நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

Share

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…

அந்தப் பெண்ணின் கண்களைப் பாருங்கள்.

அது எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

உடலமைப்பைப் பாருங்கள்.

அது எவ்வளவு சிக்கென்று பளபளப்பாக இருக்கிறது.

அவருடைய முகத்தைப் பாருங்கள்.

அது தன்னம்பிக்கையில் மிளிர்கிறது.

இந்த உலகமே தன்னுடையது போல, அவளால் மட்டும் எப்படி இருக்க முடிகிறது?

நீங்கள் நேர்மையானவரா?

அப்படியானால், யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து இப்படி நீங்கள் நினைத்திருப்பீர்கள். அவளுடைய அழகையும் சுறுசுறுப்பையும் பார்த்து வியந்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று வியந்திருப்பீர்கள்.

அதிர்ஷ்டமா? பரம்பரை மரபணுவா? சிறப்பு உணவு வகையா? என்றெல்லாம் உங்களுக்குள் வினாக்கள் குவிந்திருக்கும்.

இருக்கலாம். அவளுக்கென்று சில ஆரோக்கியமான பழக்கங்கள் இருக்கலாம்.

ஆனால், ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

சில எளிமையான வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுங்கள். அவை, உங்களுடைய உடல் நலத்தையும், மனநலத்தையும் சிறப்பாக வடிவமைக்கும் என்கிறது.

நண்பர்களுடன் கலகலப்பாக பழகுவதிலிருந்து, சில புதிய உடற்பயிற்சிகள் வரை எளிமையான பத்து வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை உங்களை மகிழ்ச்சி நிறைந்தவராகவும், ஆரோக்கிமானவராகவும் மாற்ற உதவும். இன்றே நீங்கள் தொடங்கலாம்….

(தொடரும்)

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

Leave A Reply