விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 7 – ஆதனூர் சோழன்

Share

முதல் ரேடியோ டெலஸ்கோப் (மார்ச் 14, 1960)

பூமியிலிருந்து எவ்வளவு தூரம்தான் விண்வெளியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பிரிட்டிஷ் ரேடியோ டெலஸ்கோப் உதாரணமாக இருந்தது.

இன்றைக்கு கோடிக்கணக்கான மைல் தூரம்வரை விண்வெளியிலிருந்து சமிக்ஞைகளை பெற முடிகிறது. ஆனால் தொடக்கத்தில் இது சாத்தியம் இல்லாததாக இருந்தது.

லூனிக்-3 ராக்கெட் பூமியிலிருந்து சுமார் 5 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை சமிக்ஞைகளை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் ரேடியோ டெலஸ்கோப் புதிய சாதனையைப் படைத்தது.

1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேப் கேனவெரல் ஏவுதளத்திலிருந்து பயனீர்- 5 என்ற விண்கலம் ஏவப்பட்டது. இது பூமிக்கும் வெள்ளிக்கும் இடையில் சூரியனை சுற்றும் வகையில் அனுப்பப்பட்டது.

இந்த விண்கலத்திலிருந்து மார்ச் 14ஆம் தேதி சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து பிரிட்டிஷ் ரேடியோ டெலஸ்கோப் சமிக்ஞைகளைப் பெற்றது.

செஷயரில் உள்ள ஜோட்ரெல் பேங்க் என்ற இடத்தில் இந்த டெலஸ்கோப் அமைக்கப்பட்டது. பயனீர்-5 விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் இந்த டெலஸ்கோப் பயன்படுத்தப்பட்டது.

பூமியிலிருந்து டெலஸ்கோப்பிலுள்ள ஒரு பட்டனை அழுத்தியவுடன் ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கிலிருந்த 43 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் தனியாக பிரிந்து சூரியனை சுற்றத் தொடங்கியது.

அதன்பிறகு செயற்கைக்கோளில் இருந்த டிரான்ஸ்மிட்டரை செயலிழக்கச் செய்வதற்கு இன்னொரு பட்டன் அழுத்தப்பட்டது. இப்படிச் செய்ததன்மூலம் செயற்கைக்கோளில் இருந்த பேட்டரிகளின் சக்தி சேமிக்கப்பட்டது.

இந்த டெலஸ்கோப்பில் பூமியிலிருந்து 5 கோடி மைல் தூரத்திற்கு அப்பாலிருந்தும் சமிக்ஞைகளை பெறமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

செயற்கைக்கோளில் உள்ள பேட்டரிகள் சூரிய சக்தியிலி ருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும். அந்த மின்சாரத்தை பயன்படுத்தி அவ்வப்போது டிரான்ஸ்மிட் டர்களை பூமியிலிருந்து இயக்க முடியும். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் இந்த டிரான்ஸ்மிட்டர்களை இயக்க முடியும். பின்னர் படிப்படியாக நாள் ஒன்றுக்கு 5 நிமிடங்கள் மட்டும் டிரான்ஸ்மிட்டர்களை செயல்படுத்த முடியும்.

1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயனீர்-5 விண்கலத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெறுவதில் ஹவாய் தீவில் அமைக்கப்பட்ட டெலஸ்கோப் சிரமப்பட்டது. அந்த சமயத்தில் ஜோட்ரெல் பேங்க் டெலஸ்கோப் முக்கிய பங்கு வகித்தது.

1957ஆம் ஆண்டு இந்த டெலஸ்கோப் உருவாக்கப்பட்ட போது அதுதான் உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ் கோப்பாக கருதப்பட்டது. இந்த பெருமை அடுத்த 10 ஆண்டுகள் வரை நீடித்தது. இப்போதும்கூட உலகிலுள்ள மிகப்பெரிய டெலஸ்கோப்புகள் சிலவற்றில் இதுவும் ஒன்றாக கருதப் படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 8 – ஆதனூர் சோழன்

Leave A Reply