சமஸ் ஏன் இவ்வளவு பதறுகிறார்? – ஆதனூர் சோழன்

Share

கிடைக்கிற சந்துலயெல்லாம் தன்னை மார்க்கெட் பண்ற வேலையத் தவிர சமஸுக்கு வேறு எதுவும் தெரியாது என்று அவருடன் பழகியவர்களுக்கு தெரியும்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரியும்போது பெரிய ஆட்களுடன் நெருங்கும் வாய்ப்பு நிறைய கிடைக்கும். அதுவும் பத்திரிகையளர்களுக்கு ரொம்பவே வாய்ப்பு அதிகம்.

ஸார் நடுப்பக்கத்துக்கு கட்டுரை தர்றீங்களா? இந்த சப்ஜெக்ட்ல நீங்க எழுதினா நல்லா இருக்குமே என்று பிரபலங்களிடம் கேட்டு வாங்கிப் போட்டால், அவர் இவருக்கு நெருக்கமாகிவிடுவார்.

சரி, அது கிடக்கட்டும். எல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். ஆனால், ஒரு அரசு, இவரைப் பற்றி தெரியாமல் அதீதமாக முக்கியத்துவம் கொடுக்கிறதா? அல்லது, இவரே தன்னை முக்கியமான ஆளாக கருதிக் கொள்கிறாரா?

இவருக்கு விருது கொடுத்தபோதும் சரி, கலைஞர் எழுதுகோல் விருதுத் தேர்வு குழுவில் இவரை உறுப்பினராக நியமித்தபோதும் சரி எரிச்சலாகத்தான் இருந்தது.

கலைஞர் எழுதுகோல் விருது தேர்வுக் குழு பேராசிரியர் அருணன் தலைமையில் முதல்வரை சந்தித்தது. அப்போதுகூட சமஸ் தனது மேதாவித் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் சில விஷயங்களை வெளியிட்டார்.

பேராசிரியர் அருணன் அமைதியாக இருக்கிறார். ஆனால், பிரிண்ட் மீடியாவுக்கு மட்டுமின்றி, எல்லா மீடியாக்களுக்கும் இந்த விருது விரிவு படுத்தனும்னு சொன்னதாகவும், அது சம்பந்தமாக பரிசீலிக்கலாம் என்று முதல்வர் சொன்னதாகவும் சமஸ் கூறினார். இதெல்லாம் மற்றவர்களுக்கு தோனாதது தனக்கு தோன்றியதாக பில்டப் செய்வது.

அதுமாதிரிதான் விருது வாங்கும் நிகழ்வில்கூட முதல்வரிடம் கூடுதலாக நெருக்கம் இருப்பதைப் போல பில்டப் செய்தார். பார்வையாளர்களுக்கே அருவறுப்பாக இருந்தது.

நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வுக்குழு அறிவித்தபோது, இவருக்கு பொது இதழ்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

கட்டுரையாளர்கள் ஜெயராணி, தினேஷ் அகிரா, மருத்துவர் கு.கணேசன், அதிஷா வினோ, சுட்டி கணேசன், யுவராஜ், பேராசிரியர்கள் விஜயபாஸ்கர், வீ அரசு, கரு.ஆறுமுகத்தமிழன், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர் அருண்குமார் ஆகியோரும் இடம்பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவு இதழ்களை தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால், இதழ் தேர்வு முடிவுகள் வெளியானபோது, சமஸ் மட்டுமே இதழ்களின் பட்டியல் லிங்க்கை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து, நடுநிலையோடு இதழ்களை தேர்வு செய்ததாக கூறியிருந்தார்.

மற்றவர்களுக்கு இல்லாத ஒரு பொறுப்பு இவருக்கு யார் கொடுத்தது? தேர்வு முடிவு குறித்து அறிக்கை மாதிரி வெளியிட இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நூலக ஆணைக்குழுத் தலைவர்தானே அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்?

தேவையில்லாத பல குப்பை இதழ்களை ஒழித்துக் கட்டி, உபயோகமான இதழ்களை தேர்வு செய்திருப்பதாக இவர் கூறிக்கொண்டார். ஆனால், இதழ் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்வுக்கு வந்த இதழ்களை சரியாக தரம்பிரிக்கவில்லை. பெரிய நிறுவனங்களின் இதழ்களுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நின்றுபோன இதழ்களுக்குக்கூட ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆதாரபூர்வமாக தகவல் வெளியானவுடன் வேறு யாரும் பதறவில்லை. யாரும் பதிலளிக்கவும் இல்லை.

ஆனால், அதிகாரிகளுக்கே இல்லாத பதற்றம் ஏன் சமஸுக்கு வருகிறது என்று தெரியவில்லை. இவர் ஒரு குழுவின் உறுப்பினர்தான். இதழ் தேர்வு செய்ததோடு இவருடைய வேலை முடிந்தது. தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா இல்லையா? தகுதியில்லாத இதழ்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்தெல்லாம் பதிலளிக்க வேண்டியது அரசு அதிகாரிகள்தான்.

ஆனால், சமஸ் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி பதறுகிறார். பதிவுகளில் பதிலளிப்பதும், வீடியோ மூலம் பதிலளிப்பதும் ஏன்?

Leave A Reply