சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

Share

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம்(தொடர்ச்சி)

கறியுப்புச் சுத்தி முறைகள்
உப்பைக்கடல் நீர் அல்லது மழைநீர்விட்டு கரைத்து வடிகட்டிக் காய்ச்சி குழம்பு பக்குவத்தில் இறக்கி வெயிலில் காயவைத்து தெடுக்க அவ்வுப்பு உறைந்த சுத்தியாகும்.

நாகபஷ்பம் சுத்திமுறைகள்
நாகம் உருக்கு முகத்தில் சிறிது தீய்ந்து சிறு பொறியுண்டாம் சமயத்தில் இவ்விரண்டு குன்றிமணி (50 கிராம்) அளவு அபின் கொடுத்து தேய்த்து நன்றாய் ஊதிவிடபொரிபோலப் பூக்கும். அதை அரைத்துத் துணியில் வடிகட்டி உபயோகிக்கவும்.

மேற்படி தூறுக்கு சிறு அம்மான்பச்சரிசி துத்தி இவற்றின் சாறுகளைத் தனித்தனியாய் விட்டு அரைத்து நான்கு முறைபுடமிட்டெடுத்தலும் வழக்கம் இதனைச் சீதபேதி முதலிய நோய்களுக்கு சிறப்பாய் வழங்கலாம்.

வைரச் சுத்தி முறைகள்
வைரத்தை எலுமிச்சம்பழத்தினுள் வைத்து அகத்தியிலைச் சாற்றில் வேவைத்து எடுக்க சுத்தியாகும்.

முத்தி சுத்தி முறைகள்
முத்தை எலுமிச்சம் பழச்சாற்றிலும் காடியிலும் ஒருநாள் ஊறவைத்துத்தெடுத்து நீர்விட்டு கழுவி எடுக்க சுத்தியாகும்.

வைடூரியச் சுத்தி முறைகள்
குதிரை, பசு, தேசி (கழுதை) இவற்றின் நீர்களொன்றில் வைடூரியத்தை ஒருநாள் ஊறவைத்து எடுத்து சாம்பல் பூசணிக் காய்ச் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து வெந்நீர் விட்டு கழுவியெடுக்க சுத்தியாகும்.

வெண்கலம் சுத்தி முறைகள்
வெண்கலத்தை உருக்கி, மூன்று முறை புளியைச் சாற்றில் ஊற்றி, பிறகு கொள்ளுக்குடி நீரில் மூன்றுமுறை ஊற்றி எடுக்கச் சுத்தியாகும்.

மரகதச் சுத்தி முறைகள்
மரகதத்தை வச்சிர மூசையிலிட்டு உலையில் வைத்து சூடேறிய பின் குதிரை மூத்திரத்தில் ஏழுமுறை தோய்த்து எடுக்க சுத்தியாகும்.

மாணிக்க சுத்தி முறைகள்
மாணிக்கத்தை உலையிலிட்டு ஊதிச் சூடேற்றி வெள்ளாட்டுப் பாலில் ஆறுமுறை தோய்த்தெடுக்க சுத்தியாகும்.

நாகச் செந்தூரம் சுத்தி முறைகள்
இலுப்பை நெய்யில் சுத்தி செய்த நாகத்தை புதுச்சட்டியிலிட்டு உருக்கி, சீதாச்செங்கழு நீர்ப்பூண்டு இட்டு, அயக்கரண்டியால் நான்கு சாமம் கிண்டினால் நாகம் மாண்டபோகும். பிறகு சீதாச் செங்கழுநீர்ச்சாறு விட்டு அரைத்து கனமான வில்லைசெய்து காயவைத்து ஓட்டிலிட்டு மேலோடு கொண்டு மூடி, வலுவாய்ச் சீலைசெய்து கஜபுடமிட்டெடுத்து, திரும்பப்பொற்றலைச்சாறு விட்டரைத்து மூன்று முறை புடமிட்டெடுக்க, நாகம் செந்தூரமாகும். இச்செந்தூரம் மஞ்சள் நிறச் சிவப்பாய் இருக்கும்.

கோமேதகச் சுத்தி முறைகள்
கோமேதகத்தைக் குதிரை நீரில் மூன்று நாட்கள் ஊறவைத்துப் பிறகு நிலக்குமிழ் இலைச்சாற்றில் ஒருநாள் ஊறவைத்து எடுக்க சுத்தியாகும்.

இரச சுத்தி
ஒரு பலம் (35 கிராம்) இரசத்தை, செங்கல் மரத்தூளிலும் மஞ்சள்பொடியிலம் ஒவ்வொரு மணி நேரம் ஆட்டி சுத்த நீரில் அலம்பி ஒரு படி (1.3லிட்) மேனிச் சாற்றிலிட்டு அடுப்பேற்றி சாறு சுண்டும்படி எடுக்கில் சுத்தியாகும்.

காக்கை குளிகை
காக்கையின் வாயில் நாலு கழஞ்சு சூதம் ( இரசம்) விடவேண்டும். புது மண்பானை ஒன்றில் குறுணிகள் ஊற்றிக்கொள்ள வேண்டும். கள் ஊற்றிய புதுப்பானைக்குள் வாயில் சாதம் இட்ட காக்கையை வைத்து சீலை மண்செய்து மூடி ஆறுமாதங்கள் வெயிலில் வைத்து எடுக்க சூதம் குளிகையாய் வழியும். ஆறுபலம் ஈயத்தை உருக்கி அதில் இக்குளிகையை இடநீர்ச்சத்து உறிஞ்சப்பட்டு குளிகையாகும்.

இக்குளிகையை வாயிலிட ஆகாயத்தில் பறப்பதுபோன்ற உணர்வு தோன்றும். இதற்கு கல்மண் ஆகியவையும் உருகி ஓடும்.

இத்துடன் ஆணக்கின் வேர், சிறுதும்பை வேர் இவற்றைப் பொடி செய்து வைத்துக்கொண்டு தாமிரம உருகும்போது போட்டுக்கிண்டி எருமைச் சாணியில் சாய்க்க வேண்டும்.

நுணுக்கம் அறிந்து விந்து எனப்படும் இரசத்தை எவன் இறுக்கிக் கட்டுகிறானோ அவனைச் சிவன் வந்து எடுத்தனைப்பார். சக்தி என் மகனே என்ற கூறிசேர்ந்ததெடுத்துத்தம்மவர்களுடன் இருத்து வாள் என்கிறார் சித்தர்.

சீதக்கட்டியினை அறிந்தவன் அனைத்து சித்திகளும் கைவரப்பெறுவான். ஆதலால் இறைவனோடு ஒன்றிக்கலத்தல் என்ற சித்தியின் முக்தி நிலை அடைதல் அவனுக்கு கைவடிவிடும்.

எந்த முறையிலாவது சூதத்தை இறுக்கி கட்டினவன் தேவனாவான். சூதக்கட்டினை அறிந்தவனுக்குத் துத்த நாகம் வெள்ளியாகும். காரீயமும் வெள்ளீயமும் செம்பாக மாறும். இத்தகு உலோகங்களை அறுபத்து நான்கு பாஷாணச் சரக்குகளாலும் புகைந்து போகாமல் கட்டியவன் படைப்பு கடவுளை பிரம்மனுக்கு சமமானவனாவான்.

கொடிவேலி
ஒரு பீங்கான் கிண்ணத்தில் சூதத்தை (இரசம்) எடுத்துக்கொண்டு அதில் கொடிவேலி சாறு ஊற்றி ஒரு சாமத்துக்கு வேப்பங் குச்சியால் மர்த்திக்க, அது வெண்ணைபோலாகும். ஒரு சட்டியில் முந்தைய கொடிவேலிச்சாறுவிட்டு வெண்ணெய்போலுள்ள அதனையும் உடன்சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும்.

கொடிவேலி சித்திரமூலம் என்றும் அழைக்கப்பெறும. இதில் செங்கொடி வேலி என்ற வகை காயகற்பமூலிகையாக பயன் படுத்தப்பெறும். தண்டு சிவப்பாயிருக்கும் இதன் இலையைப் பறித்து கசக்கி சாறெடுத்து சாதத்திலிட்டு பிசைந்த சாப்பிட வாலிபராவார். இதன் பட்டை அல்லது தண்டினை எடுத்து சாதத்தில் போட்டுக் கிண்டி உண்டுவர நரை திரை மாறும். சடலம் பொன்னிறமாக மாறும் கற்ப கோடி காலமிருப்பர்.

யானை பலமுண்டாகும். வடகரை மலைக்கு வடகீழ் ஒரு நாழிகை தூரத்தில் வியாக்ரமுனி ஆசிரமத்துக்குப் பக்கமாயுள்ள சுனை அருகே இம்மூலிகை கிடைக்கும். கொதிக்க வைத்த அதனுடன் குறோட்டையிலை, பிண்ணாக்கிலை, சீதேவி சிற்றா முட்டி என்ற நான்கினையும் சாறு வருமாறு இடித்து சேர்த்துக் கொதிக்கவைக்க மெழுகாகும். மெழுகாகும் பருவத்தில் ஒருபண எடை அளவு காரம் இட்டு உருக்க மணியாகும்.

வெள்ளை நீர்முள்ளி
வெள்ளை நீர்முள்ளிச்சாற்றில் கால் கழஞ்சு துருசு சுண்ணத்தை விட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். பின் சுத்தித்த வெள்ளீயத்தை உருக்கி சாய்த்துக்கொண்டு மறுபடியும் உருக்கி சாய்த்துக்கொண்டு மறுபடியும் உருக்கி மேற்படி சாற்றையே சுருக்கி வெள்ளீயம் வெள்ளியாகும். மேலுமு சிவந்ததை வேளை ஊமத்தை சாறு இட்டு ஒரு இரும்புச் சட்டியில் இரசத்தை விட்டு மேற்படி சாற்றை சுருக்கிட இரசம் மணியாகும்.

வராகக் குளிகை
பன்றித் தலையினுள்ளே பத்துக்கழஞ்சு சூதத்தை விட்டு சீலை மண்செய்து மூன்று சாமம் எரித்திட குளிகையாகத் திரண்டு நிற்கும். சித்தர் நூல்களில் ரசவாதங்கள் பல கூறியிருக்கும்போது அதை அறியாதவாதிகள் உலகில் சுட்டுக்கெட்டுக்போவார். சாஸ்திரங்களை கேட்டு வாங்கி அதைப்பார்த்து அறியாமல் சுடுவார் கோடி.

உண்மையாய் சோமானங்கள் அறியாமல் சோத்துக்கு இல்லாமல் ஒரு கோடிபேர் அலைவார்கள். கோடியிலே ஒருவர் சிறந்த அறிவுடன் வாதங்களில் தேர்ச்சிபெற்று பொருளறிந்து களங்குகள், சத்து எடுக்கும்முறைகள், செந்தூரம், சுண்ணம் முதலியன செய்து கைமேல் காட்டி நிற்பார்கள்.

உண்மைப்பொருள் அறியாதவர்கள் வாதம் கூடாது என்பார்கள். இவர்கள் எவ்வளவு சுட்டாலும் உண்மைப்பொருளை அறியமாட்டார்கள்.

சவுக்காரச் சுண்ணத்தால் சகலமும் சித்தியாகும். ரசவாத வித்தை அலையாமல் செய்யலாம். எனவே சவுக்கார சுண்ணம் செய்து அதைவைத்து ரசத்தைகட்டு எல்லாம் சித்தியாகும்.

கல்லுப்பை வாங்கிவந்து சவுக்காரசுண்ணத்தை கவசகம்கட்டி புடம்போடு. அதை எத்து உருக்கி குகை பண்ணி அதில் ரச்தைவிட்டு எரிக்க செந்தூரமாகும் அதில் ரசத்தைவிட்டு எரிக்க செந்தூரமாகும். இந்த செந்தூரத்தால் ஒன்பது உலோகங்களும் பொன்னாகும் என்கிறார் சித்தர்.

இந்த செந்தூரத்தை உட்கொள்ள காயசித்தியாகும் தேகம் சிவக்கும் இதை செய்து ரசத்தை கட்டிக்கொண்டு செம்பில் கொடுக்க பல ரசவாத வேலைகள் சித்தியாகும். முக்தியும் வந்துவிடும் என்கிறார் சித்தர்பிரான்.

ரசவாதம் என்பது அவ்வளவு எளிதானதல்ல ஆனால் செய் திட்டால் சித்தியுள்ளவர்களுக்கு வெகு எளிது. இதுவே வேதத்தின் உச்சியாகும் பழகினால் ஏறுதற்கு எளிது. பழகாதவர்களுக்கு பயம் உண்டாகும்.

புத்தியுள்ள ரசவாதிகள் உண்மையான சாஸ்திரத்தை ஆராய்ந்து பார்த்து நூலின் நுணுக்கங்களை கண்டு அறிந்து குணமாகப் பொறுமையுடன் செய்வார்கள். இவர்கள் பூ நீரை எடுத்துவந்து சுருக்கமாக சுண்ணம் பண்ணி சுக்கான் கல் அறிந்து எடுத்துசெய்வார் இவர்கள் உண்மையான ரசவாதிகள்.

ரசவாத வித்தை வேதங்களில் ஐந்தாவது வேதம் ஆகும். இதை கற்றுக்கொண்டால் இறைவனைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அறிவோம். இந்த வேதம் உண்மையானது ஆகும். அட்டகர்மசித்திகளில் முதல் சித்தி வாதம் ஆகும்.

ரசவாதமானது எப்படி வரும் எனில் துரிசில் செம்பைக்கொன்று வெள்ளியில் கொடுக்க பழுத்து பொன்னாகும். இதை விற்று உண்டு உடுத்தி வாழ்ந்து துரிசை சுண்ணமாக்கி அதனால் ரசத்தைக் கட்டினால் பூமியில் நடக்காமல் ஆகாய பிரவேசம் சித்தியாகும் உலகில் உள்ளவர்களுக்கு.

வாதவித்தையை உண்மையாகச்செய்தால் மட்டுமே பலன் உண்டு. இருட்டிய அறையில் சென்று நின்று கண்ணுக்கு ஏதும் புலப்படாமல் போய் வெளியில் வெளிச்சத்துக்கு வந்த பின்பு கண்நன்றாகத் தெரிவது போன்று, காகம்போல் அலைந்தால் என்ன பலன் கற்று உணர்ந்தாலே எல்லாம் சித்தியாகும்.

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Leave A Reply