நேரம் நல்ல நேரம் – 20 – ஆதனூர் சோழன்

Share

நியூரோபதிக்கு காந்த சிகிச்சை

நியூரோபதி என்பது வலி, எரிச்சல், உறைவு மற்றும் தைப்பது போன்ற உணர்வுக் கலவையாகும். இது நமது பாதத்தில் இருந்து துவங்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கால்களை பாதித்து பின்னர் கைகளையும் பாதிக்கக் கூடும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொதுவான அறிகுறி. தவிர, மது அடிமை மற்றும் புற்று நோயாளிகளுக்கும் இந்த அறிகுறி தோன்றக் கூடும்.

இவர்கள் போக மூன்றாவது வகையினருக்கும் இதுபோன்ற உணர்வு ஏற்படும். ஆனால், அதற்கான காரணம் தெரியாது. இவ்வகையான அறிகுறி களுக்கு வழக்கமான மருந்துகளைக் கொண்ட சிகிச்சை உபயோகமாக இருக்காது.

எனவே, காந்த சிகிச்சை நிஜமாகவே பலனளிக்குமா?

இவ்வகை சிகிச்சையின் வெற்றி குறித்து டாக்டர் மைக்கேல் வெய்ன்டி ராப் என்பவரின் ஆய்வு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

காந்த சிகிச்சை பெற்ற 8 பேரில் 6 பேருக்கு இத்தகைய அறிகுறிகள் மாறியிருப்பதாக அவரது ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு, 4 மாதங்கள் தினமும் 24 மணி நேரம் காந்த சிகிச்சையைப் பெற்றவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு நோயாளிகளை கொண்டு நடத்தப்பட்டது. என்னிடம் வந்த பல நோயாளிகள் காந்த சிகிச்சை நன்கு பலனளிப்பதாக தெரிவித்தனர். இதைத் தான் நானும் புலனாய்வு செய்ய முடிவு செய்திருந்தேன் என்கிறார் டாக்டர் மைக்கேல்.

டாக்டர் மைக்கேல் வெய்ன்டிராப்பின் ஆய்வுகள் பெய்ன் மேஜனேஜ்மென்ட் என்ற அமெரிக்க இதழில் பிரசுரமாகி உள்ளது.

இதனிடையே இந்த காந்த சிகிச்சை 30 சதவீதம் வலி நிவாரணத்தை மட்டுமே அளிக்கும். ஆனால் வலி எப்போதும் இருக்கவே செய்யும். இந்த காந்த சிகிச்சை ஒரு நோயாளிக்கு இதமான உணர்வை ஏற்படுத்தும்.

எனினும் நியூரோபதியை முழுமையாக கட்டுப்படுத்த காந்த சிகிச்சையால் முடியாது எனவும் அமெரிக்காவில் உள்ள பெரிபெரல் நியூரோபதி மையத்தைச் சேர்ந்த நர்மன் லஸ்டோவ் என்ற டாக்டர் கூறியுள்ளார்.

தற்போது காந்த வியாபாரம் தீவிரமாகியுள்ளது. ஆரோக்கியத்திற்கான காந்தம் தயாரிப்பில் சில கம்பெனிகள் தனித்துவம் பெற்றுள்ளன. இந்த கம்பெனிகள் அனைத்து புராதன எகிப்தியர்களின் காந்த சிகிச்சை முறை குறித்து அறிந்து கொண்டு இந்த தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

Leave A Reply