சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Share

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர்

தொடர்ச்சி

நான் ஏகம் என்னுள் எல்லாம் உள்ளது இதற்கு மேல் ஏதும் இல்லை என்ற கருத்துடன் ஒருவா இருக்க வேண்டும் இன்ப துன்பங்களை ஒன்றாகக்கருதி நீக்கவேண்டும். மனத்தை வலிவுடையதாக்கி ‘தான்’ என்பதில் நிலைபெற்று இருப்பதே சஞ்சார சமாதியாகும்.

சஞ்சார சமாதியில் இருக்கும்போதுதான் என்பதன் உண்மை வடிவம் தோன்றும். இதை உணர்ந்து மலைபோல் உறுதியாக இருக்கவேண்டும் கற்பம் பிடர்க்கண்டத்தை அடையும் இந்நிலையில் வாசனை என்ற உலக அனுபவங்களைப் பிரித்துவிடலாம்.

கன்மம், ஆசை, மோகம் மூன்றும் சமாதியைத் தகர்ப்பவை யோகப் பயிற்சியை இவை அழிக்கும் தொடர்ந்த யோகப் பயிற்சி சரியான அறிவுக்கு வழிகாட்டும்.

யோகப் பயிற்சி இல்லையெனில் இந்திரியங்கள் சமாதிக்கு எதிராக நடக்கத்தொடங்கும் சமாதிப்பாதையை அவைமூடும்.

உண்மையான யோகி ஐம்பொறிகளையும் அடக்கியாளும் தன்மை பெற்றவர் மாயை தொடர்பான அனைத்தையும் நீக்கியவர் புறச்செயல் முறைகளை வெறுத்தவர். யோகத் தத்துவத்தில் உள்ள அனைத்து செயல்முறைகளையும் செய்பவர்.

எப்பொழுதும் சாதனையில் விருப்பம் உள்ளவர். ஆறிடங்களில் உள்ள ஆறு ஆதாரங்களையும் கண்டவரே மும்மூலயோகியாவார்.

வாசியினை யோகமாகப் பயிலுதல்வேண்டும். வாசி என்பது ஒரு செயல்பாடு இயக்கம் அதன்பண்பு அது இயங்கிக்கொண்டே இருக்கும் நிற்பதல்ல.

இந்நிலையில் மௌத்தைகடைப்பிடிக்கவேண்டும். இந்த மௌம் ஆறுநிலைகளைப் பற்றிக்கூறிய இடத்தில் விளக்கப்பட்ட மௌனமாகும்.

யோக சாதனைகளின் மூலம் பொய்யுடல் என்று கூறப்படும் இவ்வுடல் மெய்யுடல் என்பது சமாதிநிலையின் இறுதியில் ஒளி வடிவாய் விளங்கும்.

யோகப் பயிற்சி பற்றி பேசாத சித்தர்களே இல்லை எனலாம். யோகப் பயிற்சியை உடலை மட்டுமே மையமாகக்கொண்டதொரு உடற்பயிற்சியாக சித்தர்கள் போற்றவில்லை. இத்தகு உடற்பயிற்சிகளின் வழி மனதை ஒருநிலைப்படுத்தி இறுதி இலக்கான இறையின்பத்தை பெறவல்ல ஆன்மம் பயிற்சியாகவே இதனை சித்தர்கள் பயின்றனர். ஆகவே சித்தர்தம் யோகப்பயிற்சியின் குறிக்கோள் இறைமையில் கலந்து இன்புறுவதாகும்.

இவ்வகையில்தான் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரகத்தியாகாரம், தாரணைதியானம், சமாதி ஆகிய எட்டுறுப்புகளைக்கொண்ட அட்டாங்க யோகம் முதலியன பேசப்படுகின்றன.

ஆகவே யோக நெறி வழியாக இறைவனை அல்லது இறை நிலையை அடைதல் சித்தர்களது கடவுட்கொள்கையாக கொள்ளுதல் தவறாகாது.

சித்தர் சிவவாக்கியர் ஏராளமானபாடல்களில் யோக நிலைகளைப்பற்றி பேசுகிறார் நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை அன்பினால் இருந்த நீர்அருகிருந்த வல்லிரேல் அன்பர் கோயில்காணலாம் என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

இந்த யோகப் பயிற்சியில் தேர்ந்தவரென்று பெருமை பாராட்டியும் பெண்ணானசயைவிட்டு விலகாதபொய்யர்களையும் சித்தர் சிவவாக்கியர் விட்டுவைக்கவில்லை கடுமையாகச் சாடியுள்ளார்.

வாசியோகத்தை பயில்வதால் பல்வேறு நன்மைகள் சித்திக்கும். யோகத்தடையாக நின்றகோழை நீர்வெளியேறும். சுழியாகநின்ற சுழுமுனை திறந்து கபாலத்தில் சோதிகாணும்.

இந்த யோகத்தை பனிரெண்டு ஆண்டுகள் தவறில்லாமல் செய்து தவம்புரியவேண்டும். இதில் பனிரெண்டுக்குள்ளே ஒருபொருள் இருக்கிறது. அவரவர் பிறவியில் அடையும் பெரும் லாபமாக புண்ணியத்தை சேர்க்கும் ஒவ்வொருவர் புண்ணியத்துக்கு ஏற்றவாறுதான் இந்த வாசியோகம் கிடைக்கும்.

இந்த வாசியோகம் புண்ணிய பிறவிகளுக்கு மிகவும் எளிதாகவும் மற்றவர்க்கு மிகக்கடினமாகவும் ஆகும். இதனை கைவிடாது பயின்று வாசியை ஊடுருவி செலுத்த வல்லவர்கள் சிற்பரமாக நின்ற பிரமத்தை காண்பார்கள்.

யோகத்தின் முடிவு சிவதரிசனமாகும் அதன் நேரடி சாட்சியாக கண்புருவத்தின் இடையில் நடுவாக நின்று வாசி அங்கேயே உயிராக ஆடிக்கொண்டிருக்கும்.

இந்த வாசி யோகத்தை கடைப்பிடித்து சமாதிநிலை கண்டவர்க்கு இதற்குமேலே தானாக ஞானம் பூத்துமோனத்தை நோக்கி சும்மா இருக்கும் சுகம் கிடைக்கும்.

அந்த ஞானப் பொருளை நோக்கியபடி புருவத்தை நெறித்து விட்டு இமையின் மத்தியை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அங்கிருந்து வாசி சாண் அளவு உச்சி மேலேறி தலை உச்சியில் இருக்கும் கோழையை இளகவைத்து எமனை வெளித்தள்ளும்பின் சோதி விளங்கும் கபால மத்தியில் அண்ணாக்கில் நேர்வந்து சேரும்.

அதுபோல் இவ்வாசியானது உடம்பினுள்ளும் தம்மம் என்ற தூண்போல் உண்ணாக்கிலிருந்து மூலாதாரம் வரை நேராக ஓடிக் கொண்டிருக்கும். நாக்கிலிருந்து வரும் மந்திரம் சொற்களைவிட்டு உண்ணாக்கு வழிவரும் சொல்லால் ஏற்றி அண்ணாக்கு உச்சிக்கு வாசியை செலுத்து என்கிறார் சித்தர்.

வாசியோகத்தில் அண்ணாக்கு உச்சியே நடுவாசல் அதுதான் பத்தாம்வாசல் அதிலே ஊடுருவி செல்லவாசி மூலத்தண்டிலிருந்து உண்ணாக்கின் வழிமேலேறி அண்ணாக்கில் சென்று சேரவேண்டும்.

அதன்பின்புறத்தில் வாசி வந்தால் அது பரிபோல் பாய்ந்து பரதேசம் சேர்ந்திடும். அதுதான் மத்தியான காகிசேத்திரம். அங்கு தான் பரபரையான வாலை வாசியிலே காலூன்றி நின்று ஆடிடுவாள்.

மூச்சானது அங்கேயே சுற்றிச்சுழன்று கொண்டிருக்கும். இதுவே பரம்பொருளின் இரகசியம் ஆகும்.

அந்த பரம்பொருளை அடையவாசியிலேயே காலூன்றி கைவிடாது அந்த பத்தாம்வாசல் வழியே செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். இதுவே மூலப்பொருளை சேரும் மார்க்கம்.

அதன் கண் நடு நாடியாகவும் வாசி நின்று நடனம் செய்யும். இது ஈசன் ஆடும் திருக்கூத்து அதனைக் கண்டவர்க்கு ஆனநதக் கூத்து.

வாசியோகத்திற்கு உடல் வலிமைதான் முக்கியம். உடல் வலிமையாக இருந்தால்தான் சாதனை செய்யமுடியும். வாசியானது வெளியே போகுமேயன்றி மேலே ஏறாது. மட்பாண்டம் கீழே விழுந்துஉடைந்து போனால் ஒன்றுக்கும் உதவாது.

எனவே அரிதான பிறவியில் வாசியை அறிந்தவர்தான் உடல் உயிர் அறிவு என்பதை தானே அறிந்துகொள்வர்.

மனம் இல்லாது போனால் உடல் உயிர் அறிவு எனும் இவைகளால் என்ன செய்ய இயலும் மனதை இறைவனிடம் செலுத்தாது இருந்தால் குருவால் என்ன உணர்ந்தமுடியும்?

சடங்குகள் பலவும் மக்களது அறியாமையை வளர்த்ததோடு சமயத்தின் பெயரால் சிலர் மக்களை சுரண்டவும் ஏமாற்றவும் வழிவகுத்துவிட்டன. இந்நிலையில்தான சித்தர்கள் இச்சடங்கு களையும் சடங்குகளுக்கு காரணமான சாத்திரங்களையும் கண்டித்துப் பாடத்துணிந்தனர்.

யோகப் பயிற்சியாலோ பிறநெறிகளாலோ நமக்குள்ளேயே இறைவனை உணராதநிலையில் சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும் சேமமாக ஓதினும் இறைவனை அறிய முடியா தென்று சித்தர் கூறுகின்றார்.

சித்தர் நெறி என்பது அடிப்படையில் யோக நெறியாகும். கால் பிடித்து கருவின் நிலையறிந்து மூலக்கனலெழுப்பி மணிமருந்து மந்திரங்களின் துணைகொண்டு மதிய முதமுண்டு நல்லுடம்பு பெற்றோரெ சித்தர்கள்.

வாசிஎனப்படும் மூச்சினை உள்ளே அடக்கி மனத்தையோக சக்தியால் ஒருமுகப்படுத்தி வயப்படுத்தி உடம்பில் உள்ள மூலா தாரம் கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலை உச்சி ஆகிய ஆறு இடங்களிலும் நிலை பெறுமாறு செய்து குண்டலினியை எழுப்பி பல வகையான யோக அனுபவங்களில் வெற்றிகண்டு அதற்கு அப்பால்உள்ள எல்லாவிதமான மூலப் பெருளில் நிலைபெறுதலை யோக சித்தி என்பர்.

சித்தர்தம் யோகப் பயிற்சியின் குறிக்கோள் இறைமையில் கலந்து இன்புறுவதாகும். நம் உடலின் மூலத்தானத்தில் உறங்கிக் கொண்டிருக்கு குண்டலினி சக்தியை வீறுகொண்டெழச்செய்து பூரணத்தில் கலக்கச்செய்வதே யோகப்பயிற்சியின் குறிக்கோள்.

சித்தர்கள் சமுதாயத்தில் நிலவிய சாதிப்பாகுபாடுகளை கண்டித்ததோடு அவை வளவதற்கும் வேரூன்றுவதற்கும் துணையாக இருக்கின்ற சாத்திரங்களையும் சடங்குகளையும் கூடக்கண்டித்தனர்.

சாதியினால் தீமையேயன்றி அணுவளவும் நன்மை இல்லை. ஆதல்போல சாத்திரத்தாலும் சடங்குகளாலும் கூட நன்மை இல்லை என்பது சித்தர்கள் கருத்தாகும்.

பல்வேறு விதமான சடங்குகளையும் அவற்றுக்கு அடிப்படையாக அமைகின்ற சாத்திரங்களையும் மறுத்தும் எள்ளி நகையாடியும் பாடியவர்களில் சிலவாக்கியின் முன்னோடியாக விளங்குகிறார்.

பல்வேறு சமயச்சடங்குகள் நிகழவதற்கு களமாக அமைகின்ற கோயிலையும் குளத்தையுமே அவர் சாடத்துணிகிறார்.

மனத்தூய்மையும் உடல் தூய்மையும் இன்றி செய்யப்படும் வழிபாட்டுச் சடங்குகளால் நன்மையேதும் இல்லையென்று அவர் கருதுவது வெளிப்படையாகும்.

பக்தர்கள் கூடி ஆரவாரமாக தேர் இழுத்தல், காலை மாலை நீரில் மூழ்குதல் குடுமியும் கோவணமம் தரித்தல், குண்டலங்கள் பூண்ட குளங்களில் மூழ்குதல் தண்ணீரில் பல்வகை சடங்குகள் செய்தல், சட்டையும் பட்டையும் இட்டு மணிகள் துலக்குதல் முதலிய பல்வகை சமய வழிபாட்டுச்சடங்குகளில் சிவவாக்கியரால் நகையாடப்படுகின்றன.

புறச்சடங்குகள் செய்தவன் போலித் தன்மையை சிவவாக்கியர் கண்டிக்கிறார் இதயத்துக்குள்ளே இறைவனைக் காண இயலாதவர்கள்தான் ஈசன் இங்கேயில்லை அங்கேயில்லை என்று அங்குமிங்கும் ஓடுகிறார்கள் என்று சித்தர் பரிகாசம் செய்கிறார்.

யோக சாஸ்ரத்தின் இறுதிநிலை கடைசிப் பாடம் சமாதியாகும். தியானம் என்பது ஒன்றை நினைத்து அப்பொருளிலே மனம் நிலைத்திருப்பது அவ்வாறு பற்றிய பொருளும் மறந்து போவது சமாதி.

இதனை உரை உணர்வுகளைக்கடந்த நிலை என்றும் பிரபஞ்ச இருப்பு என்றும் ஸ்தூல இருப்பு என்றும் கூறுவார்கள்.

அட்டாங்க யோகத்தின் இறுதிநிலை சமாதியாகும். இந்நிலையில் தான் யோகத்தின் பயனும் எண்வகைச் சித்திகளும் கைகூடுகின்றன.

உடல்பொருள் ஆவி என்ற மூன்றையும் மறந்து கல்லைப்போல மண்ணைப்போல கிடப்பதுசமாதி. சித்தர்க்ள பலமுறை சமாதிக்குள் இருப்பர் எனபோகர் தம் சத்தகாண்டம் நூலில் கூறியுள்ளார்.

சமாதிநிலையில் ஸ்தூலமாகிய உடம்பு இருக்கிறது. சூட்சும மாகிய ஆன்மா பிரபஞ்சத்தோடு கலந்து இருக்கிறது இதுவே பரநிலை பரஇன்பம் பரம்மானந்தம் பேரின்பம் என்று கூறப்படுகிறது.

பலவகையான சாத்தியர் கூறுகளும் சகிப்புத்தன்மையும் பூர்வபுண்ணியபலமும் குருவருளும் ஒருங்கே சேர்கின்றபோது சாதகன் வளர்ந்து தியானத்தில் சமாதி நிலையை சந்திக்கிறான். இதுவே இதன் இறுதி.

இந்த நிலையை அடைந்தவனுக்கு மோகங்கள் இல்லை. இவ் பார்ப்பதெல்லாம் பரமார்த்தமாகவே இருக்கும்.

சமாதிவயப்பட்டவன் உயிரோடு இருக்கும்போதே எங்குமாய் இருக்கிறான் எல்லாம் அறிந்தவனாக எல்லாவற்றையும் கண்டு கொண்டவனாக எல்லாரையும் தரிசிசத்தவனாக இருக்கிறான்.

சமாதி எனும் பிரம்மானந்தத்தை ஒருமுறை சுகித்துவிட்டால் போதும் அவன் எண்ணிய போதெல்லர் இந்தச்சுகம் அவனுக்கு வரும் இந்த பிரம்மானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்தவனுக்கு லௌகிகசுகங்கள் துச்சமாகிவிடுகின்றன. மேலும் மேலும் அப்பேரின்பத்தையே மனம்நாடும். இதுவே ஏகாந்தம் அதில் திளைத்துக் கிடப்பதே சமாதி இந்தச் சாதகன் விரும்பும்போது முக்தி அடைவான் அது அவன் ஆன்மவிடுதலை.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Leave A Reply