நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 17 – ஆதனூர் சோழன்

Share

மூளையை புத்துணர்வாக வைத்திருக்க…

இந்த நூற்றாண்டு இயந்திரகதியான வாழ்க்கையை அறிமுகம் செய்துவிட்டது. எல்லாவற்றுக்கும் இணைய தளங்களை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அன்றாட வாழ்க்கையில் சிந்திக்கும் ஆற்றலும் நினைவாற்றலும் குறைந்துவிடுகிறது.

இதற்கு மூளைக்கு புத்துணர்வூட்ட தவறுவதுதான் இதற்கு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க நாள்தோறும் செய்ய வேண்டிய பயிற்சிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வழிமுறைகள் நமது மூளை சோர்வடைந்து விடாமல் பாதுகாக்க உதவுகின்றன என்று நடைமுறைப் படுத்தியவர்கள் கூறுகின்றனர்.

1. மூளையின் இரு பக்கங்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். அதாவது மூளையின் இடதுபுறத்தில் இருக்கும் அமைப்புகள் வார்த்தைகளை ஞாபகம் வைத்துக் கொள்ளவும், வலதுபுறம் இருக்கும் அமைப்புகள் படங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளவும் செய்கின்றன. இந்த இரு பக்கங்களுக்கும் மாறிமாறி பயிற்சி கொடுத்தால் சிறப்பாக இருக்கும். இதற்காக கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபடலாம். அதைவிட குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்துகொள்வது சிறப்பாக இருக்கும்.

2. புதிய விஷயங்களை நாள்தோறும் கற்றுக் கொள்ள வேண்டும். மூளையைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை செயலற்றதாக மாறிவிடும். எனவே, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காக நாள்தோறும் 15 நிமிடங்களை செலவிடலாம். இதற்கு புதிய பாட வகுப்புகளில் சேரலாம் அல்லது நமக்கு விருப்பமான மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.

3. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகுபவர்களின் ஆயுட்காலம், மற்றவர்களைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, நண்பர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு யோசிக்கும் திறன், ஞாபக சக்தி அதிக அளவில் இருக்குமாம். எனவே, உங்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையிலான நண்பர்களுடன் அதிக நேரம் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் அருங்காட்சியகம் போன்றவற்றுக்கும் செல்லலாம்.

4. வாரத்துக்கு ஒரு நாள் உடலுறவுகொள்வது நல்லது. இதன்மூலம், மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

5. உடலில் உள்ள கொழுப்புகள், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகின்றன. எனவே, திராட்சை, காரட், தக்காளி போன்ற ஊட்டச்சத்து அதிகம் நிறைந்தவற்றை உணவுடன் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்புகள் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதை இந்த உணவுகள் தடுக்கின்றன. மேலும், உடலுக்கு ஆரோக்கியத் தையும் அளிக்கின்றன.

6. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து உடற் பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமல்லாமல், மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். மனஅழுத்தம் குறையும் எப்போ தும் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்று மருத்துவர் கள் கூறுகின்றனர். எனவே, நாள்தோறும் குறிப்பிட்ட நேரத் துக்கு உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

7. பபிள்கம்களை மெல்லுவது சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஞாபகத் திறன், கிரகிக்கும் ஆற்றல் அதிகரிக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பபிள்கம் மெல்லும் பழக்கத்தை தொடர்வவதால் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கிறது. இதனால் மூளைக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் செல்கிறலி§. எனவே, மூளைக்கு ஆரோக்கியம் ஆகிறது.

8. சில வகை சென்ட் மனதுக்கு புத்துணர்வை ஏற்படுத் துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். ஜப்பானில் கூட, சில நிறுவ னங்கள் தங்களது பணியாளர் களுக்கு நறுமணத்தை அளித்து ஊக்குவிக்கின்றன. எனவே, நமது உடலுக்கு ஏற்ற வாசனைப் பொருள் எது என்று கண்ட றிந்து, அதனை நாள்தோறும் பயன்படுத்தலாம்.

9. இடதுகை பழக்கம் உள்ளவர்கள், வலது கையால் பணிசெய்ய முயற்சிக்கலாம். வலதுகை பழக்கம் உள்ளவர் கள், இடது கையால் பணியாற்ற முயற்சிக்கலாம் என்று மருத்து வர்கள் கூறுகின்றனர். பின் னோக்கி நடப்பதும் மூளையை ஊக்குவிக்க உதவும்.

10. நாள்தோறும் 2 மணி நேரம், எந்தப்பணியிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும். பரபரப் பாக மாறிவிட்ட வாழ்க் கைச் சூழலில், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் ஆகியவை இடையூறு செய்வ தால், கவனிக்கும் திறன் குறைந்துவிடுவதாக ஆய்வு கள் தெரிவிக்கின்றன. எனவே தினமும் 2 மணி நேரம் அமைதியாக இருப்பதால், மூளை புத்துணர்வைப் பெற முடியும்.

11. காபி அருந்துவதைவிட அதிகமாக டீ அருந்துங்கள். கருப்பு டீ, ஞாபக சக்தி குறைவதைத் தடுக்கிறது. எலுமிச்சை சாறு, மூளையில் பதிவாகியுள்ள தகவல்களை திரும்பப் பெறுவதற்கு உதவுகிறது. எனவே, டீயுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.

12. பந்தை வீசுதல், சரியானபடி பிடித்தல் ஆகிய பயிற்சிகளில் தினமும் நண்பருடன் சேர்ந்து ஈடுபடுங்கள். இதில், சிறப்பாக செயல்பட்டால், பந்தை கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். இது, மூளையை ஊக்குவிக்கும்.

ஞாபகசக்தி குறைவால் பாதிக்கப்படுபவர்கள், மேலே சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் ஓரளவு முன்னேற்றம் பெறலாம். தியானம், யோகா ஆகிய பயிற்சிகளில் ஈடுபடுவது சிந்திக்கும் திறனையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்க உதவும்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 18 – ஆதனூர் சோழன்

Leave A Reply