முதல் பெண் கப்பல்படைத் தளபதி!

Share

இன்றுவரைக்கும் இவருக்கு நிகராக கப்பற்படைக்கு தலைமை ஏற்று அசத்திய பெண் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

பாரசீக மன்னரான ஸெர்ஸெஸ் கிரேக்கத்துக்கு எதிராக நடத்திய கடற்போரில் பங்கேற்று சிறப்பான பங்காற்றிய ஆர்ட்டிமிஸியாவை வரலாற்று ஆசிரியர்கள் கண்டபடி புகழ்கிறார்கள்.

கிரேக்கத்தைச் சேர்ந்தவள்தான் ஆர்ட்டிமிஸியா. இவளுடை தந்தை ஹாலிகார்னேஸியாவை சேர்ந்த லிக்டாமிஸ். தாயார் கிரீஸைச் சேர்ந்தவர். கிரேக்க யுத்தத் தேவதையான ஆர்ட்டிமிஸை நினைவூட்டும் வகையில் இவளுக்கு ஆர்ட்டிமிஸியா என்று பெயர் சூட்டினார்கள். ஆர்ட்டிமிஸ் ஒருவகையில் கிரேக்க கடவுளான அப்போலோவின் தங்கையும் ஆவாள். ஒரு கட்டத்தில் இவளுடைய குடும்பத்தை சில கிரேக்க வீரர்கள் கொடூரமாக கொன்று குவித்தனர். சிறுமியாக இருந்த ஆர்ட்டிமிஸியாவை பல ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.

செத்துவிடுவாள் என்ற நிலையில் கிரேக்கத்து வீதியில் தூக்கிவீசினார்கள். வீதியில் கிடந்த ஆர்ட்டிமீசியாவை பாரசீக வீரர் ஒருவர் எடுத்து வளர்த்தார். அவளுக்கு மிகச்சிறந்த வாள் பயிற்சி கொடுத்தார். பாரசீகத்துக்காக அவள் நடத்திய சண்டைகளில் அவளுடைய வீரத்தை மன்னர் டேரியஸ் அறிந்தார். அவளை தனது மகளாகவே கருதி முக்கியத்துவம் கொடுத்தார்.

ஒரு பெண் தனது துணிச்சலை வெளிப்படுத்தும்போது வர்ணிக்க வார்த்தைகள் இருக்காது. ஏனெனில் அப்படி வர்ணிக்கத் தொடங்கினால், அது ஆண்மைத் தனமாக இருக்கும் என்று கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரடோடஸ் கூறுகிறார்.

கி.மு.500ல் ஹாலிகார்னாஸஸ் மன்னருக்கும் இவளுக்கும் திருமணம் நடந்தது. கணவரின் பெயர் தெரியவில்லை. திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்தார். அதைத்தொடர்ந்து, ஆர்ட்டிமிஸியா ராணியாக முடிசூட்டிக் கொண்டாள்.

இதையறிந்த பக்கத்து தீவான ரோடெஸ் மன்னர் தனது பரம எதிரியான ஹாலிகார்னேஸியா மீது போர் தொடுக்க முடிவு செய்தார். கப்பலில் வீரர்களை அனுப்பினார். ஒரு பெண்தானே ஆட்சியில் இருக்கிறாள் என்று மிதக்கமாக அனுப்பினார்.

ரோடெஸ் ராணுவத்தை எதிர்கொள்ள ஆர்ட்டிமிஸியா ஒரு தந்திரத்தை வகுத்தாள். தனது ராணுவத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை நகருக்குள் மறைந்திருக்கச் செய்தாள். ஒரு பகுதியை நகருக்கு வெளியே மறைந்திருக்கச் செய்தாள்.

ரோடெஸ் வீரர்கள் கப்பலை கரையில் நிறுத்திவிட்டு நகரருக்குள் நுழைந்தார்கள். நகரத்து மக்களை ரோடெஸ் வீரர்களிடம் சரணடையும்படி உத்தரவிட்டிருந்தாள் ஆர்ட்டிமிஸியா. ரொடீஸியர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு நகருக்குள் நுழைந்தார்கள். அந்தச் சமயம்பார்த்து நகருக்கு வெளியே இருந்த ஆர்ட்டிமிஸியாவின் ராணுவத்தினர் கப்பல்களை கைப்பற்றினார்கள். நகருக்குள் மறைந்திருந்த ராணுவத்தினரோ ரொடீஸிய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களை அழித்தனர்.

அத்துடன் முடியவில்லை சண்டை. கைப்பற்றிய ரொடீஸிய கப்பலில் தனது வீரர்களுடன் ரோடெஸ் தீவை நெருங்கினாள் ஆர்ட்டிமிஸியா. தங்கள் கப்பல் வருவதைக் கண்ட ரொடீஸியர்கள் ஆரவாரமாக கடற்கரையில் திரண்டனர். கரையை நெருங்கியதும்தான் ஹாலிகார்னேஸியாவிடம் தாங்கள் தோற்றதை அறிந்தார்கள். தீவையே ஆர்ட்டிமிஸியா கைப்பற்றினாள்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆர்ட்டிமிஸியாவின் போர்த் தந்திரம் பாரசீகரிடம் மேலும் பரவத் தொடங்கியது. இந்நிலையில்தான், கிரேக்கத்துக்கு எதிரான கடற்போரில் மன்னர் டேரியஸை கிரேக்கத் தளபதி டெமிஸ்திகிளிஸ் சமயோசிதமாக அம்பெய்து கொன்றான். அந்தப் போரில் தோற்ற டேரியஸ் நெஞ்சில் அம்பைத் தாங்கியபடி, ஆர்ட்டிமிஸியாவை வரவழைத்தார். தனது மகன் ஸெர்ஸெஸிடமும், ஆர்ட்டிமிஸியாவிடமும் கிரேக்கர்களுடன் மோதல் வேண்டாம் என்றும் அவர்கள் பொல்லாதவர்கள் என்றும் அறிவுரை கூறினார்.  ஆனால், ஆவேசமடைந்த ஆர்ட்டிமிஸியா அவருடைய நெஞ்சில் பாய்ந்த அம்பை பிடுங்கி அவருடைய உயிரைப் போக்கினாள்.

தன்னை சீரழித்த கிரேக்கர்களை பழிதீர்க்க அவர்களுடன் போர் தொடுக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்தாள். ஸெர்ஸெஸ் கிரேக்கர்களுடன் போர்தொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டான் என்று நினைத்தாள். எனவே,  மன்னர் ஸெர்ஸெஸின் ஆதரவாளர்கள் அனைவரையும் தந்திரமாக ஒழித்தாள். ஸெர்ஸெஸிடம் அவனுடைய தந்தையைக் கொன்ற கிரேக்கர்களை பழிதீர்க்கும் வெறியை வளர்த்தாள்.

பாரசீகம் தங்களைத் தாக்கத் தயாராவதை கிரேக்க தளபதி டெமிஸ்திகிளிஸ் அறிந்தான். அவன் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா உள்ளிட்ட அரசுகளை ஒன்றிணைத்து பாரசீகர்களைத் தாக்கத் திட்டம் வகுத்தான். ஆனால், பாரசீகர்களின் மிகப்பெரிய கப்பல்படையை எதிர்க்க போதுமான கப்பல்கள் இல்லாமல் தவித்தான். கடற்போரில் திறனற்ற பாரசீகர்களை வெல்வது எளிதென்று நினைத்தான். அவனுக்கு ஸ்பார்ட்டர்கள் ஆதரவளிக்கவில்லை. ஏதென்ஸ் ஆதரவளித்தது.

டெமிஸ்திகிளிஸ் பாரசீகர்களை எதிர்கொள்ள தந்திரங்களை வகுத்தான். அதேசமயம், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பெரிய படையையும் 600 கப்பல்களையும் திரட்டினான் ஸெர்ஸெஸ். கடற்போரில் வல்லவர்களான கீரேக்க வீரர்கள் மிகச்சிறிய கப்பல்படையைக் கொண்டு பாரசீகத்தை எதிர்கொண்டனர். கிரேக்கத்துக்குச் சொந்தமான பல தீவுகள் நடுநிலை வகிக்கவும், ஸெர்ஸெஸை ஆதரிக்கவும் முடிவெடுத்தன. கிரேக்கத்தின் தெற்கத்திய நகரங்கள் தங்கள் நாடுகளைக் காக்கவே திட்டமிட்டன.

கி.மு.480ல் கிரேக்கத்தின் மீது பாரசீகம் போர் தொடுத்தது. ஏதென்ஸை அழித்து, கிரேக்க ராணுவத்தை தோற்கடித்து கிரீஸுக்குள் அணிவகுத்து கிரேக்கர்களை தனது ஆட்சிக்கு உட்படுத்துவதே ஸெர்ஸெஸின் திட்டம். ஆனால், அவனுடைய பெரிய படையே அவனுக்கு பின்னடைவைக் கொடுத்தது. ஆம், அவ்வளவு பெரிய கப்பல்படைக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை வினியோகிக்க முடியாமல் தவித்தான்.

கிரேக்க கப்பல்படையில் உக்கிரமான வீரர்கள் இருந்தார்கள். கப்பல்கள் குறைவாக இருந்தாலும் சிறிய கப்பல்களாக இருந்தன. ஆனால், உறுதியானவையாக இருந்தன. பாரசீக கப்பல் அணிவகுப்புக்கு ஊடாக புகுந்து தாக்கும் திறன்படைத்தவையாக இருந்தன. தொடக்கத்தில் பாரசீகர்கள் ஏதென்ஸை கைப்பற்றுவதை கிரேக்கர்கள் தடுக்கவே இல்லை. ஆனால், ஏதென்ஸ் மக்கள் அனைவரும் சலாமிஸுக்கு குடிபெயர்ந்திருந்தனர். சலாமிஸ் தீவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் இருந்த நீரிணையில்தான் பாரசீகப் படை அணிவகுக்க வேண்டும். இங்கேதான் கிரேக்க கப்பல்படை பாரசீகக் கப்பல்படையை திடீர் தாக்குதல் நடத்தி திணறடித்து ஏராளமான கப்பல்களை அழித்து ஒழித்தது.

ஆர்ட்டிமிஸியாவின் கப்பலும் கிரேக்கப் படைகளிடம் சிக்கிக் கொண்டது. அந்த சிக்கலான சமயத்திலும் ஆர்ட்டிமிஸியா தனது ஆயுதமற்ற கப்பல்களில் ஒன்றைக் கொண்டு கிரேக்கக் கப்பல்களை மறைத்து தப்பினாள். அவளுடன், ஸெர்ஸெஸின் தம்பியையும் காப்பாற்றினாள் என்பதுதான் முக்கியமானது. இந்தப் போரில் தப்பிய ஒரே தளபதி ஆர்ட்டிமிஸியா மட்டுமே. அதனால்தான், எனது படையில் இருந்த ஆண்கள் அனைவரும் பெண்களாகவும், பெண் ஆணாகவும் மாறிவிட்டார்கள் என்று ஸெர்ஸெஸ் கூறினான். ஆர்ட்டிமிஸியாவை தனது மிகச்சிறந்த தளபதி என்று புகழ்ந்தான்.

கிரேக்கர்கள் வெல்லமுடியாதவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பாரசீக ராணுவம் கிரேக்த்திற்குள் நுழைந்தது. ஆனால், மீண்டும் கிரேக்க ராணுவத்திடம் படுதோல்வி அடைந்தது.

Leave A Reply