சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

Share

யோக சமாதி சாதனைகள்

தொடர்ச்சி

கூர்மம் என்றபெயருடைய நாடியில் ஸம்யமம் செய்யும்போது மனதை நடுங்காது நிலைத்து நிற்கச் செய்யமுடியும். கூர்மநாடியானது ஆமை வடிவில் இருக்கும் நாடியானதால் இப்பெயர்பெற்றது.

இது தொண்டைக்குழிக்கு கீழே அமைந்திருக்கிறது. இதில் ஸம்யமம் செய்து வந்தால் மனம் அசைவின்றி நிலைபெற்று சுகம் பெறலாம் மரண்தை வென்ற சித்தர்கள் இப்படி எத்தனையோ சித்து விளையாட்டுகளை உலகுக்குதந்தள்ளனர்.

மண்ணுலக வாழவின் முற்றுப்புள்ளி மரணம் எனப்படுகிறது. மரணத்தின் பின்பு மனிதநிலை பூவுலகமாந்தர் அறியமுடியாத திரைமறைவு இயக்கமாகத் தொடங்கித் தொடர்கிறது இங்குதான் கர்மவினையின் செயல்பாடு தொடங்குகிறது.

மனித சுவாசங்கள் உயி£ர் நிலைபெறுவதற்குத் துணையாக உள்ளன. இதன் இயக்கமும் சுவாசமும் நின்றுபோனால் உயிர்போய்விடகிறது உண்மையில் சுவாச நடப்பு என்பது ஒரு மந்திரத்தேர்தான். மனிதன் இந்த மந்திரத்தேராகிய சுவாசத்தை பிராணாயாமங்கள் மூலம் நெறிப்படுத்தி உயிர்வளம் பெறலாம். சுவாசத்தின் மூலம் மரணத்தை வெல்வதை மந்திரத்தேரேறி மான்வேட்டையாடு என்கின்றார் சித்தர்கள்.

குண்டலினி சக்தி மகிமையை தன்வயப்படுத்தாமல் சமாதி கை கூடுவதில்லை.

மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை இந்த யோகியர் தங்கள் தலையுச்சியிலுள்ள சஹஸ்காரத்தைச் சென்று தாக்கும்படி ஏவுவர். அப்படிச் செய்வதால் கபாலத்தில இருக்கும் ஏழாவத ஞானபூமியினின்று அமிர்ததாரை சொட்டுகிறது. தைலதாரை போன்று அது நாவுக்கு எட்டுவதால் அஃது அமிர்ததாரை என்றுசொல்லப்படுகிறது.

பசியையும் தாகத்தையும் அகற்றிவிட்டு பரமானந்தத்தை அஃது உண்டுபண்ணுகிறது. புறத்திலிருந்து உணவைப்புசித்து பசியைப் போக்கு பரமதிருப்தி அடைவதைவிட இதுமேலானது.

உறங்கும் அரூபசக்தியின் கனலாகக்கனன்று கொண்டு குண்டலினியானது மூலாதாரத்திலிருந்து மனித உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது இதனை நியமமான வாழ்க்கைமூலம், யோக சாதனைமூலம் விழித்தெழச் செய்துமேலெலுபச்செய்முடியும்.

நாகப்பாம்பின் வடிவத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி விழித்தெழுந்து சுழுமுனை நாடிமூலம் உடலின் ஒவ்வொருபோக ஆதாரஸ்தானமாகிய மையங்களின் ஊடே சென்று உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் உணர்வுகளையும் புத்துணர்வு களையும் அறிவையும் ஞானத்தையும் தரும்.

சுழுமுனையை அடக்கியாளும் திறமை பெற்றதாலேயே சித்தர்கள் எச்செயலினையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்களாகவும் ஓரிடத்தில் இருந்துகொண்டு எங்கோ ஓரிடத்தில் இருப்பவரது ஆட்டிவைக்கும் வல்லமை படைத்தவராகவும் விளங்குகிறார்கள்.

யோக சாஸ்திரத்தின்படி மானுட உடலமைப்பில் முள்ளந்தண்டிலே இடைபிங்கலை என்ற இரண்டு நரம்புக்கொடிகளும் முள்ளந்தண்டின் ஊடாகச்செல்லும் சுழுமுனை என்னும் நாளமும் இருக்கின்றன இந்த நாளத்தின் அடியில்தான் குண்டலினிக் கமலம் இருக்கிறது. அதுமுக்கோணவடிவில் இருக்கும். அங்கு குண்டலினி சக்தி வட்டமிட்டுக்கொண்டிருக்கும்.

குண்டலினி சக்தியானது விழித்து எழும்போது முதுகுத்தண்டின் ஊடாகச் செல்லும் துளைபொருந்திய சுழுமுனை என்னும் நாளத்தின் வழியே வெளியேற முயலும். படிப்படியாக அது மேலேற முயலும்போது மனதின்வேறு வேறாகிய படிகள் திறக்கப்படுகின்றன. மனதின் தளங்கள் திறக்கப்படும்போது யோகியானவன் அற்புத தரிசனங்களையும் வல்லமைகளையும் பெறுகிறான்.

மலத்துவாரத்திற்கு இரண்டு விரற்கிடையே மேலேயும் நீர்த்துறைக்கு கீழேயும் குண்டலினி பாம்புபோல சுருண்டுக் கிடக்கிறது. அவனே இறைவன் என்று அடையாளம் காட்டுகின்றார் திருமூலர்.

‘மாறா மலக்குந் தன் மேலிருவிரற்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குள்ள
கூறா உபதேசம் கொண்டது காணுமே’

உடம்புக்கு ஆதாரமான முதுகுத்தண்டின் அடிப்பாகம் அது. எல்லா நரம்புகளும் முதுக்குத்தண்டின் வழியாகவே மூளையைச் சென்று எட்டும் மோதிர வளையம்போல ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட கோவையின் நடுவே நரம்புக்கூட்டம் சென்று கழுத்துக்குப் பின்பு புறமுள்ள பிடரியின் இணைக்கப்பட்டு மூளைக்குள் செல்கின்றன.

யோக சாதனையின் பூரணத்துவமே குண்டலினியை அடையும் வழியில்தான் உள்ளது. பிரம்மச்சர்யம் கடைப்பிடிப்பதால் மட்டுமே குண்டலினியை எழுப்பமுடியும்.

மனிதச் சக்தியானது இரண்டு விதமாகச்செயல்படுகிறது. ஒன்று மேல்நோக்கிச்செயல்படும் மற்றொன்று கீழேநோக்கிச் செயல்படும் சக்தி.

கீழ் நோக்கிச் செயல்படும் சக்தியானது உடலுறவின்போது செயல்பட்டு விந்து இழப்பு ஏற்படும்போது அதோடு சேர்ந்து குண்டலினி சக்தி வெளியேறிவிடுகிறது.

பாலுணர்வுக்கு இடம் தராமல் விந்துசக்தி இறங்கும் முகமாக சிற்றின்பத்தில் கழியாமல் மேல்முகமாகச் சென்று ஓஜஸ் என்ற சித்த சக்தியாக மாறும் வழியினை யோகியானவன் காண்பதற்கு சாதகம் செய்தல் வேண்டும் ரோகத்தைத்தரும் போகத்தை தள்ளிவைத்து விட்டு பிரம்மச்சர்யம் காத்தல் வேண்டும்.

குதிரையை அடக்கும்முறையை அறிந்தால் எய்தாத மேன்மையை எய்தலாம். அடக்கும்முறை அறியாதபோது அதுவே நம்மைத்தள்ளிவிடும். எட்டாத குதிரை என்பது மூச்சுக்காற்று தானேயொழிய வேறொன்றுமில்லை. மூடிமறைத்ததை நாடித் திறக்கும் ஞானமுடையோராகிய சித்தனுக்கே காற்றைப்பு சிக்கும்கலை கைவந்துள்ளது.

‘தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின்முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவார்கள்’
என்கிறது திருமந்திரம்.

யோக நெறியில் மனிதன் தன்னையறியும் அறிவை அறிகிறான். தன்னைத்தான் அறிகின்ற அறிவை அறிந்து கொண்டபோது அவன் தன்னை மறந்துதன்னில் மூழ்கித்தன்னையே அர்ச்சித்துக் கிடக்கின்றான்.

ஞானி தன்னை மறந்தாலும் தன்னுடைய தவநிலையில் இருக்கின்றான். அப்போது அவனுக்கு தவமே தான் ஆகிறது. தானும் தவமும் வேறு வேறாக இல்லாதபோது தானே தவமும் வேறுவேறாக இல்லாதபோததானே தவமாகிறது. தவமே தானாகிறது. தன்னை மறந்த தனித்த நிலையே அந்தத்தவநிலை. இந்த நிலையில்நான் என்ற உணர்வும் அகந்தையுமிம்ல்லை.

‘மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த்தானடுக்சி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி’
என்று அழுகிணிச்சித்தர் அந்த ஞான உச்சநிலை அடையும் வழியைக் கூறுகின்றார்.

அனைத்து யோகங்களையும் தம்முன்கொண்டதாய் அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றாய் தலைமை வாய்ந்ததாக இருப்பதால் இராசயோகம் என்கிறார் சட்டைமுனி.

தீயனவற்றை விலக்கி நல்லவனவற்றை கொண்டு வாசியில் நிலைப்படுத்தி பிறசெயல்களில் கருத்தினைச் செலுத்தாது ஒப்பற்ற ஒன்றில் நிலைக்கச் செய்து எவ்வித அசைவுகளுமின்றி தானே தானாய் நின்று நிருவிகற்ப வாழ்வில் நிலைக்கச்செய்வது என்னும் இவ்வெட்டு அங்கங்களையும் கொண்டதாய் விளங்கு கின்றகாரணத்தால் இவ்யோகத்தை அட்டாங்கயோகம் என்றும் கூறுவர்.

‘அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ்ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி’ என்று குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.

அட்டாங்க யோகத்தின் இறுதிநிலைதான் சமாதியாகும். இந்நிலையில்தான் யோகத்தின் எண்வகைச்சித்திகளும் கை கூடுகின்றன. உடல், பொருள், ஆவி மூன்றையும் மறந்து கல்லைப்போல் மண்ணைப்போல கிடப்பது சமாதி. அப்படிச் சரணாகதி அடைந்த ஞானச்சித்தர் தான் வடலூர் இராமலிங்க சித்தர்.

என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று பாடியவர் வள்ளலார். வள்ளலார் கூறும்போது சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகின்றவன் சன்மார்க்கநிலையை பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்ககி என்ற வலியுறுத்துகிறார்.

இறப்பு என்பது இந்த உடலும் அதன் இயக்கத்திற்குக் காரணமான பிராணனும் தனித்தனியே பிரியும் நிகழ்வையே குறிக்கின்றது.

பஞ்ச பூதங்களின் சேர்க்கை ரகசியம் அறிந்தவள்ளலார் தமது உடம்பைப் பிரித்துக்கொண்டவர் அவரது தேகம், மண், தீ முதலிய எந்த ஒரு தனிப்பட்ட இயற்கைப்பொருட்டும் இரையாகவில்லை. ஊனுடம்பைத் தமது தகவலிமையினால் ஞான ஒளியுடமயாக மாற்றி மறைந்தார் அந்த ஞானச்சித்தர்.

திருமந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் சகமார்க்கம் ஆகிய யோகமார்க்கம் சித்தர்க்குரிய சிறந்த நேறியாக பேசப்பட்டுள்ளது.

‘யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளர்ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உளசத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே’
என்று சித்தரின் யோகமுதிர்ச்சியினைப் பேசியுள்ளார் திருமூலர்.

ஜனனமும் மரணமும் மனித வாழ்க்கையி தவிர்க்கமுடியாத சுழற்சி நிலைஎன்றபோதிலும் மரணத்தைவெல்லும் வழிகுறித்து சதா சிந்தித்துக்கொண்டு வந்தவர்கள் சித்தர்கள்.

உடல் அழிந்தால்தான் உயிர் வெளியேறும் உயிர் வெளியேறினால் தான் இன்னொரு பிறவிக்கு செல்ல முடியும் அதன் காரணமாகவே இந்த உயிரை இந்த தேகத்திலேயே சமாதி நிலையடையச் செய்ய சித்தர்கள் பல ரகசியத் திறவு கோல்களைக் கண்டறிந்தனர்.

யோகியின் லட்சியம் சமாதியே சித்தத்தை அசைவின்றி ஒரே பொருளில் நிறுத்தி விடுதல் சமாதி என்றறியப்படுகிறது.

‘ததே வார்த்த மாத்ர நீர்பாஸம் ஸ்வரூப
சூன்ய மிக ஸமாதி’ என்கிறது ஸ்ரீபதஞ்சிலி குயாக சூத்ரம்.

தியானப் பொருளில் ஞானத்தைத் தருவது சமாதி. இறைவனை தியானப்பொருளாக எடுத்துக்கொண்டவர் சமாதியில் இறைஞானத்தை அடைகின்றனர். சமாதி என்பதை அனுபவரீதியில் புரிந்துகொள்ள வேண்டும்.

‘சித்தி அடைந்துவிட்டார்’ என்று கூறும்போது யோகசமாதி அடைந்துவிட்டார். யோகசித்தி அடைந்துவிட்டார் என்றுபொருள் உண்டாகிறது.

தொடரும்

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 5

Leave A Reply