சிந்தனைக் களம் 11 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share
தகுதியான இடத்தில் இருந்து கொண்டு களவெடுத்தால் உலகத்திற்கு கள்ளனும் நல்லவன்தான்.
அதுவும் பொய் பேசியவன் வீட்டில் களவு போனால் அதுவும் உலகுக்கு பொய்யான செய்திதான்.
இதில் உண்மையை காண விளைபவர்கள் எத்தனை பேர்.
பொய் பேசுவது தவறு. அதற்காக நடந்த அநீதி எப்படி பொய்யாகும்.
தவறு செய்பவர்கள் இப்படியாக மற்றவர்களால் நம்பப்படாத மனிதர்களிடம் அல்லது இளம் சமுதாயத்திடம் அதிகம் தமது சேட்டையை காட்டுகிறார்கள்.
இதனால்தான் பலவிதமான Abuses, பொய்கள், துரோகங்கள் பிடிபடாமல் வருடக்கணக்காக தொடர்கிறது.
பட்டங்களே(label) உண்மையையும் பொய்யையும் ஆளுகிறது.
உண்மைகள் தற்காலிகமாக காலவரையறையின்றி தூங்குகிறது.
அதனால்தான் தீயவர்கள் வழர்கிறார்கள்.
உயிரை உணர்வை கொல்லும் கொலைகாரர்கள் பிடிபடாமல் தப்புகிறார்கள்.
வாய்பேசத் தெரிந்தவரின் பொய்களையே உண்மையென உலகம் நம்புகிறது.
திறமையாக பேசத் தெரியாத உண்மையுள்ளவன் அச்சத்துடன் வாழ்கிறான்.
ஆனால் பயந்து உண்மையை பேசாமல் இருப்பது தவறு.
எம்மைப்போல் அடுத்தவர் கஷ்டத்தில் வீழாமல் காப்பாற்ற பேச வேண்டியது அவசியமாகிறது.
உண்மைகள் ஒருநாள் விழித்துக் கொள்ளும்.
அதுவே சத்தியம்
அன்புள்ளங்களே!
நாடகங்களுக்கு மயங்கும் சமுதாயம்,
தனக்கு வராதவரையும் உண்மையை அறிய வேண்டும் என்ற ஆர்வமின்றி
கதை காவி, குறை பேசி நகர்ந்துவிட்டும்.
அதில் ஒருவராக நீங்கள் மாறிவிடாமல்
நல்ல பண்புடன் கருணையுடன் வாழுங்கள்.
ஏனெனில் கர்மவினை, செய் வினை ஒன்றே என்றோ ஒருநாள் தீயவர்களிடம் வட்டியுடன், செய்த கர்மாக்களுக்கு கணக்குக் காட்டிச் செல்லும்.
சிந்திக்க வேண்டிய விடையம்.
நன்றி
https://www.uthayamugam.com/home/sinthanai-kalam-12/

Leave A Reply