சிந்தனைக் களம் 16 – Bamini Rajeswaramudaliyar

Share

உலகம் என்ற நாடக மேடையில் திறமையான நடிகர்கள் பலர் எனக்கு கற்பித்த பாடங்கள் பல.

என்னை புடம் போட்டு தட்டி பதப்படுத்தி, நிமிர்த்தி, வலுமையாக்கி, தனித்துவமாக சிந்திக்கத் தூண்டி, தனிமையை இனிமையாக்கிய பல மனிதர்களுக்கு, தலைசாய்த்து நன்றி கூறுகிறேன்.

அன்று போல் இன்று நானில்லை. நின்ற இடத்தில் நின்று சொல் அம்புகளை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தன் பேச்சினால் செய்கைகளினால் தன்னை அடையளம் காட்டுபவருக்கு மனதார நன்றியும் கூறி நகர்கிறேன்.

காரணம்

தன்னை என் வாழ்வில் எங்கே வைக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக காட்டித் தருகிறார்கள்.

அதற்கு எப்படி நன்றி கூறாமல் போகமுடியும்.

அன்புள்ளங்களே!
அவர் அப்படிப் பேசினார், இவர் இப்படிப் பேசினார் என நீங்களும் முறைப்பாடு செய்வதாக எண்ணி குறைகளை பேசி உங்கள் அசுத்தப்படுத்தாதீர்கள்.

அவரவர் தமது குணங்களை காட்டுகிறார்கள். அவர்களை படியுங்கள்.

மனிதர்கள் தாம் எப்படியானவர்கள் என்ற குழுக்களை ( clues) தம்மையறாமல் தந்து கொண்டே இருக்கிறார்கள்.

நாம்தான் “ஆனால்” என்ற சொல்லுடன் அதனை அலட்சியம் செய்துவிட்டு கஷ்டத்தில் மாட்டிக் கொள்கிறோம்.
சிந்திக்கவும்!

“உங்கள் பலயீனம்,
அவர்களின் பலம்”

ஒருவர் உங்களை கோவப்படுத்த முயற்சிக்கிறார் என்றால், பிரபஞ்சம் எப்படி பொறுமையை காப்பது என்ற பாடத்தை கற்பிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அனுபவம் பேசுகிறது.
சிந்தியுங்கள்!
நன்றி!

சிந்தனைக் களம் 17 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply