நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 15 – ஆதனூர் சோழன்

Share

வெந்நிற பற்களுக்கு சில வழிகள்

வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு புன்னகை போதுமே!

அழகிய புன்னகைக்கு வெண்மையான பற்கள் அவசியம். புன்னகை அரசி, புன்னகை மன்னன் என்று பட்டம் பெறுகிறவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு போவார்கள். அல்லது, வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.

உயர்ந்த இடம் என்பது என்ன?
சொத்துகளைக் குவித்து பெறுவது மட்டுமா?

இல்லை. சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதும் உயர்ந்த இடம்தான்.

நாம் எல்லோருமே பிறரைக் கவர வேண்டும் என்றுதான் விரும்புவோம். மற்றவர் பார்வையில் அழகாக தோன்ற வேண்டும் என்றுதான் விரும்புவோம்.

இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அழகுநிலையங் களில் ஆணும் பெண்ணும் குவிகிறார்கள். விதம் விதமான அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் கொட்டப்படுகிறது.

மற்றவர்களைக் கவர்வதில் வெந்நிறப் பற்களுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தப் பற்கள், நமது பழக்கவழக்கங்கால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதிக அளவில் காபி அருந்துவது, புகையிலையைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் பற்களில் கறை ஏற்பட்டு அழகைக் கெடுத்துவிடுகிறது.

அழகுசாதனங்களைப் பயன்படுத்தாமலேயே வெண்மையான பற்களைப் பெறவும், மற்றவர்களைக் கவரவும் முடியும் என்று அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அவர்கள் வகுத்துள்ளனர்.

1. புகையிலைப் பொருட்களால், பற்களில் கறை படிகிறது. இந்தக் கறையைப் போக்க ஆப்பிள், காரட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவை, பற்களில் தோன்றியுள்ள கறை, ஆழமாக படிவதற்கு முன்பாக அகற்றிவிடுகின்றன. இதன்மூலம், மற்றவர் களைக் கவரும் வகையிலான பற்களைப் பெற முடியும்.

2. சில வகையான உதட்டுச்சாயங்கள் (லிப்ஸ்டிக்) பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவுகின்றன. அதாவது உங்கள் பற்கள் சாம்பல் நிறுத்துக்கு மாறிவிட்டது என்றால், அப்போது சிவப்பு நிற உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, பழுப்பு நிற உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்தலாம். பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அடர்த்தியான வண்ண உதட்டுச் சாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

3. வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகைகளையே அணியுங்கள். இது பற்களில் உள்ள வெண்மையை பிரதிபலிப் பதாக அமையும். மஞ்சள் நிற தங்க அணிகலன்களை அணிவதைத் தவிருங்கள்.

4. வெள்ளை நிற சட்டை அணிவதைத் தவிருங்கள். வெள்ளை நிற சட்டைகள், பற்களின் வெண்மை நிறத்தை வெளிப்படுத்தாது. எனவே, கிரீம் கலர் கொண்ட சட்டைகளை அணியலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

5. வண்ண பழரசங்கள் மற்றும் நீர் ஆகாரங்களை அருந்தும் போது, அதிலுள்ள வண்ணங்கள், பற்களில் படிந்துவிட வாய்ப்புள்ளது. பழரசங்களை அருந்த ஸ்டிராவைப் பயன்படுத்துவது நல்லது. அல்லது, கறையை ஏற்படுத்தும் நீர் ஆதாரங்களை அருந்தினால், உடனடியாக பல் துலக்கிவிட வேண்டும்.

6. மின்சாரத்தில் இயங்கும் டூத்பிரஷ்களைப் பயன்படுத் தலாம் என்று பல் மருத்துவர் லெவின் பரிந்துரை அளிக்கிறார். உணவு, புகையிலை, மது ஆகியவற்றால் பற்களில் ஏற்படும் கறைகளை நீக்குவதில் மின்சார டூத்பிரஷ்கள் சிறப்பாகச் செயல்படும் என்கிறார் அவர்.

7. இரவில் தூங்கச்செல்லும் போது பல் துலக்குவதை பழக் கமாக்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், பற்களில் உள்ள கறைகள், இரவு முழுவதும் அழுத்தமாக பதிந்து பற்களின் நிறத்தை மாற்றிவிட வாய்ப்பு உள்ளது.

8. பற்களை வெண்மையாக்கும் வகையிலான டூத்பேஸ்ட் களை மட்டுமே பயன்படுத்துங்கள். இது, பற்களில் கறை படியாமல் தடுத்துவிடும். சில டூத்பேஸ்ட்களுக்கு கறையைப் போக்கும் சிறப்பு திறன் இருப்பதாக பல் மருத்துவர் லெவின் கூறுகிறார். அதிலும், சோடா கலந்த டூத்பேஸ்ட்களைப் பயன்படுத்துவது சிறந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு சிறிய புன்முறுவல், நம்மைப் பற்றி மற்றவர்களிடம் சிறந்த எண்ணங்களை ஏற்படுத்தும். ஆனால், அது அழகியதாக இருக்க வேண்டும். ஆகவே, மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதிக நட்பை ஏற்படுத்துங்கள்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 16 – ஆதனூர் சோழன்

Leave A Reply