சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Share

மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும்

(தொடர்ச்சி)

வாத நோய்குணமாக

தாளகம், இரசம், வெள்ளைப்பாஷாணம், துருசு, பால்துத்தம், வெண்நாவிக்கிழங்கு, கௌரிசபாஷாணம், லிங்கம், கெந்தகம், அரிசி, திப்பிலி, வெண்காரம், மிளகு, அக்கிரகாரம், இருவி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், கெந்தகம், அன்னபேதி, சுக்கு, கடுகு ரோகிணி, இவற்றை வகைக்கு கழஞ்சி எடை வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும் இத்துடன் நேர்வாளம் இருபது கழஞ்சு எடுத்து எருமை சாணத்தில் சுத்திசெய்து அதன் மேலுள்ள ஓட்டைப்போக்கி உள்முளையையும் நீக்கிவிட்டு பசுவின் பாலில் அவித்து எடுத்து முன்னர் எடுத்த சரக்குடன் சேர்த்து இதனை வெண்நொச்சி இலையின்சாறுவிட்டு மூன்று நாள் அரைத்து பின்னர் கரிசலைச்சாறு விட்டு மூன்று நாள் அரைக்கவும்.

அதன்பின்னர் அமுதவல்லிகொடிப்பாலில் மூன்றுநாள் அரைக்கவும் அடுத்து ஆட்டுப்பாலில் மூன்று நாட்கள் அரைத்து எடுத்துக்கொள்ளவும். கைகளில் ஆமணக்கெண்ணெய் பூசிக் கொண்டு சிறு பயறு போல மாத்திரைகளைச் உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த மாத்திரையை பூசைசெய்தவிட்டு தும்பை ரசத்துடன் சேர்த்துக் கொடுத்தால் கடினமான வாத நோய்களெல்லாம் குணமாகும். இந்த மாத்திரை மாகக் கோடா சூரிமாத்திரையாகும்.

மேற்படி மாத்திரையினை வாழைப்பழம் முசுட்டைச்சாறு, பால், சர்க்கரை இவைகளில் வாதநோய்களுடன் பித்த நோய்களும் குணமாகும். இந்த மாத்திரையை வெந்நீரில் சேர்த்துக்கொடுத்தால் சிலேத்தும நோய்கள் அகலும் நத்தை சூரி ரசத்துடன் கொடுத்தால் வாதசுரம் அகலும்.

மாகக்கோடா சூரி மாத்திரையை முசுட்டை சாறினால் கொடுத்தால் பித்த சுரம் குணமாகும். ஆடாதோடை சாற்றில் கொடுத்தால் சேத்தும சுரம் குணமாகும். தாய்ப்பாலில் சேர்த்துக் கொடுத்தால் பித்த சுரம் குணமாகும். உள்ளி ரசத்துடன் சேர்த்து கொடுத்தால் வாதசுரம் குணமாகும்.

இந்த மாத்திரையை நுணாச்சாற்றில் அனுபானங்கொள்ள பித்தசன்னி அகலும், பூசனிக்காய் நீருடன் சேர்த்துக்கொடுத்தால் சேத்தும சன்னி அகலும் துவரை ரசத்துடன் சேர்த்துக்கொடுத்தால் வெறிசன்னி அகலும் வேம்பு ரசத்துடன் சேர்த்துக்கொடுத்தால் தாகசன்னி அகலும்.

இந்த மாத்திரையை முலைப்பாலில் சேர்த்துக்கொடுத்தால் பல்லைக்கிட்டும் குளிர்கன்னி குணமாகும். மோர் தயிர் இதில் சேர்த்துக்கொடுக்க குன்ம நோய் குணமாகும். முருங்கைப் பட்டையை புட்டவியல் செய்து அதைப்பிழிந்தெடுத்து நீரில் இதனை சேர்த்துக்கொடுத்தால் வாத குன்மம் குணமாகும். புளி புகை நீக்கிடவும்.

இந்த மாத்திரையை உருமிக்கல்லில் தண்ணீர்விட்டு ஆற்றி வடித் தெடுத்த நீரில் சேர்த்துக்கொடுக்க குன்மம் குணமாகும். வேளைச் சாற்றில் சேர்த்துக்கொடுக்க குன்ம நோய் குணமாகும். பசலைச் சாற்றில் சேர்த்துக் கொடுக்க எரிகுன்மம் குணமாகும்.

இந்த மாத்திரையை மாவிலிங்கம்பட்டை சாறில் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுநோய்கள் நீங்கும்.

இந்த மாத்திரையை கரு நொச்சிஇலை சாற்றில் கலந்துகொடுத்தால் கவுசை கரைந்து போகும். தகரவிரையை அரைத்து வென்னீரில் பிசைந்தெடுத்த நீரில் அனுபானங்கொண்டு மேலும் பூசிவிட கவுசை நீக்கும். புளி, புகை, உப்பு பத்தியமாகும்.

மாகன் கோடா சூரிமாத்திரையினால் மேலும் பலநோய்கள் குணமாகும். கார்போக அரிசியை இடித்து அனுபானங்கொள்ள பக்க சூலை குணமாகும்.

இந்த மாத்திரையை பாகல் இலையின் சாறில் சேர்த்துக்கொடுக்க கருப்பை சூலை குணமாகும். சிறுகீரையும் கோடகசாலையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து அதில் சேர்த்துக்கொடுத்தால் கெற்ப விப்புருதி நோய் குணமாகும்.

இந்த மாத்திரையை மஞ்சள் மரமஞ்சள் சாற்றில் கலந்து கொடுக்க அடி வயிறு கவுசை நீங்கிவிடும். பாகல் இலைச்சாறில் இதனை சேர்த்துக்கொடுத்தால் வெப்பு நோய் நீங்கும்.

இந்த மாத்திரையை சந்தனம் இழைத்த நீரில் சேர்த்துக் கொடுத்தால் செரியாத குணம் நீங்கும்.

இந்த மாத்திரையை பொன்னாங்காணிசாற்றில் கலந்து சாப்பிட்டால் முதுகுத்தண்டில் வரும் பிளவை நோய் குணமாகும்.

தேக்கு ஊமத்தை இரசத்தில் இந்த மாத்திரையை கரைத்து மேல் பிளவையின் மேல் பூசினால் பிளவை உலர்ந்து நலமாகும். தயிரில் மாத்திரையை இழைத்து கிழ்ப்பிளவையில் பூசினால் நலமாகம். அவுரிச்சாற்றில் பூசினால் இரத்தப்பிளவை குணமாகும்.

ஓமத்தை சூரணமாக்கி இந்த மாத்திரையை தூளாக்கி போட்டு தினம் இருவேளை சாப்பிட்டு அத்துடன் கவிழ்தும்பை சாறும் எருக்கம் பாலும் ஆட்டின்சிறு நீரிலும் இந்த மாத்திரையை தூளாக்கி கரைத்து மேலே பூசினால் வெடி மேகம் பூரண குணமாகும்.

எருமையின் சிறுநீரில் இந்த மாத்திரையை கரைத்து காதில் பிழிந்துவிட்டால் காது எழுச்சி குணமாகும்.

மாகக்கோடா சூரி மாத்திரையை கீழக்காய் நெல்லிச்சாற்றில் கலந்து காதில் பிழிந்துவிட்டால் காதிலுள்ள புழு அகன்றுவிடும்.

சங்கிலை சாறுடன் இந்த மாத்திரையைக் கலந்து காதில்விட்டால் காதுவலி குணமாகும்.

கருவேலம்பட்டைச்சாறுடன் இந்த மாத்திரையை கரைத்து காதின்மேல் பற்றுபோடவும்.

இந்த மாத்திரையை வெள்ளாட்டு நெய்யில் கலந்து உள்நாக்கினல் தடவினால் உள்நாக்கு சுருங்கும். இந்த மாத்திரையில் மனோசிலை, எருக்கபால் விட்டரைத்து மெல்லியதுணியில் பரவலாக பூசி திரியாகச் செய்து உள்நாக்கில் திரியை கொளுத்தி அதன் புகையை காட்ட உள்நாக்கு சுருங்கி இருமல் தணியும்.

இந்த மாத்திரையை ஆடா தோடைச் சாற்றில் கரைத்துக்குடித்தால் சிலந்திப் புண் உடைந்து நலமாகும்.

இந்த மாத்திரையை சங்கம்பழம் சாற்றில் அரைத்து புண்ணில்இட புண்ணாகாது பொரிந்து ஆறிவிடும். கோழியின் மலத்தை எடுத்து சுட்டு அதில் பொன்னுமத்தஞ்சாறு விட்டு இந்த மாத்திரையை கலந்து குமரகண்ட வலிப்புக்கு கண்ணில் கலிங்கமிட்டால் நோய் குணமாகும்.

இந்த மாத்திரையை செம்பருத்திய பாலிலும் தாய்ப்பாலிலும் சேர்த்து நசியமாக பிழிந்துவிட்டால் வலிப்பு குணமாகும்.

இந்த மாத்திரையில் ஏழு எடுத்து காடியுடன் கலந்துகொடுத்தால் ஆண்களுக்கு பெண்களால் வைக்கப்படும் மருத்தீடு மலத்தின் வழியாக வெளிவந்துவிடும். சுட்ட கடுக்காயின் தூளில் பத்து மாத்திரை பத்து உப்பு, பத்து மிளகு ஆகியவைகளை ஒன்றாக்கி பசுவின் நெய்விட்டு அரைத்தெடுத்து புண்ணில் போட்டால் ஆண்களுக்கு உண்டாகும் சிலந்தி நோய் குணமாகும்.

மாகக்கோடா சூரிமாத்திரையை செருப்படையின் சாற்றில் கலந்து உள்ளுக்கு கொடுத்து மேனிச்சாற்றில் இந்த மாத்திரையை மேலுக்கு பூசினால் மண்டைக் கரப்பான் குணமாகும். பிரண்டைச் சாற்றுடன் இந்த மாத்திரையை இழைத்து பூசினால் பல்விருத்தி குணமாகும். நாரத்தம்பழச்சாற்றில் கலந்து நசியமிட ஒற்றைத் தலைவலி குணமாகும்.

இந்த மாத்திரையை கரிசாலைச்சாற்றில் கலந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டுவர கருங்குஷ்ட நோய் நலமாகும். கோழி மலத்தைச் சுட்டு அதில் பத்து மாத்திரைகள் சேர்த்து பொன்னூமத் தந்சாற்றில் அரைத்து சிமிளில் வைத்து கலக்கமிட பேய்பிசாசு ஓடிப்போகும். இந்த மாத்திரையை தாய்ப்பால் செம்பருத்திப் பாலிலும் சேர்த்து இழைத்து கண்ணிலிட்டால் நலமாகும்.

இந்த மாத்திரை நோய்களை மட்டுமின்றி பாம்பின் விஷத்தையும் முறிக்கும் ஆற்றல் உள்ளதாகும். பாம்பு தீண்டினால் விழுதி இலையையும் வேரையும் சேர்த்து அரைத்து கடிவாயில் பூசி இந்த மாத்திரையை சாப்பிட்டால் விஷம் நீங்கிவிடும்.

கட்டு விரியன்பாம்பு கடித்துவிட்டால் விஷம் நீங்கிவிடும். கட்டு விரியன் பாம்பு கடித்துவிட்டால் உடனே இந்த மாத்திரையை செருப்படை சாற்றிலிழைத்து உள்ளுக்கு கொடுத்து ஊமத்தை சாற்றில் மாத்திரையை இழைத்து கடியின்மேல் பூசினால் விஷம் நீங்கிவிடும்.

அதுமட்டுமின்றி பெருவிரியன் பாம்பு தீண்டிவிட்டால் செருப்படைசாறில் இந்த மாத்திரையை இழைத்து உள்ளுக்கு கொடுத்து கடிவாயில் பூசினால் உடனே விஷம் இறங்கிவிடும் இரத்த மண்ணெலி தீண்டினால் உடனே விழுதி இலைச்சாற்றில் இந்த மாத்திரையை இழைத்து உள்ளுக்கு கொடுத்து அதனை கடிவாயில் பூசினால் கடுமையான விஷம் இறங்கிவிடும்.

மாகக்கோடா சூரி மாத்திரையை எருக்கம் சாற்றில் இழைத்துக் கொள்ள சுருட்டைப்பாம்பு கடித்தவிஷம் நீங்கும்.

இந்த மாத்திரையை எலுமிச்சம்பழச்சாற்றில் சேர்த்துக்கொள்ள மூன்றாம் நாள் முறைக்காய்ச்சல் தீரும் இஞ்சிச் சாற்றில் இந்த மாதத்திரையை இழைத்து நாளாவது நாள் கொடுத்தால் முறைக்காய்ச்சல் நடுக்கம் நீங்கும்.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Leave A Reply