74வது இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வுக்குழு நடத்தும் 2ஆம் ஆண்டு கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விழிப்புணர்வுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது…
8ம் வகுப்பு முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள்
கவிதை: எங்கள் வானம் எது? (அல்லது) விடியல் என்பது குடியுரிமை.
கட்டுரை: நாங்கள் இந்தியர்கள் இல்லையா? (அல்லது) ஏன் தேவை இந்தியக்குடியுரிமை
11,12 மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினருக்கான போட்டிகள்
கவிதை: வேறு தோட்டத்தில் பூத்த மலர்கள் (அல்லது) ஆயுள் வரை அகதிகளா?
கட்டுரை: மறுவாழ்வு முகாம்களில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு (அல்லது) நான்காம் தலைமுறை நாடற்ற மக்கள்
சிறுகதை: மறுவாழ்வு முகாம்களில் 30 ஆண்டுகால அகதி வாழ்க்கை (அல்லது) என் தேவை இந்தியக்குடியுரிமை
தலைப்பையொட்டிய தனித்திறன் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. புகைப்படம் 2. ஓவியம்
3. பாடல் 4. குறும்படம் 5. பேச்சு – 5 முதல் 8 நிமிடங்களுக்குள் இருக்கவேண்டும்.
கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிக்கான விதிமுறைகள்:
கவிதை: 32 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும், புதுக்கவிதையாகவோ, மரபுக்கவிதையாகவோ இருக்கலாம்.
கட்டுரை: 1000 சொற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 8-10ம் வகுப்பு மாணவர்கள் 500 சொற்களுக்கு குறைாமல் இருக்க வேண்டும். கட்டுரையானது அதற்குரிய வடிவமைப்புகளோடு குறிப்புகளுக்கு மேற்கோள்களோடும் தகுந்த சான்றுகளோடும் இருக்க வேண்டும்.
சிறுகதை: கதை மாந்தர், காலம், இடம், பாத்திரவார்ப்பு, மொழியறிவு கவனத்தில் கொள்ளப்படும் A4 தாளில் 2 பக்கங்களுக்கு குறையாமலும் 4 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
படைப்புகள் தலைப்பை ஒட்டியதாக இருக்கவேண்டும். படைப்புகள் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். ஒரு நபர் இரு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் நடுவர் குழு பரிசிற்குரிய படைப்புகளை தேர்வுசெய்யும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பங்கேற்பாளர்கள் தங்கள் சரியான பெயர் முகவரி தொடர்பு எண் உட்பட முழுவிவரங்களையும் தெரிவிக்க வேண்டும். படைப்புகளை PDF/JPEG ஆகவும் எழுத்துருக்களாகவும் அனுப்ப வேண்டும்.
படைப்புகளை 9629937691, 8675381942 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் Document மூலமாக ஆக அனுப்பி வைக்கவும்.
குடியுரிமை கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பாக செயலாற்றிய 10 தன்னார்வலர்களுக்கும், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் 5 வீரர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்படும்.