நேரம் நல்ல நேரம் – 11 – ஆதனூர் சோழன்

Share

இளம் பருவத்தில் தோன்றும் முகப்பருக்கள்

உலகம் முழுவதும் 16 வயது முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட ஆண், பெண்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது.

இந்த முகப்பருக்கள் அழகிய முகத்தில் நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி செழிப்பான எதிர்காலத்தை பாதிக்கின்றன. தன்னம்பிக்கையை குறைத்து உறவுகளையும் சேதப்படுத்துகின்றன.

தீராத ஆஸ்த்மா. நீரழிவு, முதுகுவலி, மூட்டு வீக்கம், காக்காய் வலிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு நிகராகவே, முகப்பருக்களால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முகப்பருக்கள் எவ்வாறு உருவாகின்றன?

தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் தடங்கல் ஏற்படும்போதோ வெடிப்புகள் அல்லது தொற்று ஏற்படும் போதோ முகப்பருக்கள் தோன்றுகின்றன.

இவை குறிப்பாக முகம், தோள்பட்டை, முதுகு மற்றும் மார்பு பகுதிகளில் தோன்றுகின்றன. ஏனெனில் இந்த பகுதிகளில் தான் எண்ணெய் உற்பத்தி செய்யும் தோல் அமைப்புகள் மிக வலுவாக உள்ளன.

உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படக் கூடிய பூப்பு பருவத்தில் இவை பெரும்பாலும் தோன்றுகின்றன.

அதாவது 16 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட வயதில் இவை உச்சத்திற்கு செல்லக்கூடும்.

முகப்பருக்களால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் சில ஆண்டுகளில் அதிலிருந்து மீள்கின்றனர். வேறு சிலரோ வாழ்க்கை முழுவதும் தொல்லை அனுபவிக்க நேருகிறது.

போதுமான உடற்பயிற்சி இல்லாதது. அதிக அளவில் சாக்கலேட் சாப்பிடுவது, உடல் நலம் பேணுவதில் கவனமின்மை ஆகியவைதான் முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணம் என இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால், உணர்ச்சி வயப்பட்ட மன அழுத்தம், சோர்வு, சில வகை அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்துவது ஆகியவையும் முகப்பருக்கள் தோன்ற காரணமாவதாக இப்போது கருதப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் முகப்பருக்கள் தோன்றுவதை தடுக்க முடியாது.

ஆனால் அவற்றால் ஏற்படும் விளைவுகளை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு மருந்துகள்: உள்ளுக்கு சாப்பிடக் கூடிய மருந்துகள். முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளைக் கொன்று நிவாரணம் அளிக்கக் கூடும்.

ஐஸோடிரெடினோனிம் : வைட்டமின் ‘ஏ’யை அடிப்படையாகக் கொண்ட மருந்து இது. மிக தீவிரமான முகப் பருக்களுக்கு எதிராக பயனுள்ள வகையில் செயலாற்றக் கூடியது.

ஆனால் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உலர்ந்த உதடுகளுக்கும், தலைவலிக்கும் காரணமாக அமையக்கூடு.

லேசர் : லேசர் கதிர் மூலம் முகப்பருக்களின் வேரை அழிக்கலாம்.

எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப்புகளை உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

நேரம் நல்ல நேரம் – 12 – ஆதனூர் சோழன்

Leave A Reply