நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

Share

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…(தொடர்ச்சி)

இது முதல் வழி.
பொதுவாக பெண்கள் பிறரைச் சார்ந்தே இருக்கிறார்கள். பிறருடைய தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்.

உங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்று நினையுங்கள். உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள். அது உங்களு டைய ஆரோக்கிய உணர்வுகளை மேம்படுத்தும். அந்த உணர்வு கள் உங்களைச் சுறுசுறுப்பானவராக மாற்றும். தோற்றத்தை அழகாக்கும்.

சரி, உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம்?

உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். உதாரணமாக படிப்பதைத் தேர்ந்தெடுங்கள். ஏதேனும் புதிய வகுப்புகளுக்கு செல்லுங்கள். வெளியுலகுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்.

நிறையப் புத்தகங்களைப் படியுங்கள். செய்தித் தாள்களை படியுங்கள். இணைய தளங்களில் மேயுங்கள். தன்னம்பிக்கையூட் டும் விஷயங்கள் உங்களுக்கு அறிமுகமாகும். தினமும் ஆயிரக் கணக்கான கதவுகள் திறக்கும். அது பல லட்சக்கணக்கான கதவுகளாக அதிகரிக்கும்.

மனித மூளையும், உடலும் அளவிடமுடியாத ஆற்றலை உள்ளடக்கியவை. அவற்றை நாம்தான் பயன்படுத்த வேண்டும்.

இது இரண்டாவது வழி.
நியூரோபிக்ஸ் என்ற பயிற்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறார் கள். இந்தப் பயிற்சி மூளையில் புதிய இணைப்புகளை தூண்டி விடும். அவற்றை செயல்படுத்தும். அதன்மூலம், முதுமையின் பாதிப்புகளை எதிர்த்து போராடும் என்கிறார்கள்.

இந்தப் பயிற்சி உங்களுடைய ஐம்புலன்களையும் எதிர்பாராத வழிகளில் உபயோகப்படுத்தும். அதன்மூலம் நரம்பு இணைப்பு களை பலப்படுத்தும். புதிய அணுக்களை உள்வாங்கும் அமைப்பு இளமையாகவும் வலுவாகவும் இருக்க உதவும்.

வெளிச்சம் இல்லாமல் பாத்ரூமில் குளியுங்கள். உடை அணியுங்கள். பிறகு விளக்கொளியில் உங்கள் உடைத் தேர்வை ரசியுங்கள். வழக்கமாக இடது கையில் கட்டும் கடிகாரத்தை வலது கையில் அணியுங்கள். தினமும் காலையில் வேறுபட்ட சென்ட்டை முகர்ந்து பாருங்கள். மறந்துபோன சில உணவு வகைகளைச் சமைத்துப் பாருங்கள்.

இது மூன்றாவது வழி.
நமக்கும் நமக்குள் இருக்கும் துணிச்சலுக்கும் இடையில் நிற்பது பயம்.

படகில் சவாரி செய்ய பயப்படுவோம். பிறருடைய கருத்தை மறுக்க பயப்படுவோம்.

பிறர் தவறாக நினைப்பார்களோ என்று பயப்படுவோம். நமது வேலை போய்விடுமோ என்று பயப்படுவோம்.

அவன் விவாகரத்து செய்து விடுவானோ என்று பயப்படு வோம். குழந்தைகள் நம் மீது அன்பு செலுத்தாமல் போய் விடுமோ என்று பயப்படுவோம். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயப்படுவோம்.

பயம் நம்மை துவளச் செய்கிறது. பயத்தை நாம் துவளச் செய்ய துணிச்சலான சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தனியாக சினிமாவுக்கு போகலாம். ஏதேனும் ஒரு இடத்துக்கு தனியாக பயணம் செய்யலாம். இதுவரை உங்களுக்கு பழக்க மில்லாத காரியங்களை துணிந்து செய்ய முயற்சிக்கலாம்.

இது உங்களுக்குள் பயத்தை போக்கும். உங்களுடைய சுய மதிப்பீட்டை மேம்படுத்தும். மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

இது நான்காவது வழி.
இது குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோக மானது.

“நான் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன்”
“நான் வேலைக்கு போய் தினம் தினம் சாகிறேன்”
“இல்லை என்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது”
“ஆமாம் என்று சொல்லிவிட்டு விழிக்கிறேன்”

இப்படியெல்லாம் பெண்கள் தவிப்பதைப் பார்த்திருப்பீர் கள். இந்தப் பட்டியல் இன்னும் நீளும்.

குற்ற உணர்வால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தவறான உணர்வுகளால் தடுமாறிக் கிடப்பவர்கள்.

இந்த உணர்வை கிள்ளி எறியத் தவறினால் வாழ்க்கை அவ்வளவுதான்.

இந்த குற்ற உணர்வுக்கு ஓய்வு கொடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.

“நீ ஏன் இங்கே இருக்கிறாய்?”

“நான் உனக்கு எந்த வகையில் உதவ முடியும்?”

“நீ இங்கே இன்னும் சில நாட்கள் தங்கியிருக்க முடியும். ஆனால், நீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது”

குற்ற உணர்வை நோக்கி இப்படி கேள்வி கேளுங்கள். உங்க ளுக்குள் சாதகமான, பாதகமான என்று இரு உணர்வுகளையும் நிரப்ப இடம் கொடுங்கள். அவற்றுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அந்த உணர்வுகளை அனுமானியுங்கள். அது உங்களை அமைதிப்படுத்தும். எப்போதும் இயல்பாக இருக்கும்படி செய்யும்.

இது ஐந்தாவது வழி.
உடற்பயிற்சிகள் செய்தும், மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?

நமது உடற்பயிற்சிகள் அவற்றுக்குரிய ஆரோக்கிய பலன்களை அளிக்கத் தவறுவதுதான் காரணம்.

நாம் தேர்ந்தெடுக்கும் பயிற்சிகள், தொடர்ந்து செய்வதற்கு தகுதி உடையவையாக இருக்க வேண்டும். உங்களால் தொடர்ந்து செய்ய முடியாத பயிற்சிகளை தேர்வு செய்யக் கூடாது.

ஜாக்கிங் போகிறேன், சைக்கிளிங் போகிறேன், நீச்சல் போகிறேன் என்று உங்களை நீங்கள் கட்டாயப்படுத்தி பயிற்சியில் ஈடுபடக்கூடாது. இது உங்களுடைய உடலுக்கு நல்லது செய்வதற்கு பதிலாக தீயதைத்தான் செய்யும்.

உங்களுக்கு ஏற்ற, உடலை சிக்கென்று வைத்திருக்கக் கூடிய பயிற்சியை தேர்வு செய்யுங்கள். ஏனென்றால், உடற்பயிற்சியில் ஈடுபடும் 60 சதவீதம் பேர் ஆறு மாதங்களிலேயே பயிற்சிகளை நிறுத்தி விடுகிறார்கள்.

திறந்த மனதுடன் பல்வேறுபட்ட விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

(தொடரும்)

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

Leave A Reply