நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

Share

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…(தொடர்ச்சி)

இது ஆறாவது வழி.
மனம் விட்டு சிரிப்பதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் விளையும் பலன்கள் ஒரே மாதிரியானவை என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

கைகளை ஆட்டி உடல் குலுங்கக் குலுங்கச் சிரியுங்கள். மனம் விட்டு சிரிப்பதால் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கலோரிகள் கரைகின்றன. இயற்கையான வலி நிவாரணிகளை செயல்படத் தொடங்குகின்றன.

மன அழுத்தத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது.

வயிறு குலுங்க சிரிப்பது, உங்கள் வேலையில் திருப்தியை ஏற்படுத்தும். சுயமதிப்பில் திருப்தியை ஏற்படுத்தும். உங்கள் எதிரே வரும் தடைகளில் இருந்து மீள உதவி செய்யும்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாய்விட்டு சிரியுங்கள்.

இப்படி செய்வதால், நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

இது ஏழாவது வழி
எழுமிச்சை அல்லது நாரத்தை வாசனையை முகர்ந்தால் மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள பல பகுதிகள் நேரடி யாக தூண்டிவிடப்படும். அது, உங்களுடைய உணர்வுகளை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தும்.

எழுமிச்சை எண்ணெய் வாசம் மூளையில் சுரக்கும் செரோ டோனின் மற்றும் நோரெபிநெப்ரைன் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதன்மூலம் நமக்குள் சாதகமான உணர்வுகள் மேம்படுகின்றன என்று ஓஹியோ ஸ்டேட் யுனிவர்ஸிடியின் மனோதத்துவ துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எழுமிச்சை அல்லது நாரத்தை சென்ட்டை உங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். ஷாம்பூ, மெழுகு வர்த்தி, சலவைத் தூள் ஆகியவற்றில் எழுமிச்சை வாசம் கலந்தவையாக வாங்கி பயன்படுத்துங்கள். உங்கள் துணிகளில் கூட இந்த சென்ட்டை உபயோகிக்கலாம்.

இது எட்டாவது வழி.
அமெரிக்கர்களில் 84 சதவீதம் பேர் வேலையில் திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். அப்படி வேலையில் திருப்தி இல்லாதவராக நீங்கள் இருந்தால் இந்த வழி உங்களுக்குத்தான்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதாவது, எதனால் உங்கள் வேலையில் அதிருப்தி அடைகிறீர்கள் என்பதை துல்லியமாக கண்டறிய வேண்டும்.

சம்பளம் குறைவாக கொடுப்பதாக நினைக்கிறீர்களா? உங்களை சரியாக பயன்படுத்தவில்லை என கருதுகிறீர்களா? உங்களை யாரும் பாராட்டவில்லை என வருத்தப்படுகிறீர்களா? அளவுக்கு அதிகமாக வேலை செய்வதாக நினைக்கிறீர்களா?

முதல் வாய்ப்பு, புதிய வேலை தேடுவதற்கு முன், எந்த விஷயத்தையும் தனிப்பட்ட வகையில் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். அல்லது புதிய வேலை திறமைகளை பெறுங்கள்.

அடுத்த வாய்ப்பு, பிடிக்காத இடத்திலும் வேலை பார்ப்பதற்கான காரணங்கள் மீது கவனத்தைச் செலுத்துங்கள். தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுங்கள். உடனடியாக உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் மீதும், உங்களுடைய நீண்டகால லட்சியங்கள் மீதும் குறியாக இருங்கள்.

நீங்கள் செய்யும் வேலைகளில் உங்கள் பலத்தை காட்டுங்கள். பலஹீனங்களை சமாளியுங்கள். எதை உங்களால் சிறப்பாக செய்ய முடியுமோ அதில் கவனம் செலுத்துவதுதான் நல்ல வேலைக்காரருக்கு அடையாளம்.

இது ஒன்பதாவது வழி.
தனிமையை விரும்புகிறவரா நீங்கள்?

தனிமை சில சமயங்களில்தான் நல்லது. பிறருடன் கலந்து பழகிவிட்டு, தனிமையில் சிந்திப்பதுதான் நல்லது.

மற்றவர்களிடம் இருந்து உங்களை முற்றிலும் துண்டித்துக் கொள்வது நல்லதல்ல.

அந்த மாதிரி தனிமை மிகக் கொடூரமானது.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயங்களைக் காட்டிலும் இது அபாயமானது. இதைத் தவிர்ப்பது நல்லது என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மற்றவர்களுடன் உங்களை இணைத்துக் கொள்ளப் பழகுங் கள். நினைவாற்றலையும், அறிவார்ந்த தகுதிகளையும் ஊக்கு விக்கும் பாரம்பரியமான உளவியல் பயிற்சிகளில் சமூகமயமா தல் முக்கிய பங்கு வகிக்கிறது.

மற்றவர்களுடன் 10 நிமிடங்கள் கலந்துரையாடுங்கள். அது உங்களுடைய அறிவார்ந்த நடவடிக்கைகளை மேம்படுத்தும். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும்.

இது பத்தாவது வழி.
உங்களுடைய பணமாகவே இருந்தாலும், அதனுடன் ஆரோக்கியமான, நேர்மையான உறவு இருக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இது தவறும்போது, தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும். அது உங்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் என்கிறார்கள்.

உங்கள்மீது உங்களுக்கு இருக்கு உறவை, பணத்துடன் நீங்கள் வைத்திருக்கும் உறவு பிரதிபலிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

நமது பணத்தை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதிலிருந்து, நாம் யார் என்பதற்கு விடை கிடைப்பதாக நிதி ஆலோசகர்கள் கருதுகிறார்கள். பணத்துடன் ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள, உங்களுடைய வரவு செலவுக் கணக்குகளை கவனமாக பராமரிக்க வேண்டும். என்கிறார்கள்.

கட்டுப்பாடு, ஆற்றல் ஆகிய உணர்வுகளை மேம்படுத்த ஒவ்வொரு மாதமும் உங்களுடைய வருமானம் செலவு ஆகியவற்றை ஆய்வு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

முற்றும்.

Leave A Reply