அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…

Share

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது.

அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல கூடியிருந்தோரின் கரவொலி அதிர்ந்தது. பார்த்தவர் விழிகளில் பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. 10 ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த தமிழகத்தை பண்படுத்த ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழர்கள் பரவசப்பட்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த கூத்துகள் அனைத்தும் தமிழகத்தை உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே, அதிலும் படிப்பறிவில்லா வட இந்திய முட்டாள்களே கேலிபேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

ஜெயலலிதா எனும் ஊழல் குற்றவாளிக்கு, நற்சான்றிதழ் கொடுத்து கூட்டணி அமைத்த கட்சிகளின் துணையோடு 2011ல் பதவியேற்றார் ஜெயலலதா. தேமுதிகவுடன், கம்யூனிஸ்ட்டுகளும் அப்போது கரம்கோர்த்தனர். அந்த 5 ஆண்டுகளில் 2014 ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல்வராக இருக்கும்போதே ஊழல் வழக்கில், அடுத்த மாநில சிறையில் அடைக்கப்பட்ட தமிழக முதல்வர் என்ற கேவலத்தை பெற்றுக்கொடுத்தார் ஜெயலலிதா.

அதன்பிறகு அந்த வழக்கில் பொய்யான கணக்கின் அடிப்படையில் மத்திய சட்டத்துறை உதவியோடு, வேறு ஒரு நீதிபதியின் ஒரு வரி உத்தரவால் விடுதலையானார். பின்னர், அந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது வேறு கதை. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் நிலுவையில் இருக்கும்போதே, 2015 மே 23 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளை தனி அணி அமைக்கச் செய்து, அதிமுக மட்டுமே 234 தொகுதிகளிலும் போட்டியிட வகைசெய்து தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் தில்லுமுல்லு செய்து திமுகவிடம் இருந்து சில தொகுதிகளை பறித்து ஆட்சி அமைத்தார் ஜெயலலிதா.

அந்த பதவியேற்பில் திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை 13 ஆவது வரிசையில் அமரவைத்தார். அந்த பதவியேற்பும் மிகப்பெரிய அசிங்கமாக அமைந்தது. அதுவரை எங்கும் இல்லாத அளவில், மொத்தம் மொத்தமாக அமைச்சர்கள் பதவியேற்றன. 20 நிமிடங்களில் நிகழ்ச்சியே முடிந்தது. கால்களை இழந்த ஜெயலலிதா அதிகநேரம் அமர முடியாது என்பதால் அந்த அசிங்கமான பதவியேற்பு அரங்கேறியது.

அதன்பிறகு, ஜெயலலிதா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தில் அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஒரு அரசாங்கம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால், அப்போதும் முதல்வர் பொறுப்பு ஜெயலலிதாவிடமிருந்து ஓ.பன்னீருக்கு மாற்றப்பட்டது.

ஜெயலலிதா இறந்தபிறகு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் அமைச்சர்களையும் ரெய்டுகளால் மிரட்டி, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் தனது பிரிவினை விஷத்தை கக்கி கந்தரகோலமாக்கியது. நிழல் அரசாங்கத்தை பாஜக நடத்தியது. திராவிட இயக்கத்தின் அடிப்படையான இட ஒதுக்கீடு, சுயமரியாதை, கல்வி உரிமை போன்ற அனைத்திலும் யாரோ போடும் உத்தரவுகளை அமல்படுத்தும் நிலை உருவானது.

இதையெல்லாம் எதிர்த்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் சதிகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து போராடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2021 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார்.

10 ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டு உலக அரங்கில் அசிங்கப்பட்டுக் கிடந்த தமிழகத்தை தலைநிமிரச் செய்ய புதிய முதல்வராக 2021 மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்கும்போது, ஆளுநர் I M.K.STALIN என்றுதான் தொடங்கினார். ஆனால், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று தனது தாத்தா, தந்தை ஆகியோரின் பெயர்களை முழுவதுமாக தனது பெயருடன் இணைத்து உறுதி எடுத்துக்கொண்டார்.

அமைச்சர்கள் அனைவருமே உளமார என்றே உறுதி எடுத்துக்கொண்டனர். இது நல்லதொரு தொடக்கமாகவ கருதப்படுகிறது.

Leave A Reply