திமுகவுக்காக நாம்தான் பேசனும்! – மு.ரா.விவேக்

Share
பேரருளாளன் கலைஞர் வாழ்ந்த காலத்தில் கூட எவ்வளவோ பேர் அவர் மீது தனிப்பட்ட முறையில் பல கடுஞ்சொற்களை வீசியிருக்கிறார்கள், பெரும்பாலும் அவரின் உயரத்தில் காழ்ப்பு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்!
ஆம்! கலைஞரும் பத்திரிக்கையாளர் -இலக்கியம்- கலை- அரசியல்- வழக்காடுமன்றம் -பேச்சுமன்றம் எழுத்துக்கள் -படைப்புக்கள்- என்று எல்லாவற்றிலும் அவரின் ஆளுமையை செலுத்திக்கொண்டே இருந்தால்- மேற்படி தனி தனி துறை Specialist கள் எல்லோரும் நம்மால் முடியவில்லையே என்ற ஒரு கோபம் காழ்ப்பு அல்லது முடியாமை எல்லாம் சேர்ந்து கலைஞரை விமர்சிக்க வைத்தது!
அதை அரசியல் ரீதியில் கலைஞர் எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் அந்த Specialist களை
பயன்படுத்தி கொள்வார்கள் தேர்தல் நேரங்களில்!
அப்படி ஒரு காலத்தில் அய்யா நெல்லை கண்ணன் கலைஞரின் அரசியல் எதிரிகளால் பயன்படுத்தி கொள்ளப்பட்டார்!
இந்த பட்டியல் மிக பெரியது சிவாஜி, எம்ஜியார் மபொசி,நெடுமாறன், கண்ணதாசன்,தமிழருவி….
Etc என்று தொடங்கி சிறு சிறு குழுக்கள் திமுருகன் சீமான் களஞ்சியம் கவுதமன் என்று தொடர்ந்து கொண்டே இருக்கு…….
எல்லாம் கடந்து கலைஞரை விஞ்ச என்றைக்கும் எவராலும் முடியாது என்பது இன்று வரை நிதர்சனமான உண்மையாக வரலாற்றில் பதிந்து கிடைக்கிறது!
கலைஞர் காலத்தில் அவரை எதித்தவர்கள் கூட தனக்கு ஒரு பிரச்னை என்றால் கலைஞரிடம் சென்று அல்லது தூதுவர்கள் மூலமாகவோ விஷயங்களை சொல்லி தங்களை தற்காத்து கொள்வார்கள்,ஆனால் நேற்றைய நிகழ்வு சற்று யோசிக்க வைத்தது .
அய்யா நெல்லை கண்ணன் நேரடியாக தளபதியிடம் உங்கள் கண்பார்வையில் என்னை வைத்துக் கொள்ளுங்கள் நான் உங்களுக்கு பயன்படுவேன் என்று சொல்லியது மிகப்பெரிய விஷயம் நெல்லை கண்ணன் வரலாறு தெரிந்தவர்களுக்கு அது புரியும்! கலைஞரிடம் கூட இது போன்ற விஷயங்கள் பொதுவெளியில் நடந்ததில்லை அது தான் தளபதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் ஆளுமை!
எல்லோருக்கும் தோன்றலாம் யார் என்ன புகழ்ந்து பேசினாலும் குறை சொல்லுறீங்களே? என்று ..
ஆம்!
திமுக -கலைஞர் -தளபதி-உடன்பிறப்புக்கள் அவ்வளவு விஷங்களை முழுங்கி இருக்கிறார்கள் வெறும் எதிர்ப்பு என்பதற்க்காக எவ்வளவோ காயங்கள் சுமந்தே வந்தவர்கள் திமுகவினர் !
சுழி சம்பத்தில் தொடங்கியது….
காழ்ப்புணர்வின் உச்சம்….
-நெடுமாறன் இதுநாள் வரை பதவி ஏற்ற அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை ….
-தமிழருவி பேசியதாக பதிவுகள் இல்லை…
-கலைஞர் ஓய்வு நாள் இரவு கலைஞர் எதிர்ப்பிற்க்காக தொடங்கிய கட்சி
செய்த வேலை….
.
-கேவலம் தி.காந்தி கூட நம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க மனமில்லாமல் இருக்கிறார்…..
என்று சொல்லிக்கொண்டே போகலாம்…..
மேலும் கூட்டணியின் பொழுது சொந்த தோழமை கட்சி தோழர்கள் கூட பெரியண்ணன் சின்ண்ணன் என்று பேசுவார்கள்!
தேர்தல் காலத்தில் தோழமை கட்சிகள் எல்லாம் பிரச்சாரத்தில் இருக்கும் பொழுது ஊடகம் மூலமாகவும், இந்திய பிரதமரே வந்தாலும் உதயநிதிகளும், லியோனிகளும், ராசாக்களும் நேரடியாக குறிவைக்கப்பட்டு -திமுக தான்
பெரியண்ணனாய் தோழமைகளை காக்கும் கேடயமாக இருக்கும் -காக்கும்!
நன்றாக யோசிச்சு பார்த்தால் மற்ற கட்சியை காட்டிலும் திமுக தான் அதன் தொண்டர்கள் தான் களத்திலும் தளத்திலும் விமர்சிக்கப்பட்டு அதை எதிர்த்து போராடுவார்கள்!
*திமுகவை காவிகள்,ஹிந்துக்களின் எதிரியென்று பேசுவார்கள்- அவர்களின் தொங்கு சதைகள் தமிழ் தேசியர்கள் திமுக 90 சதவிகிதம் ஹிந்துக்கள் கட்சி என்று மற்றொரு பிரச்சாரம்!
*திமுகவை காவிகள், சிறுபான்மையினரின் வாக்குக்காக அரசியல் செய்கிறார்கள் என்று
பேசுவார்கள் -அவர்களின் தொங்கு சதைகள்/தமிழ் தேசியர்கள் சிறுபான்மையினருக்கு திமுக என்ன செய்தது? என்று மற்றொரு பிரச்சாரம்!
*சாதியவாதிகள் திமுக பட்டியல் மக்களுக்கு நிற்கிறது என்று இடஒதுக்கீடு புரிதல் அற்றோர் ஒரு புறம் பிரச்சாரம்- நீல சங்கிகள் திமுக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? என்று பிரச்சாரம்!
*தமிழுக்கு என்ன செய்தது திமுகன்னு போலி தமிழ் தேசிய கூட்டம் ஒரு புறம் -தமிழை வைத்து பிழைப்பை நடத்துது திமுகன்னு சங்கி கூட்டம் மறுபுறம்!
*புலிகளை அழித்த திமுகன்னு ஒரு கூட்டம் -புலி தீவிரவாத outfit களை வளர்த்து விட்டது திமுக பயங்கரவாதிகள் ன்னு ஒரு கூட்டம் பேசும்!
*அம்பேத்காரை இருட்டடிப்பு செய்கிறது திமுக ன்னு நீலசங்கிகள் ஒரு புறம் -இல்லை திமுக பல விஷயங்கள் செய்து இருக்கிறது அம்பேத்கார் நினைவாக என்று சொல்ல திமுகவிற்கு ஆதரவாய் எவரும் நின்றதில்லை!
இப்படியாக
இப்படி ஒரு கருத்தை “செய்தார்கள் -செய்யவில்லை” என்று இரு கூட்டம் தொடர்ச்சியாக பேசும்,இடையில் அய்யா பெரியார் பேசிய கருத்துக்களை திரித்து பேசி அதை தேர்தல் நேர “பிரம்ம பானமாய்”!?நினைத்து பயன் படுத்துவார்கள்!
இப்படியாக எல்லா தாக்குதல்களையும் தானே ஏற்று சமாளித்து வந்தவர்களை காத்து நின்று திரும்பி பார்த்தால் போடா “பெரியண்ணா” ன்னு சொந்த தோழர்கள் திட்டுவார்கள்!
எந்த கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆனாலும் தளபதியை கட்டி கொண்டு பாராட்டுவார்கள் பேசுவார்கள் ஆனால் பெரும்பாலான அவர்களின் தொண்டர்கள் திமுகவை பற்றியோ தளபதியை பற்றியோ தளத்தில் எழுதவோ பேசவோ மாட்டார்கள்!
அது ஏனோ தெரியாது!?
அண்ணன் திருமாவின் வெற்றி அறிவிப்பு இரவாகட்டும்-அய்யா வைகோ அவர்களின் ராஜயசபை அறிவிப்பாகட்டும்-செந்தோழர்களின் வெற்றி செய்தி திமுகவினர் கொண்டாடிய அளவின் பாதி கூட திமுகவினரின் வெற்றியை பேசக் கூட இல்லை!
பரவாயில்லை, தெரிந்தோ தெரியாமலோ இருந்திருக்கலாம் பெரியார் அண்ணா கலைஞர் தளபதி இப்படி யாரும் எந்த சமுதாய பின்புலமோ மத அடையாளமோ இல்லாத மாபெரும் தொண்டர் படையை உடன்பிறப்புகளின் படையை கட்டி எழுப்பியவர்கள்!
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரை போல் பலதுறை வித்தகர் அல்ல!
அரசியலை, அரசியல் களத்தை,தமிழ்நாட்டின் அரசியலை, நிர்வாகத்தை என்று அரசியலாக மக்களிடம் தன்னை ஐம்பது ஆண்டுகளாய் நிரூபித்து இந்த நிலையில் முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்!
இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் நேரடி கண்காணிப்பில் பரீட்சை வைக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் போர் ஆயுதம் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்!
அதை உணர்ந்த காவிகள் தான் “More Dangerous” என்றார்கள்!
ஆம்!
ஆயிரம் தோழர்கள் வருவார்கள் போவார்கள் தளபதியை /திராவிட இயக்கத்தை /அதன் அரசியல் பிரிவான திமுகவை /காக்க நாம் தான் இருக்கோம்!
நாம் தான் பேசணும்!
நமக்காக “நாம் என்றால் ராஜாமணிக்களும் செங்கண்ணகளும் போல் லட்சக்கணக்கான கலைஞரின் உடன்பிறப்புக்கள்” தான் பேசணும் எழுதணும் தாங்கி நிறக்கணும்!
திமுக ஒரு வாழ்வியல் 🖤❤
கலைஞர் ஒரு முடிவில்லா சகாப்தம் 🖤❤
தளபதி ஒரு துருவ நட்சத்திரம்🖤❤
வாழ்க திராவிட இயக்கம் 🖤❤
வெல்க தமிழ்நாடு 🙏🙏
-மு.ரா.விவேக்

Leave A Reply