சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Share

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர்

தொடர்ச்சி

சமாதிவரை செல்லுகின்ற நுட்பமான யோகப்பாடங்களை யாரும் யாருக்கும் எளிதில் கற்பிக்க மாட்டார்கள் கற்பவனின் தகுதி, வளர்ச்சி, தாங்குந்தன்மை இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சரியான முதிர்ச்சியை எதிர்பார்த்து இருப்பார்கள்.

ஆதலால் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் கூறுவார்கள்.

குருவருளால் ஞான சாதகத்தை அறிந்து சமாதி வயப்படுவீர் களானால் பரம்பொருள் விளங்கும்.

சமாதி வயப்பட்டவன் திருவும் தெளிவும் ஆனவன். இவனது உயிர் மருவிலே இருந்து வரும் நறுமணத்தைப்போல விளங்கும். நறுமணத்திற்கு உருவம் இல்லை எனினும் நுகர்ச்சி விளங்கவது போல விளங்கும்.

பல ஜனனங்களில் செய்த கர்மவினைகள் எஞ்சி நின்றாலும் அவை சூரியன் வரவால் இருள்மறைவதுபோல மறையும்.

பதி என்பது உடம்பு பசு என்பது ஆன்மா பாசம் என்பது வினைகள் பதியானது என்று உடம்பு நலம்பெற்றதையும் அற்றது பசுபாசம் என்று ஆன்மாவைத்தளைத்த வினைகள் தொலைந்ததையும் சித்தர் சிவவாக்கியர் கூறுகிறார்.

காற்றில் வைத்த தீயைக் காற்றுவந்து உசுப்பியதுபோல பிராணாயாமம் வினைகளைள எரித்தது காட்டுத் தீ விறகை எரிக்கும் வாசித்தீ வினையை எரிக்கும். இதனால் யோக சமாதியில் நிலைத்தவனது கர்ம பந்தங்கள் முற்றும் தொலைந்து போகின்றன.

மனதைப்பற்றியிருந்த லோகாயுத இச்சைகளைப்பற்றி மனப்பதிவுகள் அழிந்துபோகின்றன. ஆன்மா நிஷ்களங்கமானதாக ஆகிறது. எனவே பிராணாயாமங்கள் இத்தனை உயரிய பிரம்ம சமாதியை கொடுத்து பயன் தந்தது எனலாம் பிரம்மத்தில் நிலைத்த மனமுடையவன் சத்தாகிய ஆத்மாகவே இருப்பான் வேறொன்றையும் காணமாட்டான்.

சமாதியின் இருப்பில்தான் என்பது மறந்துபோகும் எதைப் பற்றியும் நிற்காமல் பிரபஞ்சம் முழுவதையும் பற்றி இருக்கும் மூலபிரகிருதியின் இருப்போடு அவனும் தன்னை மறந்து இருப்பான். ஞானத்தை கற்றதாலேயே குருவின் பாதகமலங்கள் ஈட்டிவைத்தசெல்வம் இது. இந்த ஈட்டத்துக்காகவும் பேரின்பத்திற் காகவும் யோகி தன்னை மறந்து பிரம்மானந்தத்திலே லயமாகி நிற்கிறான்.

மூலமான நாடியை இதப்படுத்த சமாதியால் முடியும் பிரபஞ்சம் முழுவதையும் சாதாரணமாக பார்க்கக்கூடும் சாகரம், சொப்பணம், சுழுத்தி ஆகிய மூவகை அவஸ்தைகளைக் கடந்து ஒரே மௌன நிலையானது விளங்கும்.

ஆசையும் ஆசையால் வந்த பாவங்களும் சமாதியால் நீங்கும் ஓங்காரம் எனும் மௌனத்தால் ஒன்பது வாயில்களில் பணிகள் ஓய்ந்து நிற்கும். குருதேவர் போதித்தபடி பிரம்மசமாதியில் நிலைத்து இருக்க சுத்த பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம்.

புலன் உணர்வுகளும் கொடிய வினைப்பதிவுகளும் ஆங்காரம் உள்ளிட்ட ஆசையும் மிகுந்த பாவங்களும் நீங்கும். ஒரே பற்றுக்கோடான மௌனத்தில் சமாதி வயப்பட்ட ஒன்பது வாயில் களின் பனிகள் ஓயும். குருதேவன் சொற்படி இந்த பிரம்மநிலை வாய்க்கும் என்கிறார் சித்தர்.

சமாதி வயப்பட்ட யோகிக்கு தன்னுணர்வே இல்லையாதலால் அவனுக்கு புறநினைவுகள் இருக்க நியாயமில்லை. ஆகவே அவனுக்கு காலை மாலையாகிய பொழுதுகள தெரியவாய்ப் பில்லை.

அட்டாங்க யோகத்திலும் அதில் எட்டாவது நிலையான சமாதியிலும் எட்டிய அறிவைப்பெற்று இருப்பான். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயமாகிய ஐம்புதுங்களும் அவனே ஆவான். முதன் முதலில் கருவில் தரித்தகாலம் முதலாக பிறவிதோறும் உடம்போடு கலந்த ஆத்மனை குரு என்ற அருட்புனலில் மூழ்கியவர்கள் ஆவார்கள். சமாதி நிலைவாய்த்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.

இடைகலையைச் சந்திரகலை எனலாம். இது இடது நாசி வழியாக நடக்கும் மூச்சோட்டத்தை குறிக்கும்.

பிங்கலையைச் சூரிய கலை எனலாம். இரு வலது நாசி வழியாக நடக்கும் மூச்சோட்டத்தை குறிக்கும்.

சுழிமுனையை அக்கினி எனலாம். இது இரு நாசிகளுமாகச் செல்லும் மூச்சோட்டம் ஆகும்.

மூச்சோட்டம் நிகழும்போது சரம் இவற்றுள் எதில் நடக்கின்றது என்பதை முதலில் கவனித்து அறியவேண்டும்.

சந்திரன் அமுதகலையாகும் எப்பொருளையும் விளைவிப்ப தாகும். கரியநிறம்கொண்டது ஆகும் ஸ்திரராசியும் ஆகும்.

சுழிமுனை நிலையில் சமாதியோகம் கைகூடும். மனம் உலக விவகாரங்களைவிட்டு விட்டு உள்ளே ஒடுங்கி நிற்கும்.

சரம் நாசியில் எந்தப் புழையில் ஓடுகின்றதோ அந்தப்பக்கத்தை பூரணம் என்பார்கள்.

சரம் ஓடாத பக்கத்தை ‘சூனியம்’ என்பார்கள். வலது நாசிப் புழையில் சரம் ஓடும்போது இடது பக்கம் ‘பூரணம்’ ஆகும் வலது பக்கம் ‘சூனியம்’ ஆகும்.

யோக ஞானப்பயிற்சிகளில் சித்தி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ‘வாசியோகம்’ எனும் மூச்சுப் பயிற்சியின் ஒழுங்கு முறையாகும்.

மூச்சை உள்ள« இழுப்பதும், இழுத்த மூச்சை உள்ளே அடக்கு வதும், மூச்சை வெளியே விடுவதும் என்னும் மூன்று செயல்களும் வாசியோகத்தின் முதன்மையான செயல்களாகும்.

இவற்றைக் கட்டுப்படுவத்துவதன் மூலம் மனிதர்களுக்குள்ளேயே ஒடுங்கிக்கிடக்கும் மகாசக்திகளை எல்லாம் விழித்தெழச்சசய்து வலுப்படுத்திக்கொள்ள முடியும். சித்தர்கள் காட்டிய ஞான வழி இது. இதனால் உடலும் மனமும் உயிரும் தெளிவும் வலிமையும் சக்தியும் பெற்றுப் பிரகாசிக்கின்றன.

வாசியோகம் என்னும் மூச்சோட்டமானது இவ்வாறு மனித சக்திகளை மேம்படுத்திக்கொள்வதற்கு உதவுவதுடன் வருங்கால பலாபலன்களை தெளிவாக அறிந்துகொள்ளவும் உதவுகின்றது.

இரவும் பகலும் என்று கூறுவதைப்போல மனிதன் உடலின் இருபொருளைக் கண்டறிய சூரியகலை, சந்திரகலை என்பதைக் கண்டறிந்துள்ளான்.

சூரிய கலையைப் பயன்படுத்தி வெப்பத்தால் பல காரியங்களையும் சந்திர கலையைப் பயன்படுத்தி குளுமையால் பல காரியங்களையும் தனித்து தனித்து செய்தபோது பலவேறு பாடுகள் அறியமுடிந்தது.

சூரிய கலையை பயன்படுத்திய விசுவாமித்திரரையும் சந்திர கலையை பயன்படுத்திய வசிஷ்டறையும் கூறலாம்.

விசுவாமித்திரரோ அவரின்யோக காலத்தில் பல சித்துக்களையும் யோக யாகங்களையும் செய்து முடிக்க மனம் ஒரு நிலைப்படாமல் தவித்தவாறே காயத்ரி என்னும் பஞ்ச பூதத்தைக் கட்டுப்படுத்தினார்.

தான் என்னும் உஷ்ணத்தினால் இறுதிவரையாருக்கும் தலைவணங்காமல் வாழ்ந்தார்.

வசிஷ்டிரரோ குளுமைத்தன்மையில் பிரம்மத்தை ஒருநிலைப் படுத்தி ஈரேழு லோகங்களையும் சஞ்சரித்தவண்ணம் வாழ்ந்தார்.

அதுபோலவே நாமும் உடலைக்குளுமைப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி பலநல்ல காரியங்களை செய்துமுடிக்க சந்திரகலை முழுமையாக துணை நிற்கும்.

நம்முடைய தலைப்பகுதி காற்றால் இயங்கக்கூடியது. இந்தக் காற்றால் இயங்கக்கூடிய பஞ்சபூதம், சூட்சுமபூதம் ஆகும். அதை ‘காயத்ரி’ என்று அழைக்கின்றனர்.

இது உஷ்ணத்தில் இயங்குமானால் இதற்கு செல்வம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

இது குழுமையாக இயங்குமேயானால் ‘சரஸ்வதி’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

கழுத்து முதல் நாடி வரை உள்ள பகுதிக்கு வைசியன் என்று பெயர். இந்த அழகுக்குரிய பகுதிகள் நுரையீரல் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதால் இந்தப் பகுதி ‘வைஷ்ணவி’ என்று அழைக்கப் பட்டது.

தொப்புள் முதல் இடுப்புப் பகுதிவரை உள்ள சத்திரியன் எனப்படுவது கல்லீரல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

கல்லீரல், நாபி, பித்தநீர், வாதநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். வாத நாடியையே இயக்கும் இயலபுடைய இப்பகுதியை வீரச் செயலுக்கு ஒப்பிடலாம்.

உடலை இயக்குவது மற்றம் ஆக்குவது அழிப்பது இந்தப் பகுதிக்கு உரியது ஆகும். உடலுக்கு பலநோய்களை உண்டாக்க வல்லமை படைத்த இந்தப் பகுதி உஷ்ணத்தினால் இயங்குமேயானால் உடல்பிணி என்று அழைக்கப்படும்.

இந்தப் பகுதி குளுமையில் இயங்கும் சமயம் அமைதியை கட்டிக்காக்கும் இது அக்னியில் இயக்கும்போது உடலை அதாவது கை கால் தவிர்த்து இடுப்புப் பகுதியை செயலிழக்கச்செய்துவிடும் வாத நாடியில் செயலும் சமயம் உடலை அக்னியாக்கும். இந்த வீரச் செயலுக்குத்தான் ‘சத்ரியன்’ என்று பெயரிட்டனர்.

சூத்திரன் எனப்படும் கை கால் பகுதியை மண்ணீரல் கட்டிக்காக்கிறது. இது உஷ்ணத்தில் இயங்கும்போது வீரணாகவும், குளுமையால் இயங்கும்போது மென்மைத்தன்மையும் சிலேத்தும நேரத்தில் சோர்வும், அக்னியில் செயலற்ற நிலையிலும் மண்ணீரல் இயங்கிக்கொண்டிருக்கும்.

இதன் பொருட்டே நான்கு வேதங்களும் எட்டு சாஸ்திரங்களும், பதினாறு புராணங்களும் முப்பத்திரண்டு தத்துவங்களும், அறுபத்துநான்கு கலைகளும் தொன்னூற்று ஆறு தன்மைகளும் எற்பட்டன. இது அனைத்தும் இந்த உடலின் தன்மையைப் பற்றி அமைந்தன.

பக்தி என்றால் ஒரு பொருளின்மேல் மனதை ஐக்கியப்படுத்தி, அதன் மேலேயே சிநத்தனையுடன் இருப்பது. இது ஒருநிலைப் படும் பட்சத்தில் தியானமாக உருவெடுக்கிறது.

மனிதனின் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு உண்டான வழியினை செய்முறைவாயிலாக அடைவதற்கு உண்டான நிலையே பக்தி எனப்படும். மனதை ஒருமுகப்படுத்துவற்கான கட்டுப்பாடு நியமனம் என்றும் இதைக் கூறலாம்.

பக்தி என்ற நிலையிலன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் மனதின் செயலுக்கு தியானம் என்று பெயர் மனநிலை ஐக்கியமாவதால் உடல் தன்மையை ஒருநிலைப்படுத்துவதற்கான சக்தி உண்டாகிறது. இதுவே தியானம் என்று கூறலாம்.

தியானத்தினால் மனதை ஒருநலைப்படுத்தலாம். இதனால் மனத்தெளிவு ஏற்படுகிறத. இதன் மூலம் சில மனப்பூர்வமான கட்டளைகள் நமக்கு மன அமைதியைக் கொடுக்கும்.

ஒருநிலைப்படுத்தப்பட்ட மனதினில் தன்னிச்சையான செயல்களை ஏற்படுத்தும்போது யோகம் என்கிற எதிரொலித் தன்மைகள், நமக்குள்ளே ஐக்கியமாகின்ற ஒரு அமைதிநிலையை அடைகிறது.

யோகத்தில் மனநிலையை கட்டுப்படுத்துதல் முதல் இடம், உடல் நிலையைக் கட்டுப்படுத்துதல் இரண்டாவது இடம் பெறுகிறது.

பழங்காலத்தில் யோகத்தின் மூலமாகத்தான் ஞானத்தை அடைவதற்காக யோகம் பயன்படுத்தப்பட்டது. யோகத்திலுள்ள ஒவ்வொரு பயிற்சியும் மனதையும் உடலையும் கட்டுப்படுத்துகிறது.

உடலில் இருக்கின்ற காற்றழுத்தத்திற்ன் திசையை மாற்றிக் கொண்டு தன்னுடைய தேவைக்கேற்றவாறு உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி தன்னிச்சையாக சில காரியங்களை செயல்படுத்து வதுதான் யோகநிலை.

உடலில் இரண்டுவித காற்றதுத்தத்தின் தன்மைகளினால் இரண்டு மூளைகள் இயங்குகின்றன. ஒன்றை சிறுமூறை என்றும் மற்றொன்றை பெருமூளை என்றும் அழைக்கின்றோம்.

சிறுமூளையின் தன்மை உடலைக் கட்டுப்படுத்தும். பெருமூளையின் தன்மை பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தும் இயற்கையாகக் கட்டுப்படுத்துமு தன்மைகள் ஞானநிலைக்கு வருகிறது.

நமக்கு யோகம் சித்தியாகும்போது சிறுமூறை கட்டுக்கடங்கி செயல்படுகிறது. பெருமூளை இயக்கத்தில் இயங்கும்போது இயற்கையான வாழ்வு, சோர்வில்லாத நிலை கைகூடும்.

பித்தத்தில் இயங்குவது சிறுமூளை, அதுதான் நம் உடலை இயங்குகிறது. முதுகுத்தண்டுக்குமேல் பகுதியில் இருக்கின்ற முகுளமும் அதற்கு மேலுள்ள சிறிய பகுதிதான் சிறுமூளை எனப்படும்.

பஞ்சபூதம் என்பது உடலிலுள்ள ஐந்து விதமான உடல் வளர்ப்பு ஜவ்வுகள் ஆகும். கர்ப்பத்தில் ஜனிக்கும் எந்த ஓர் உயிருக்கும் தாய் தகப்பனின் அணுக்களில் பஞ்சபூதம் என்னும் ஈரைந்து சக்திகளும் இணைந்திருக்கும்.

தாயின் சூட்சும பஞ்பூதங்கள் மூளைப்பகுதிகளான பெருமூளைப் பகுதிகளைக் கட்டிக்காத்துக்கொண்டு, கல்லீரல், எலும்பு, மஜ்ஜை, நரம்பு போன்றவற்றை வளர்த்துக்கொண்டிருக்கும்.

ஊனபூதம் எனும் பூதங்கள் பித்தம் இந்த பஞ்ச பூதங்கள் உடலிலுள்ள அவயங்களைச் செயல்படுத்துகின்றன. மஜ்ஜம், எலும்பு, ஜவ்வு, சதை, நரம்பு, தோல் போன்றவற்றை கட்டிக்காத்துக் கொண்டிருக்கும்.

பஞ்சபூதங்கள் வடிவமெடுக்கும் சமயம் கர்ப்பநீர் என்று பெயர் கொள்கிறது. வெள்ளை ஜவ்வானது உடலிலுள்ள நீர்ப்புத் தன்மையை கட்டிக்காத்துக்கொண்டிருக்கும்.

மஜ்ஜையானது உடம்பிலுள்ள சதைப்பகுதிகளை கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறது. ஜவ்வானது நரம்புகளை செம்மைப்படுத்து கின்றது. நரம்பானது மஜ்ஜை என்ற பகுதியை கவ்விக் கொண்டிருக்கும்.

இதன் செயல்களில் குளுமை உஷ்ணத்திற்கு ஏற்றவாறு இந்த பஞ்சபூதங்கள் செயலாற்றி கொண்டிருக்கும்.

யோக நிலையின்போது உபரியான கழிவுகள் மட்டுமே வெளி யேறும் வாதநாடி இயங்கும் சமயத்தில் இந்த பஞ்சபூதங்களும் ஸ்தம்பித்திருக்கும் ஆனாலும் செயல்கள் இருக்கும். அந்தச் சமயம் பெருமூளையின் தொடர்பில் செயல்படும்.

வைதீக வௌதீக நடைமுறை வாழக்கையின் தத்துவப்படி உடம்பிலுள்ள 72000 நரம்புகளும் 96 உறுப்பின் தன்மைகளும் 9 துவாரத்தின் செயல்களையும் 10 விதமான காற்றழுத்தத்தின் தன்மையையும் உடலிலுள்ள மூன்று உறுப்புகளை இயக்காமல் இயக்கிக்கொண்டிருக்கும்.

கல்லீரல் நடுவில் இருக்கும் உயிர்நாதம் என்னும் குளுமை நீரையும் சிறு மூறையில் உள்ள எல்லா வளர்ப்புத்தன்மையுள்ள, அவயங்களையும் சுத்தப்படுத்தி காற்றழுத்தத்தின் தன்மைகள் மென்மையாக குளுமையாகச் செயல்படும்போது உறுப்புகள் முழுமை சக்தியுடன் பிரகாசிக்கும்.

உடலில் உள்ள நரம்புகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பித்தநாடி, மற்றொன்று சிலேத்தும நாடி.

நாடியில் உற்பத்தியாகும் காற்று இடது பக்கமாகபோகும்போது சளி நாடியில் காற்று ஏறுகின்றது. வலது பக்கமாகப்போகும்போது பித்த நாடியில் காற்று ஏறுகின்றது.

பித்த நாடிகளில் காற்று ஏறும்போது பித்தம் உஷ்ணமாகப் பரிணமிக்கும். சளி நாடியில் காற்று ஏறும்போது அக்னியாகப் பரிணமிக்கும்.

மூன்றாவதாக வாத நாடி, இது முதுகெலும்பின் ஆரம்பப் பகுதியில் இயங்கிக்கொண்டிருப்பது.

அந்த நாடியில் அக்னிக்காற்று ஏறுமானால் 18 கணுக்களி உள்ள ஜவ்வுகளை நரம்பாக மாற்றி சிறுமூளைக்கும் பெருமூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.

இதுவே உஷ்ணக்காற்று ஏறுமானர் சிறுமூளையைத்தாக்கக் கூடும். இதனால் நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் மற்றும் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படும்.

உஷ்ணக்காற்று தாக்கும்போது சிறுமூளை விகாரமாகச் செயல்படும். அதேநேரத்தில குளுமைக்காற்று சிறுமூளையைத் தாக்கும்போது சிறுமூளையின் செயல்கள் அமைதியாக இருக்கும் மனம் என்பது அந்தநிலையில்தான் ஒருநிலைப்படும்.

யோகத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. சந்திரகலை நரம்பில் காற்றழுத்தத்தை திசைமாற்றும் தன்மையை உடையது.

சூரியகலை உடலில் நாடியில் உற்பத்தியான பித்தக்காற்றைச் செயலாக்கும்போது, மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்நேயம் ஆகிய ஆறுவிதப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இவையெல்லாம் யோகத்தின் அடிப்படையில் அழைக்கப்படுகிற அழகுச் சொற்களே தவிர ஞானமார்க்கத்திற்கு போதுமான வழியாக அமையாது.

யோகம் என்பது சிறுமூளையின் கட்டுப்பாடாகும். இயற்கை யாகவே இயங்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் பெருமூளையை இயங்கச்செய்வதே ஞானம் ஆகும்.

சந்திர கலைபயிலும் போது மனம் என்னும் சிறுமுளை கட்டுக்கடங்கி இருக்கும். அதன் செயல்கள் அனைத்தும் நுரையீரலின் கட்டுக்கடங்கி பஞ்சபூதம் என்னும் குடல் கழிவுகள் வெளியேறும்.

அதன் பிறகுதான் கல்லீரலில் மையத்தில்உள்ள தாய் நீர் எனப்படும் உயிர்நாதம் அசைவு கண்டு நாடியின் காற்றை அக்னியாக மாற்றும் அந்தக் காற்றானது வாதநாடியில் ஏறி, முதுகெலும்பின் வழியாக சிறுமூளைக்கும் பெருமூளைக்கும் இடையில் உள்ள பஞ்சபூதகுளுமைக் கழிவுகள் வெளிப்படத் துவங்கும்.

சந்திரகலையினால் தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் கர்ப்பக்கொடி என்னும் கர்ப்பப்பையில் உள்ள பஞ்சபூத நரம்புகளை சுத்தம் செய்வதன் மூலம் மாதவிடாய் முறையாக வரும்.

இதன் காரணமாக பிரசவ காலங்களில் எந்தவிதமான சோர்வுகளும் இல்லாமல் பிரசவிக்க முடியும். பிரசவத்திற்குப்பின்பு தாய்க்கு முழுமையான கழிவுகள் வெளிப்படும்.

சந்திரகலையில் ஐந்து நிலைகள் உள்ளன. ஒன்று பித்தத்தையும், சளி என்னும் நீர்ப்பையையும் பிரிக்கும் முறையாகும்.

இரண்டாவது பித்தக்காற்றையும் குளுமைக் காற்றையும் பிரிப்பதாகும். மூன்றாவது நாடியில் உள்ள காற்றை சிறுமூளைக்கும் பெருமூளைப் பகுதிகளுக்கும் ஏற்றுவதாகும்.

நான்காவது குளுமைக்காற்றையும் அக்னிக்காற்றையும் பெருமூளையில் நிறுத்தி செயல்படுத்துவதாகும்.

ஐந்தாவது பெருமூளையில் ஐக்கியமாகும் அக்கினிக்காற்றை கல்லீரலுக்கு கொண்டுவரும் செயலாகும்.

இந்த ஐந்து நிலைகளையும் கடந்து ஆறாவதாக பிரம்ம ஞானியென்னும் சமாதி நிலையில் அமர்ந்து அகண்ட ஜோதியைக் கண்டு கொண்டு இருக்கலாம். இதன் மூலாதாரங்கள் சிறுமூளைக்கும் பெருமூளைக்கும் நடுவில் உள்ள பஞ்சபூதக் கழிவுகளின் தன்மைகளுக்கேற்றவாறு செயல்படும்.

யோகத்தில் ‘கும்பகம்’ என்னும் ஒரு பகுதி உள்ளது, பெருஞ்குடலின் அடிப்பகுதியாகிய ‘நாபி’ என்னும் இடத்தில் பித்தக்காற்றை அதாவது சூரிய கலையில் நிறுத்தி அதன் வேகத்தில் சிறுமூளையை கடடுப்படுத்தி பெருமூளையைத் தொடர்புகொண்டு மாற்றான் உருவத்¬ நிறுத்தி செயல்பட்டால் எதிராளி தன்முன்னேவந்து தோன்றுவான். இட்ட கட்டளையை செய்து முடிப்பான்.

யோகிகள் தன் உடலில் உள்ள உஷ்ணக்காற்றையும் அக்னிக்காற்றையும் இணைத்து உடலுடன் பூமிமையத்தில் நிலைகொண்டு நிற்கும் சமயம் பூமியை விட்டு மேலே பறக்கத்துவங்குவர்.

உடலோடு பறவைகள் பறப்பதுபோல முழுமையான வேகத்தில் பறப்பார்கள். தனக்குத் தேவையான காரியத்தை எளிதில் சாதிப்பதற்காகத்தான் இப்படிச் செய்வார்கள். இதனால் மற்றவர்களுக்கு ஒரு பயனும் கிடையாது. சித்தர்கள் தங்கள் காரியத்தை எளிதில் செயல்படுத்த இவ்வழியை மேற் கொண்டார்கள்.

உடலை அக்னியாக்கி பெருமூளையின் அசைவினால் உடலைக்காணாமல் உயிர் அணுக்களைப் பிரித்து, காற்றைத் தொடாமல் தேவையான பொருட்களை கண்டெடக்கச் செல்லும் ஒருவினாடிக்கு 24000 மைல் வேத்தில் செல்லக்கூடியது எதையும் ஆற்றலுடன் சாதிக்கக் கூடிய சக்தி படைத்தது, ஞானிகள் நடைமுறை வாழ்க்கையில் நிகழ்வுகளைச் செயலாக்குவதற்காக தன் உடலை சந்திர கலையில் அமர்த்தி ஏகாந்தநிலையில் நிறுத்தி பித்தம் இல்லாத நிலையில் இருக்கும் அச்சமயம் பிறந்த குழந்தையின் உடல் அமைப்புடன் அவர்களது உடல் இருக்கும். அதாவது பெருமூளை மற்றும் சிறுமூளையின் செயல்கள் குழந்தையின் பெருமூளை சிறுமூளையின் செயல்களை ஒத்திருக்கும்.

இந்நிலையில் மென்மையாக பூக்களின் மகரந்தத் தன்மைபோல ஞானியின் உடலும் உள்ளமும் அமைந்திருக்கும். இது மற்றவர்களுக்கு இனிமையும் மேன்மையும் கொண்ட காட்சியாக ரசிக்கும் தன்மையை அளிக்கும்.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Leave A Reply