சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Share

மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும்

(தொடர்ச்சி)

குன்மம் நோய் நீங்க

வெள்ளறுக்கு, எருக்கம் பூ இவ்விரண்டிலும் வகைக்கு இருபது பலம் எடுத்துக்கொண்டு முதிர்ந்த பிரண்டை இருபது பலமும் எருக்கம் பழுப்பு பத்து பலம், கல்லுப்பு இரண்டுபடி, சுத்தம்செய்த ஓமம் ஐந்து பலம் ஆக இந்த ஆறு சரக்குகளையும் உரலிலிட்டு பசைபோல இடித்துக்கொள்ள வேண்டும்.

இப்போதுஎருக்கிலையால் பதினான்கு தொன்னைகள் தைத்து பசைபோல் இடித்தெடுத்த மருந்துகளை அதனுள் கொட்டிமூடியபடி கட்டி புதிய மண்கலசத்துள்வைத்து கெசபுடம் போட்டு எடுத்து பொடியாக இடித்து பத்திரப்படுத்திக்கொள்ளவும். இந்தச் சூரணத்தில் பணவெடை எடுத்து வெண்ணொச்சி இலைசாறு நல்வேளை சாறு, கருநொச்சி இலைசாறு மேனிச்சாறு இவற்றில் இரண்டு மண்டலம் அதாவது தொண்ணூற்றாறு நாட்கள் சாப்பிட்டு வரவும்.

இம்மருந்தை சாப்பிடவதினால் வயிற்றுவலி குடைச்சல் வாய்வு மற்றும் குன்மம் எட்டும் குணமாகும். அகத்திக்கீரை, வாழைத்தண்டு, மிதிபாகற்காய், பூசணிக்காய் இறைச்சி மீன் பழைய சாதம், பால், புகை மோர் இவைகளை நீக்க வேண்டும் இச்சா பத்தியம்.

கருவேலன் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை கிழங்கு, பேரீச்சம்பழம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் இவைவகைக்கு ஒருபலம் வீதம் எடுத்து எல்லாவற்றையும் சேர்த்து இடித்து தூளாக்கி சூரணத்து கொள்ளவேண்டும். எட்டுபலம் கோதுமை பொரிமாவுடன் கலந்து எடுத்துக்கொண்டு பின்னர் எட்டுபலம் பனைவெல்லத்தை ஒரு பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி பாகுபதம் வந்ததும் சூரணித்ததை அதில் தூவி நன்றாகக் கிளறவேண்டும்.

லேகியமாகக் கிண்டும்போது பசுவின்நெய் நான்குபலம் விட்டு கிண்டி பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்ததாது புஷ்டி லேகியத்தில் எலுமிச்சங்காய் அளவுக்கு காலை மாலை இருப்பத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வர தாது புஷ்டியாகும். தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்புநோய் போன்றவைகளும் குணமாகும். சாதத்தில் நெய் வெல்லம் சேர்த்து சாப்பிடவேண்டும். புளியையும் பெண்சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில் தவிர்க்க வெட்டை

பன்றியின் நெய் இரண்டு ஆழாக்கு எடுத்து அத்துடன் இரண்டு ஆழாக்கு வெங்காயச்சாறு சேர்த்து சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி மிதமாக எரித்து மெழுகு பதம் வரும்போது சீரகம் சாதிப்பத்திரி ஏலம், வால்மிளகு, கிராம்பு, சுக்கு, கசகசா, சாதிக்காய் இவைகளில் வகைக்கு இரண்டு கழஞ்சு வீதம் எடுத்து தூளாக்கி அதனுடன் சேர்த்து சர்க்கரை பத்துபலம் செவ்வாழைப்பழம் ஐந்து உரித்துவிட்டு போட்டு அவற்றுடன் கலந்து சூரியபுடமாக வெயிலில் ஐந்து நாட்கள் வைத்து கொள்ளவேண்டும். தினம் இருவேளை ஒருபலம் வீதம் சாப்பிட்டுவர மூலம், எலும்புருக்கி மேகம், வெட்டை, போன்ற நோய்கள் குணமாகும். புளிபுகை பெண்மோகம் கூடாது. இச்சா பத்தியம்.

அமிர்த சஞ்சீவி எண்ணெய் மேற்கண்ட எண்ணற்ற நோய்களை குணமாக்கும்.

சிற்றாமணக்கு எண்ணெய், பசுவின் பால், செவ்வுளநீர், இவைகளை வகைக்கு ஒருபடி வீதம் எடுத்துக் கொண்டு மணித்தகக்காளி ஈருள்ளி வல்லாரை இவைகளின் சாறு வகைக்கு அரைபடி வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். கையாந்தகரை, மயிர்மாணிக்கம், பூவரககோவை இவைகளின் சாறு வகைக்கு கால்படி வீதம் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கடுக்காய், தான்றிக்காய், மாசிக்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு இவைகளில் வகைக்கு மூன்று பலம் வீதம் எடுத்துக்கொண்ட வசம்பு, ஏலம், கஸ்தூரி, மஞ்சள், சீரகம் இலவங்கம், சாதிக்காய், கருஞ்சீரகம் இவைவகைக்கு மூன்று விராகன் எடை வீதம் எடுத்து சுக்கு, மிளகு வகைக்கு ஒருபலம் வீதம் சேர்த்துக்கொண்டு எல்லா சரக்குகளுடன் இரண்டு பலம் பரங்கிப்பட்டை சேர்த்து பக்குவமாக வறுத்து எடுத்துக்கொண்டு ஒருபாண்டத்தில் எண்ணெய்விட்டு அடுப்பிலேற்றி மெழுகுபதம் வந்ததும் கீழே இறக்கி கணபதியின் முன்வைத்து பூஜை செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயில் வேளைக்கு காசி எடை எடுத்து தினம் இருவேளை ஒரு மண்டலம் சாப்பிட்டால் பயித்தியம், கிறுகிறுப்பு, மேகம்போன்ற நோய்கள் குணமாகும்.

மேற்கண்ட நோய்கள் மட்டுமின்றி கருப்பை ரணம் வாய்வேக்காடு, பெரும்பாடு, அஸ்திரசுரம், நீர்த்தாரைப்புண், எலும்புருக்கி, வாய்வு, பித்தம், உடலிளைப்பு, பிரமிய நோய் எட்டுவகை குணமாகும். தாது புஷ்டியாகும் பசியுண்டாகும் இந்த சஞசீ… எண்ணெய் சாப்பிடும்போது பெண் சேர்க்கை கூடாது இச்சா பத்தி.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Leave A Reply