“க‌த்னாலும் வெட்டு க‌த்லேன்னாலும் வெட்டு” – ஃபாசில் ஃப்ரீமேன் அலி

Share

ஒரு இஸ்லாமிய‌ பிர‌ச்சார‌ குழு செய்த‌ மும்முர‌மான‌ தாவா வேலையால் ஒரு 30 வ‌ய‌து கிராம‌த்து ம‌னித‌ர் ஈர்க்க‌ப்ப‌ட்டு, “ஐயா நான் முஸ்லிமா மாற‌ விரும்புறேன்”ன்னிருக்காரு.

மாஷா அல்லா, அல்ஹ‌ம்துலில்லா, சுப்ஹான‌ல்லா – ன்னெல்லாம் புளங்காகித‌ம் அடைந்த‌ பிர‌ச்சார‌க் குழுவின‌ர், “யு ஆர் வெல்க‌ம் ச‌கோத‌ர‌ரே”ன்னு ஆர‌த்த‌ழுவி வ‌ர‌வேற்றிருக்காங்க‌.

“ச‌ரி, அதுக்கு நான் என்ன‌ செய்ய‌ணும் ச‌கோ, சொல்லுங்க‌”ன்னு அவ‌ர் கேட்க‌… “வெரி சிம்பிள். லா இலாஹா இல்ல‌ல்லா, முஹ‌ம்ம‌து ர‌சூலுல்லா”ன்னு சொல்லுங்க‌ அவ்வ‌ள‌வுதான் அப்ப‌டீன்னிருக்கார் பிர‌ச்சார‌கர்.

அட‌ இவ்வ‌ள‌வுதானா, ஈசியாயிருக்கேன்னு அதை அப்ப‌டியே ஒப்பித்த‌வ‌ர், “ஓக்கே ச‌கோ, நாங்கெள‌ம்புறேன்”னு கிள‌ம்ப‌ எத்த‌னிக்க‌…

அந்த‌ குழுவோட‌ த‌லைவ‌ர், “த‌ம்பி நீங்க‌ க‌லிமா சொல்லிட்டீங்க‌, இப்போ முஸ்லிம் ஆயிட்டீங்க‌. இனி நீங்க‌ குரான், ஹ‌தீஸ், ஃபிக்ஹு ச‌ட்ட‌ங்க‌ள்னு நிறைய‌ ப‌டிக்க‌ணும். அதேவேளை, சீக்கிர‌மே க‌த்னா செய்ய‌ ஏற்பாடு செய்ய‌ணும்”னு சொல்லியிருக்கார்.

ந‌ம்மாளுக்கு ஒண்ணும் புரிய‌ல‌. ஏதோ ச‌த்த‌மா க‌த்த‌ணும் போலிருக்குன்னு நென‌ச்சுட்டு, “ச‌ரிங்க‌ய்யா நீங்க‌ளே ஏற்பாடு ப‌ண்ணிட்டு சொல்லி அனுப்ப‌ங்க‌”னு சொல்லிட்டு போயிட்டார்.

மூணு நாள் க‌ழிச்சி, நான்கைந்து இஸ்லாமிய‌ர்க‌ள் இவ‌ர் வீட்டுக்கு வ‌ராங்க‌. இதுக்குள்ள‌ ந‌ம்மாளு முஸ்லிம் ஆயிட்டார்னு ஊர் முழுக்க‌ செய்தி ப‌ர‌விருச்சு. “தாய் ம‌த‌ம் திரும்பு ச‌கோத‌ர‌னே”னு ஒரு பக்க‌ம் போஸ்ட‌ர், இன்னொரு ப‌க்க‌ம், “தீன் வ‌ழி திரும்பிய‌ ச‌கோத‌ர‌னே” போஸ்ட‌ர். மொத்த‌த்தில் ந‌ம்மாளுதான் டாக் ஆஃப் த‌ வில்லேஜ்.

வந்த‌வ‌ங்க‌, “அஸ்ஸ‌லாமு அலைக்கும் பாய்”னு வீட்டு முன்னாடி நின்னு சொல்ல‌, ப‌டுத்திருந்த‌ ந‌ம்ம‌ புது பாய் எழுந்திருச்சு பாய‌ சுருட்டி வெச்சுட்டு, “வ‌ அலைக்கும் ச‌லாம் பாய்”னு ப‌தில் சொல்லிட்டு எல்லா பாய்கள‌யும் உள்ளார‌ கூப்பிட்டு பாய விரிச்சு உக்கார‌ சொல்லிட்டு, “என்ன‌ விச‌ய‌ம் பாய்..?”னு கேக்குறாரு.

“பெரிய‌ முல்லா அனுப்பி வெச்சாருங்க‌, க‌த்னா விச‌ய‌மாத்தான்…”ன்னு இழுக்குறாங்க‌ வ‌ந்த‌வ‌ங்க‌.

“அப்ப‌வே கேக்க‌ணும்னு நென‌ச்சேன், அப்ப‌டீன்னா என்ன‌ங்க‌..?”ன்னு ஆர்வ‌மா கேக்குறாரு புது பாய்.

“சுன்ன‌த் செய்ற‌துங்க‌”

“அப்ப‌டீன்னா..?”

“விருத்த‌சேத‌ம்னு த‌மிழ்ல‌ சொல்ல‌லாம். ஆங்கில‌த்தில் circumsition” என்று சொல்கிறார் வ‌ந்திருந்த‌வ‌ங்களில் இருத்த‌ர்.

இப்ப‌வும் ந‌ம்மாளுக்கு ச‌ரியா புரிய‌ல‌.

“பாய், தெளிவா புரியுற‌ மாதிரி சொல்லுங்க‌, நான்அதிக‌ம் ப‌டிக்காத‌வ‌ன், நான் என்ன‌ செய்ய‌ணும்..?”ங்குறாரு.

“நீங்க‌ ஒண்ணும் செய்ய‌வேண்டாம். ஒரு ஸ்டூல்ல‌ உக்கார‌வோ பெட்ல‌ ப‌டுக்க‌வோ செய்தா போதும். ந‌ம்ம‌ ஒசா உங்க‌ ஆணுறுப்புக்கு மேல‌ இருக்குற‌ தோலை ந‌ல்லா வெளியே எழுத்து அந்த‌ மேல் நுணித்தோலை வெட்டி விடுவார். கொஞ்ச‌ம் இர‌த்த‌ம் வ‌ழியும், பேன்டேஜ் போட்டு விடுவாங்க‌. ஒரு வார‌த்தில் புண்ணு ஆறிடும் பாய்”னு கேசுவ‌லா வ‌ந்திருந்த‌ பாய்க‌ள்ள‌ ஒருத்த‌ர் சொன்னார்.

தான் ஞாயிறுதோறும் க‌றி வாங்க‌ச்செல்லும் க‌சாப்புக்க‌டை காத‌ர் பாயின் உருவ‌ம் க‌ண்முன் நிழ‌லாட‌, அப்ப‌டியே ஷாக் ஆகி ப‌த‌றி எழுந்திரிச்சுட்டாரு புது பாய். “யோய் என்ன‌ய்யா சொல்றே…? என்னோட‌ ஆணுறுப்பில‌ க‌த்தி வெக்க‌ போறியா..? ம‌னுச‌னாய்யா நீ..? இதெல்லாம் அந்த‌ க‌லிமா சொலலித்த‌ர‌துக்கு முன்னாடியே சொல்ற‌தில்ல‌…?”னு க‌த்த‌ ஆர‌ம்பிச்சுட்டாரு.

“நீங்க‌ முஸ்லிம் வீட்ல‌ பொற‌ந்திருந்தா சின்ன‌ வ‌ய‌சில‌யே க‌த்னா செஞ்சிருப்பாங்க. இப்ப‌ல்லாம் குழ‌ந்தை பிற‌ந்த‌துமே செஞ்சுடுறாங்க. உங்க‌ளுக்கு அல்லாவோட‌ ஹிதாயத் இப்ப‌த்தானே கெட‌ச்சிருக்கு. ஆனா பாருங்க‌ இதுக்கெல்லாம் பெரிய‌ வெகும‌திக‌ள் உங்க‌ளுக்கு சுவ‌ர்க்க‌த்தில‌ காத்திட்டிருக்கு”ன்னு தாடியை நீவி விட்ட‌ப‌டி சொல்லியிருக்கார் ஒரு பாய்.

“ஏஞ்சாமி… இதுக்கு பிராய‌ச்சித்தமே இல்லையா..?”னு புது பாய் ப‌ய‌த்தில் கெஞ்ச‌…

“இல்லீங்க‌ இதில் விதிவில‌க்கே இல்லை”ன்னு கைவிரிச்சுட்டாங்க‌ வ‌ந்த‌வ‌ங்க‌.

“அப்ப‌டீன்னா என‌க்கும் வேற‌ வ‌ழியே இல்லீங்க‌. நான் இனிமேல் இஸ்ல‌லாத்தில‌ இருக்க‌ விரும்ப‌ல‌. என்னைய‌ விட்டிருங்க‌. நான் என்னோட‌ ப‌ழைய‌ ம‌த‌த்துக்கே போயிடுறேன்”ன்னிருக்கார் ந‌ம்மாளு.

“அதுவும் முடியாது பாய், முர்த‌த் ச‌ட்ட‌ம் உங்க‌ள் மீது பாயும்”னு சொல்லிருக்காரு வ‌ந்திருந்த‌வ‌ங்க‌ள்ல‌ வாட்ட‌சாட்ட‌மா இருந்த‌ பாய்.

“யோவ், எதையுமே புரியுற பாஷைல‌ சொல்ல‌ மாட்டீங்க‌ளாய்யா…? அதென்ன‌ய்யா முறுக்கு திங்கிற‌ ச‌ட்ட‌ம்”னு அப்பாவியா கேட்க..
.
“என்ன‌ பாய், ந‌க்க‌லா…? முர்த‌த் ச‌ட்ட‌ம்னா, இஸ்லாமிய‌ர்க‌ள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினால் அவ‌ர்க‌ளை கொலை செய்யும் ச‌ட்ட‌ம்”னு அதே வாட்ட‌சாட்ட‌ பாய் குல்லாவை ச‌ரிசெய்த‌ப‌டி சொல்ல‌…

ந‌ம்மாளுக்கு சினிமால‌ வ‌ர‌துமாதிரி அவ‌ர் பின்ப‌க்க‌ கால‌ருக்குள் கையை விட்டு அரிவாளை எடுக்க‌ப்போற‌ மாதிரியே தோணிச்சு. எடுத்தான்னா இவ‌ன் எங்க‌ வேட்டுவான்னுவேற‌ தெரியாது.

“என்ன‌ய்யா இது வாறேன்னா கீழே வெட்ட‌ச் சொல்றீங்க‌, போறேன்னா க‌ழுத்த‌ வெட்ட‌ வ‌ரீங்க‌…”னு சொல்லிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு த‌லைதெறிக்க‌ ஓடியவ‌ர்தான், ம‌னுச‌ன் இன்னும் ஓடிட்டே இருக்காராம்…

“க‌த்னாலும் வெட்டு க‌த்லேன்னாலும் வெட்டு”ன்னு சொல்லிட்டே யாராவ‌து ஓடுற‌த‌ பாத்தீங்கன்னா, அது ந‌ம்மாளாத்தான் இருக்கும். நிப்பாட்டி ஒரு இள‌நீர் வாங்கி குடுங்கய்யா…!

-Fazil Freeman Ali

Leave A Reply