நேரம் நல்ல நேரம் – 10 – ஆதனூர் சோழன்

Share

நகம் படிப்பவரா நீங்கள்?

நகத்தை கடித்து குதறும் பழக்கத்தை கைவிட முடியாமல் தவிப்பவரா நீங்கள்? அப்படீன்னா இது உங்களுக்குத்தான்.

நகம் கடிப்பவர்கள் தங்களது இந்த பழக்கத்திற்கு வெவ்வேறு காரணங்களை கூறுவார்கள்.

தீவிரமான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது சிலர் நகம் கடிப்பார்கள்.

வேறு சிலரோ மனக் குழப்பத்தில் இருக்கும்போது குழப்பத்திற்கு காரணமானவர்களை கடித்து குதறுவதற்கு பதிலாக நகத்தை கடித்து குதறுவார்கள்.

பிரபல டைரக்டர் ஸ்ரீதர் ஒருமுறை தனது நகம் கடிக்கும் பழக்கம் குறித்து இப்படி கூறினார்.

“ஒரு முக்கியமான காட்சியை எப்படி எடுப்பது அல்லது அந்த காட்சிக்குரிய வசனங்களை எப்படி அமைப்பது என்பது குறித்து யோசிக்கும் போது நான் நகம் கடிப்பேன். சில சமயம் நகத்தை கடித்துக் குதறி, நகச் சதையையும் கடித்து இருக்கிறேன். வாயில் ரத்தத்தின் உப்புச் சுவை அறிந்தவுடன் சுய நினைவுக்கு வந்திருக்கிறேன்.”

நகம் கடிக்கும் பழக்கத்தின் தீவிரத் தன்மை இதிலிருந்தே புரியும்.

இந்த பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள் எப்போதெல்லாம் நகம் கடிக்க தோன்றுகிறதோ அந்தச் சமயங்களில் தங்களது முஷ்டியை மூன்று நிமிடங்கள் இறுக மூடிக் கொள்ளும்படி ஆய்வாளர்கள் யோசனை கூறியுள்ளனர்.

இவர்கள் நகம் கடிப்பவர்களை சோதித்து பார்த்தனர்.

– நகம் கடிப்பவர்கள் தங்களிடம் ஒரு டைரியை வைத்துக் கொண்டு எந்த சமயத்தில் நகம் கடிக்க தோன்றுகிறது என்பதை குறிக்கலாம்.

– எப்போதெல்லாம் நகம் கடிக்கத் தோன்றுகிறதோ அந்த சில கணங்களுக்கு நகத்திற்கு பாலிஷ் போடும் வேலையை செய்யலாம்.

நகம் கடிக்கும் உணர்வு எப்போது தோன்றுகிறதோ உடனே முஷ்டியை இறுக மூடியபடி மூன்று நிமிடங்கள் வரை கடத்தலாம்.

இந்த மூன்று வழிகளில் மூன்றாவது வழியை பின்பற்றியவர்கள் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நேரம் நல்ல நேரம் – 11 – ஆதனூர் சோழன்

Leave A Reply