடும்படி மார்ச் 29 ஆம் தேதி முதல்வர் யோகி ஆதித்தியநாத் உத்தரவுபோடுகிறார். பஸ் நிலையம் திறந்திருக்கும் என்று வந்தவர்களை போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள். வேறு…