இந்தியாவின் கடைசிப் பேரரசர் பகதூர்ஷா – சுல்தான் இப்ரஹிம்

Share

மனதில் சுதந்திர நம்பிக்கை துளியளவு இருக்கும் வரை.. இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் என்று சூளுரைத்த…. முதல் இந்திய சுதந்திரப் போரின் நாயகன் மாமன்னர் மட்டுமல்ல..
.
முகலாயப் பேரரசின் இறுதி மன்னருமான பகதூர்ஷா வின் நினைவு தினம் இன்று. (7 நவம்பர் 1862.)

ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு.. சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவார்கள் எனில்,

என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், சில சுதேசி மன்னர்கள் தங்களின் வசதிகளுக்காக ஆங்கிலேயர்களுக்கு விசுவாசியாகவும், அடிமையாகவும் இருந்தார்கள்…

இருப்பினும்,, பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் இணைந்து மாமன்னர் பகதூர்ஷா பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார்.

பல சூழ்ச்சியால்.. மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள்.

அப்படி சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்.. ஒரு நாள் காலை . காலை உணவு ஒரு பெரிய தட்டில் வைத்து துணியால் மூடப்பட்டு எடுத்துவரப் படுகிறது.

கூடவே மேஜர் ஹட்சன் வருகிறான். ஹட்சன் முகத்தில் ஒரு விஷமம் கலந்த சிரிப்பு.

ஹட்ஸன்: பகதுர்ஷா… நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! என்றவனாக,

உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.

அங்கே… பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித் தட்டுகளில் ஏந்தி வந்ததோடு…

இது பிரிட்டீஷ் கம்பெனியாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன்.

திடநெஞ்சுடன் அவனைப் பார்த்த பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்! என்றார்.

கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷாவின் கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு,

ஹட்ஸன்: உமது கண்களில் என்ன? நீர் வற்றி விட்டதா?

பகதுர்ஷா: ஹட்ஸன்… அரசர்கள் அழுவதில்லை! அதிலும் முஸ்லிம்கள், ஷஹீத் ஆனவர்களுக்காக அழமாட்டார்கள் என்று பெருமிதத்துடன் கூற தலை குனிந்தபடி வெட்கத்துடன் வெளியேறுகிறான் ஹட்ஸன்.

பிரிட்டிஷ் அரசை எதிர்த்தார்.. பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி..

1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர்…

அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச் சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார்..

இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா..

ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார்…

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,

நம் வீரர்களின் நெஞ்சில்.. இம்மகானிடம் இருந்தது போல நம்பிக்கையும்… தேசபக்தியும் அணுவளவாவது இருக்க வேண்டும் என்று முழங்கினார்…

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவரது சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு. உங்களால்தான்.

நாங்கள், இன்று சுதந்திர மூச்சை சுவாசிக்கின்றோம் என்று குறிப்பு எழுதி வைத்தார்…

Sulthan Ibrahim

Leave A Reply