நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 19 – ஆதனூர் சோழன்

Share

உடல் உறுதிக்கு எளிய பயிற்சிகள்

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது மூதாதையர் வாக்கு. அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் மனிதன் எதிர்கொண்டுவருகிறான்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஆரோக்கியமான உடல் இருக்க வேண்டியது அவசியம். இந்த ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கான வழிவகைகளைத் தெரியாமல் நாள்தோறும் குழம்பிக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு உடற்பயிற்சியே சரியான வழி என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தலை முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு பாகங்களையும் ஊக்குவிப்பதற்கான இந்த உடற்பயிற்சியை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதும் என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.

எந்த நேரத்திலும், எங்கும் செய்யும் வகையிலான இந்தப் பயிற்சிகளை செய்வதன் மூலம், 4 வாரங்களில் பலனை அடையலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உடற்பயிற்சி செய்வதற்கான வழிமுறைகளைக் காண்போம்.

A. கைகள் உடலை ஒட்டியபடி நேராக நில்லுங்கள். இரு கால்களுக்கும் இடையே ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். பின்னர், மெதுவாக முழங்கால்களை மடக்குங்கள். தொடைகள் இரண்டும் சமமாக தரையைப் பார்த்து மடங்கியவுடன் கைகளை மேல்நோக்கி உயர்த்துங்கள். புஜங்கள் இரண்டும் காதுகளை ஒட்டி வந்தவுடன் அப்படியே சிறிது நேரம் இருங்கள்.

B. இப்போது நிமிர்ந்து நில்லுங்கள். வலது காலை மடக்கி முழங்கால் இடுப்புக்கு நேராக வரும்படி தூங்குங்கள். பிறகு கைகளை நீட்டி பக்கவாட்டில் உடலுக்கு வெளியே வரும்படி செய்யுங்கள். உங்கள் இடதுகை முழங்காலுக்கு வெளியே வரவேண்டும். இது முடிந்தவுடன் இடது காலை மடக்கி முன்பு போலவே செய்யுங்கள். இந்த முறை வலதுகை முழங்காலுக்கு வெளியே செல்ல வேண்டும்.

30 வினாடி இடைவெளியில் இந்த பயிற்சிகள் ஒவ்வொன்றையும் 12 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

A. உங்கள் உயரத்துக்கான தரை விரிப்பை விரித்துக் கொள்ளுங்கள். அதில், உங்கள் முழங்கைகளை ஊன்றி, உள்ளங்கைகளை விரிப்பின்மீது பதியும்படி செய்து கொள்ளுங்கள். கால்விரல்கள் நன்றாக ஊன்றும்படி உடலை நீட்டிக் கொள்ளுங்கள்.

B. அந்த நிலையிலேயே, உங்கள் பேலன்ஸ் தவறிவிடாமல் வலதுபக்கம் ஒருச்சாய்த்து வளையுங்கள்.

C. பிறகு உடலை மீண்டும் இடதுபக்கம் ஒருச்சாய்த்து வளையுங்கள்.

30 வினாடி ஓய்வுக்குப் பிறகு இந்த பயிற்சிகளை 8 முதல் 10 முறை செய்யுங்கள்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 20 – ஆதனூர் சோழன்

Leave A Reply