கவியரசு கண்ணதாசன்

Share

கண்ணதாசன் எனும் பேர் கேட்டமாத்திரத்தில் காவியத் தாயின் இளைய மகனான அந்தக் காதல் பெண்களின் பெருந்தலைவன் நம் கண்முன்னே வந்து களிநடம் செய்து நிற்கிறார்.

பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்த ஞானத்தால் எத்தனை எத்தனை சந்தத் தேன் கவித்துவப் பாடல்கள்.

இயேசு காவியம் யாத்தவர்தான்…

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர்தான்…

“நான் படைப்பதனால் என் பேர் இறைவன்” என்றெழுதிய அதே பேனாவால்,

“இறைவன் உலகத்தைப் படைத்தானாம்
ஏழையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் அவனென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?”

  • என்றும் நச்சென்று மெய்யாலுமே அர்த்தமுள்ள கேள்வி பிறந்ததும் அவர் பாடலில்தான்.

அவர்தான் கண்ணதாசன்!

மானுட வாழ்வின் அத்துணை வகையான உணர்வுகளையும் அவரது பாடல்கள் பிரதிபலித்தன.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனிஉடமை – நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.”

  • என்ற அமரவரிகளுக்குச் சொந்தக்காரர் கண்ணதாசன்.

அவர் வாழ்வைப் போலவே அவரது பாடல்களும் வண்ணக்கோலங்கள்தான்.

அவரது இலக்கியக் கடலில் நமக்குத் தேவையான முத்துக்களும் ஏராளம்.

கண்ணதாச முரண்,
கண்ணதாசத் தனித்துவம்,
கண்ணதாச ஈரம்

எல்லாமே அழகுதான்… பல்வேறுபட்ட மானுட வாழ்வைப்போல.

சோழ. நாகராஜன்

Leave A Reply