சேது சமுத்திர திட்டத்தை, சு.சாமி காவு வாங்கியது யாருக்காக தெரியுமா? – ஆதனூர் சோழன்

Share

இதுவரை சேது சமுத்திர திட்டம் முடக்கப்பட்டதற்கு இந்து மத நம்பிக்கை மட்டுமே காரணம் என்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னனியில் மிகப்பெரிய சதி இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவு சேது சமுத்திர திட்டம்.  இந்த திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார நிலையும்,  வேலை வாய்ப்புகளும் பெரிய அளவில் மேம்பட்டிருக்கும்.

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் இந்த திட்டத்திற்கு திமுக ஒப்புதல் பெற்றது. அனைத்து விதமான ஆய்வுகளையும் மேற்கொண்டு பாதையை தேர்வு செய்து அன்றைய பிரதமர் வாஜ்பாய் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.

அதை தொடர்ந்து மத்தியில் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் மன்மோகன் சிங் 2005ஆம் ஆண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போதெல்லாம் இந்த திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடலுக்கடியில் சுண்ணாம்புத் திட்டுகள் உள்ள பகுதியில் தான் இந்த கால்வாய் செல்லும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த சுண்ணாம்புத் திட்டுகளை ராமர் பாலம் என்று அப்போது யாரும் சொல்லவில்லை.

2005ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட உடன் இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக இலங்கையின் தெற்குப் பகுதியில் ஹம்பன்தோட்டா என்ற சிறு துறைமுகத்தை மேம்படுத்த ராஜபக்சே முடிவு செய்தார்.

இந்த திட்டத்திற்கு சீன அரசு பெருமாளவு கடன் வழங்க முன் வந்தது. 1800களில் பிரிட்டிஷ் கடற்படையின் கண்காணிப்பு மையமாக ஹம்பன்தோட்டா உருவாக்கப்பட்டது.

சேது சமுத்திர கால்வாய் உருவாக்கப்பட்டால் இலங்கையை சுற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகம் வழியாக மும்பை மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வது தடுக்கப்படும். மன்னார் வளைகுடா வழியாக கப்பல்கள் மும்பை செல்ல வழி ஏற்படும்.

இதன் மூலம் கொழும்பு துறைமுகத்தில் சரக்குகள் இறங்குவது தடைபடும். அங்கு ஆண்டுக்கு 36 ஆயிரம் கப்பல்கள் வந்து செல்கின்றன. இவற்றில் சுமார் 4 ஆயிரத்து 500 கண்டைனர் கப்பல்கள் ஆகும்.

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறினால் கொழும்பு துறைமுகம் கிட்டத்தட்ட மூடப்படும் நிலை உருவாகும் என்று கருதப்பட்டது. அந்த சமயத்திலேயே இந்த திட்டத்திற்கு சர்வதேச முட்டுக்கட்டைகள் வரும் என்று கருதப்பட்டது.

ஆனால் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை இன்னொரு சர்வதேச துறைமுகமாக மாற்ற ராஜபக்சே முடிவு செய்தார். சீனா அவருக்கு பின்னணியில் செயல்பட்டது. சேது  கால்வாய் திட்டத்தை முடக்கினால்தான் இந்த திட்டம் நிறைவேறும் என்று ராஜபக்சே முடிவு செய்தார்.

அவருடைய இந்த முடிவை செயல்படுத்த அவருக்கு உதவியாக சர்வதேச ஏஜெண்ட் சுப்பிரமணியசாமி வந்து சேர்ந்தார். இதற்காக அவருக்கு ஏராளமான பணம் கைமாறியது.

சேது கால்வாய் திட்டத்தை முடக்கினால் இந்தியாவின் முன்னேற்றம்  தடைப்படும் என்பதை விட தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளம்பெறும் என்பதுதான் சுப்பிரமணியசாமிக்கு உறுத்தலாக இருந்தது. அதைவிட இந்த திட்டம் நிறைவேறினால் திமுகவுக்கும் கலைஞருக்கும் பேர் கிடைத்துவிடும் என்பது மிகப்பெரிய எரிச்சலாக மாறியது.

சேது சமுத்திர கால்வாய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிவந்த ஜெயலலிதாவும் சுப்பிரமணியசாமியின் சதிக்கு ஆதரவளித்தார். அதை தொடர்ந்து ராமர் பாலத்திற்கு ஆபத்து என்ற முழக்கம் எழுந்தது.

இந்துகளின் நம்பிக்கை என்ற வழக்கமான கதையை பரப்பி உச்சநீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அதைத்தொடந்து 2008 ஆம் ஆண்டு திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. திட்டத்தில் சுமார் பாதி அளவு நிறைவேறிய நிலையில் முடக்கப்பட்டது.

இந்த சதியில் ராஜபக்சேவுக்கும் சீன அரசுக்கும் ஆதரவாக சுப்பிரமணியசாமி செயல்பட்டார் என்பதற்கு இந்த படமே சாட்சி. சங்கராச்சாரியாருக்கு சமமாக உட்காரும் சுப்பிரமணியசாமி ராஜபக்சேவின் காலடியில் ஒரு நாயைபோல உட்கார்திருக்கும் நிலையே ராஜபக்சேயின் அடியாளாக சு.சாமி செயல்பட்டார் என்பதை உறுதிசெய்யும்.

Leave A Reply