குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கோழை மாவீரன் ஆனார் – Sri Skanda Kumar

Share

உலக தமிழர்கள் வரலாற்றில் முதல் முதலாக காட்டிக் கொடுத்து மாபெரும்
துரோகத்தை செய்தது பிரபாகரன். ரெலோ தலைவர்களான குட்டிமணியையும்,
தங்கத்துரையையும், ஜெகனயும் இலங்கை அரசிடம்
காட்டிக் கொடுத்து மாபெரும் துரோகத்தை செய்தார்.

குட்டிமணியை பார்த்தாலே பலருக்கு சுச்சா போகும் அதில் ஒருவர்
பிரபாகரனும், பிரபாகரனை “டேய் வாடா இங்க” என்று பலர் முன்நிலையில்
ஒருமையில் அழைத்த முதல் தைரியசாலியான ஆண்மகன் என்றால் அது குட்டிமணி தான்.

அப்படிப்பட்டவர் உயிரோடு இருந்தால் தனக்கு என்னாகும்
என்பதை நன்கறிந்த பிரபாகரன் குட்டிமணியை இலங்கை அரசிடம் போட்டுக்
கொடுத்து அன்றே துரோகியானவர் மகா கோழை என்ற பட்டத்தையும் சேர்த்துப்
பெற்றுக்கொண்டார். இவரை எப்படி மாவீரன் என்று கூற முடியும்?

ஒருமுறை தமிழ்நாட்டில் ஈழ இயக்கங்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றது.
அந்தநேரம் திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு அனைத்து விளக்குகளும்
நின்றுவிட்டன. ஒரு சில நிமிடங்களில் விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன
,அனைவரும் இருந்த இடத்திலே இருந்தார்கள். பிரபாகரனைக் காணவில்லை. அனைவரும்
கட்டிலுக்கு அடியிலும் அங்கும் இங்கும் தேடினார்கள், இறுதியில் கதவுக்கு
பின்னால் பயந்து ஒளித்திருந்த பிரபாகரனை கண்டு பிடித்தார்கள். பிரபாகரன்
பயம் பற்றி 1980 ஆம் ஆண்டிற்கு பின் பிறந்த குஞ்சுகளுக்கு தெரிய
வாய்ப்பில்லை.


குட்டிமணி பிடிபட்டதும் முதலில் இவ்வாறு கூறினார்…

“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும்.
வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று
எங்களுக்கு நன்கு விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது
இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்.
ஒரு கடற்கரை ஓரத்தில் நின்ற சக தோழர்களை, துரோகத்தில் வளர்ந்த, தன்
துரோகத்தால் காட்டிக் கொடுத்த பிரபாகரன், இறுதியில் அதே கடற்கரை
ஓரத்தில் பிணமாக கோமணத்துடன் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, தெய்வம்
நின்று துரோகம் செய்தது.

பிரபாகரனின் இந்த நிலைக்கு முழுப்பொறுப்பும் புலன் பெயர்ந்த
விசிலடிச்சான் குஞ்சுகளும், உண்மைகளை கூற மறுத்த விபச்சார ஊடகங்களும்
பத்திரிகைகளும் மாத்திரம்தான்.

ரெலோ தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகனை இலங்கை அரசுக்கு காட்டிக்
கொடுத்தது புலித்தலைவர் பிரபாகரன். ஆனால் காட்டிக்கொடுத்த புலிகளுடன்
கூட்டணி வைத்தது அதே ரெலோவை சேர்ந்த செல்வம் அரக்கநாதன். ஆனால் இவ்வளவு
வருடம் கழிந்தும், தமது தலைவர்களுக்கு இவ்வளவு துரோகம் செய்த பின்னரும்,
சக போராளிகளை சுட்டும் கழுத்தில் டயர் போட்டு எரித்தும் கொன்ற பின்னரும்,
சில ரெலோ உறுப்பினர்கள் மான ரோச நரம்புகளை அறுத்து வீசிவிட்டு இந்த
அரக்கநாதனுடன் உலா வருகின்றனர். இவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை, சக தோழர்களை பற்றி அக்கறை இல்லாதவர்களுக்கு மக்கள்
மீது எவ்வாறு அக்கறை இருக்க முடியும்?

குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரைக் காட்டிக்கொடுத்தது பிரபாகரன் தான்
என்பதை அம்பலப்படுத்தும் அவர்களுக்காக ஆஜராகிய சட்டத்தரணியின்
(வழக்கறிஞர்) வாக்குமூலம் இதோ!

1981ம் ஆண்டு நான் கொழும்பில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து
உடுப்பிட்டி எம்.பி., எம்.சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியராக வேலை
செய்து கொண்டிருந்த காலமது. பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகமாகி
அச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடங்கிய காலம். 1982 ஆரம்பத்தில்தான்
(அல்லது 1981 கடைசி) குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் சிலர்
மணற்காட்டில் 1981ம் ஆண்டு இராணுவத்தால் கைதானார்கள். அந்நாட்களில் இந்த
கைது தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலை வெகுவாக பாதித்தது. கூட்டணி
எம்.பி.க்கள் கதிகலங்கினர்.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை கைதானவுடன் உடனடியாக பனாகொடை இராணுவ
முகாமுக்கு மாற்றப்பட்டனர். அந்த முகாம் பலத்த பாதுகாப்புடைய முகாம்.
பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதானவர்களை யாரும் பார்க்கமுடியாது. எனவே
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus)
தொடங்கப்பட்டு, அந்நாளில் மிகச்சிறந்த வழக்கறிஞரான கொல்வின் ஆர்.டி
சில்வா, ராணி வழக்குரைஞர், Q.C., அவர்களை நியமித்து வழக்காடி கைதானவர்களை
பார்க்க அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி சட்டத்தரணிகளுக்கு மட்டுமே
வழங்கப்பட்டது. இதன்போது உடுப்பிட்டி எம்.பி. எம். சிவசிதம்பரம்
பின்னால் இருந்து இயங்கினாரே தவிர தன்னை பெரிதாக இவ்வழக்கில் அடையாளம்
காட்டவில்லை.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குழுவினரை சந்திக்க இருந்த சட்டத்தரணி
பட்டியலில் முதலிடம் வகித்தவர் சட்டத்தரணி கரிகாலன் நவரத்தினம்.
அந்நாளில் எனது சட்ட குரு என்று கூட சொல்லலாம். அவருடன் நான்
(வழக்கறிஞர் ஸ்ரீ ஸ்கந்த குமார். கனடா), காலம் சென்ற ஜி குமாரலிங்கம்,
தற்காலம் கொழும்பில் கொடிகட்டிப்பறக்கும் கே.வி. தவராஜா, அன்மையில்
காலஞ்சென்ற வட்டுக்கோட்டை பாக்கியநாதன் மேலும் இன்னும் சிலர். எங்களுடன்
வருவதாக இருந்த SJVயின் மகன் சந்திரகாசன் கடைசி நேரத்தில் காலை
வாரிவிட்டார்.

நாங்கள் 1982ம் ஆண்டு (மாதம், திகதி ஞாபகம் இல்லை) ஒரு நாள் சனிக்கிழமை
மாலை 3 மணிபோல வான் ஒன்றில் பனாகொடை இராணுவ முகாமை சென்றடைந்தோம். பலத்த
சோதனையின் பின் தடுப்பு காவலில் இருந்த ஒவ்வொருவரையும் இரு சட்டத்தரணிகள்
பார்ககலாம் என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் குட்டிமணியை கரிகாலன்
நவரத்தினம் சந்திப்பதாக முடிவாயிற்று. உடனே அவர் என்னை தன்னுடன்
சேர்ததுக்கொண்டார்.

ஒரு சிறிய அறையில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு காத்திருக்கையில்
குட்டிமணி அழைத்து வரப்பட்டார். மற்ற அறைகளில் மற்றவர்கள் சந்தித்துக்
கொண்டார்கள். இது அவர்கள் கைதாகி ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்திருக்கலாம்
என நினைக்கிறேன். எங்களை கண்டவுடன் குட்டிமணி கண்கலங்கினார். எங்கள்
இருவரையும் குட்டிமணிக்கு முன்பின் தெரியாது. இருப்பினும் சாவு நிச்சயம்
என்று தெரிந்த பின்னர் ஒரு தமிழரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற
மனநிலையில் இருந்தவருக்கு எங்களை கண்டவுடன் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி
ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.

எங்கள் அறிமுகத்தின் பின்னர் குட்டிமணி முதலில் இவ்வாறு கூறினார்:
“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும்.
வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று
எங்களுக்கு நன்கு விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது
இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”.
மட்டக்களப்பை சேர்ந்த எனக்கு அந்நாட்களில் இயக்கங்களின் அரிச்சுவடே
தெரியாது. ஆகவே நான் கரிகாலன் நவரத்தினம் அவர்களை உடனே கேட்டேன், அண்ணா,
யார் அந்த தம்பி?

உனக்கு தெரிய தேவையில்லை, பேசாமல் இரு, என்றார். நானும் அடங்கி விட்டேன்.
அன்றைய சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. அரசியலை விட குடும்ப விடயம்,
வீட்டிற்கு என்ன சொல்வது போன்ற விடயங்களும் பேசினோம். ஒவ்வொரு கிழமையும்
சந்திப்பதாக கூறி வெளியே வந்தோம். வந்தவுடன் கரிகாலன் நவரத்தினம்
அவர்களிடம் நான் மீண்டும், “அண்ணா, யார் அந்த தம்பி” என்று கேட்டேன்.
சிறிது சினத்துடன் எனக்கு விளக்கினார்.

‘தம்பியின் பெயர் பிரபாகரன். அவன்தான் இனி இயக்கத்தை தொடர்ந்து நடாத்துவான்.
ஆனால், நீ இதை யாரிடமும்
உளறி விடாதே. உளறினால் உன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள். உன்னை இங்கு
கூட்டி வந்தது, என் தப்பு’ என்று கூறிமுடித்தார்.

நானும் பயத்தில் அதை பெரிதாக யாரிடமும் பகிரங்கமாக சொல்லவில்லை. ஆனால்
நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தேன். இந்த சந்திப்பை தொடர்ந்து பல
தடவைகள் பனாகொடை முகாமுக்கு சென்று வந்தேன். குறிப்பாக சீனியர்
சிவசிதம்பரம் அவர்களுடன்.

1983 கலவரத்தின்பின் கூட்டனியினர் இந்தியா தமிழ் நாட்டில் குடியேறினர்.
1984 -85 கால கட்டத்தில் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் சென்னையில் இருந்து
ஜூனியர் விகடன் பத்திரிகையில் “குட்டிமணி ஜெகன் தங்கதுரை” என்ற பெயரில்
ஒரு தொடர் சரித்திரம் எழுதினார்.

சென்னையில் அவரை நான் சந்தித்த
பொழுதெல்லாம் குட்டிமணி சொன்ன அந்த ‘தம்பி’ விடயத்தையும்
வெளிப்படுத்தும்படி வேண்டினேன். எது சரி, எது பிழை என்பதை தவிர்த்து
உண்மையான சரித்திரம் என்னவென்பதை மக்கள் அறியவேண்டும் என்பதே எனது
விருப்பமாக இருந்தது. ஆனால் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் உண்மையை
எடுத்துச்சொல்ல மறுத்துவிட்டார். ஒவ்வொரு தடவையும் தனது உயிருக்கு ஆபத்து
என்றே சொல்லிக் கொண்டிருந்தார். 2009ம் ஆண்டிற்குப் பிறகு, இனி அது
தேவையில்லாத விடயம் என்று சொல்லி சப்ஜெக்கடையே மூடிவிட்டார்.

நன்றி-Sutharsan Saravanamuthu

Leave A Reply