நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 20 – ஆதனூர் சோழன்

Share

கொழுப்பை கரைக்க 20 நிமிட பயிற்சி

நாம் நிறைய சாப்பிடுவோம். ஆனால், அவை நன்றாக செரிப்பதற்காக என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க மாட்டோம். சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். அல்லது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறோம்.

உடல் உழைப்பு அதிகம் இல்லாவிட்டால் நமது உணவில் உள்ள கலோரிகள் கொழுப்பாக சேர்ந்து பலவிதமான தொந்தரவுகளுக்கு காரணமாக அமைகிறது.

நமது உணவில் உள்ள கலோரிகள் சிறப்பான முறையில் செரித்தால்தான், உடலுக்கு சக்தி கிடைத்து ஆரோக்கிய மாக இருக்க முடியும். இதற்காக 20 நிமிட உடற்பயிற்சி முறைகளை உடலியக்க வல்லுநர்கள் வழங்கியுள்ளனர்.

இந்தப் பயிற்சிகளை சரியாக செய்துவருவதன் மூலம், கலோரிகள் செரிமான அளவு 13 சதவீதம் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த உடற்பயிற்சிகளை முடித்து 16 மணி நேரம் வரைக்கும் சரியானபடி செரிமானம் இருக்குமாம்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, வாரத்துக்கு இரு முறை இதனைச் செய்ய வேண்டும்.

பயிற்சியின்போது,
இந்தப் பயிற்சிகளை செய்து கொண்டிருக்கும்போது, சத்துள்ள பானத்தை அருந்தலாம். அது, 2 மடங்கு கார்போ ஹைட்ரேட்டும், 1 மடங்கு புரோட்டீன் அடங்கியவையாக இருக்க வேண்டும். அதாவது, 24 கிராம் கார்போஹைட் ரேட்டும், 12 கிராம் புரோட்டீனும் இருக்கும் வகையில் பார்த் துக் கொள்ளலாம்.

பயிற்சி முடித்த பிறகு,
15 நிமிடத்துக்கு இதயத்துடிப்பை மெதுவாக இருக்க செய்துவிட்டு, விரைவில் சாப்பிடலாம். இந்தப் பயிற்சியை செய்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இதனால், உடனே பசி எடுக்கும். எனவே, கொழுப்பு நீக்கப் பட்ட பாலை ஒன்று அல்லது இரண்டு கோப்பை அருந்தலாம். உறைந்த நிலையிலுள்ள பழங்கள் இரண்டு கோப்பை அளவுக்கு சாப்பிடலாம்.

பயிற்சிக்கு அடுத்த நாள்
அதிக சிரமம் இல்லாத பயிற்சிகளில் ஈடுபடலாம். அதாவது முந்தைய பயிற்சிகளால் தசைகள் இறுகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதற்காக நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்லலாம். யோகா பயிற்சிகளை செய்யலாம். மைதானத்தில் மெதுவாக ஓடலாம்.

A. 12 முதல் 18 அங்குலம் உயரமுள்ள படிக்கட்டு முன் நில்லுங்கள். அல்லது, படத்தில் உள்ளதுபோல் மேடை அமைத்துக் கொள்ளுங்கள். படத்தில் உள்ளதுபோல் உடலை வளைத்து மேடை மீது குதியுங்கள். கைகள் சற்று உயர்ந்திருக்க வேண்டும்.

B. மேடையில் உங்கள் குதிகால்கள்தான் முதலில் பதிய வேண்டும். பிறகு உங்கள் முழங்கால்கள் மெதுவாக மடங்க வேண்டும். தலை நிமிர்ந்து முன்னோக்கி இருக்க வேண்டும். உடல் சற்று முன்னோக்கி வளைய வேண்டும். கைகள் தொடைகளின் இருபுறமும் தளர்ந்து தொங்க வேண்டும்.

C. இப்போது, அதே நிலையில் பின்னோக்கி தரையில் குதிக்க வேண்டும். குதிகால் முதலில் தரையில் பட வேண்டும். குதித்தவுடன் பாதங்கள் மெதுவாக தரையில் பதிய வேண்டும்.

ஒரு நிமிடம் இந்த பயிற்சிகளை வேகமாக செய்ய வேண்டும். ஓய்வு எடுக்கக் கூடாது.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

Leave A Reply